Author: Thana

கனடாவில் உள்ள பண்ணைகளில் தொழிலாளர் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் காலி மற்றும் நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம், கனடாவில் வேலை பெற்றுத் தருவதற்காக தலா 13 இலட்சம் ரூபாய் வீதம் பணம் பெற்றுள்ளார். பணம் பெற்றுக் கொண்டும் உறுதியளித்தபடி வெளிநாட்டு வேலைகளை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் SLBFE இல் முறைப்பாடு செய்தனர். இதன்பேரில் செயற்பட்ட அதிகாரிகள், வரக்காபொல, அம்பகலகந்த பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது, அவரது வீட்டிலிருந்து சைப்ரஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தலா 75,000 ரூபா பெற்றுக் கொண்ட மூன்று ஒப்பந்த ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இதேவேளை, சுவிட்சர்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாகக்…

Read More

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப் பார்க்க முனைகின்றனர் என்று குறிப்பிட்டார். இந்த வகையில் புகைபிடிப்பது நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்குப் பெரிதும் வழிவகுக்கும் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்தார்.

Read More

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். இதன் காரணமாக, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய…

Read More

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சில் பட்டதாரிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து தீர்ப்பு கிடைத்த பிறகு, ஆசிரியர் சேவை அரசியலமைப்பின்படி, தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் எதிர்காலத்தில் நியமனங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Read More

தற்போதைய அல்லது எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மீண்டும் ஒருபோதும் இனவாதத்தின் மீது எழுதப்படாது – ஜனாதிபதி இனவாதத்திற்கு நாட்டில் மீண்டும் எந்த இடமில்லை என்றும், அது இறந்த கால வரலாற்றுக்குரியது என்றும், தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்லது இந்த நாட்டின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒருபோதும் இனவாதத்தின் அடிப்படையில் எழுதப்படாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் நேற்று(18) பங்கேற்று உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு: பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீது விவாதம் நடைபெறும் இந்த நேரத்தில், அந்த இரண்டு அமைச்சுக்களும் நம் நாட்டில் பல பணிகளில் முக்கிய பங்களிப்பை வழங்குவதால் சில விடயங்களை முன்வைக்க எதிர்பார்க்றேன். குறிப்பாக, நம் நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாத போக்குகள்…

Read More

கொட்டகலை தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மேஃபீல்ட் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் குழு வேலை நிறுத்தத்த ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை(16) கொளுந்து பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண் குளவி கொட்டுக்கு உள்ளானதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தோட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததே இதற்குக் காரணம் என தெரிவித்தனர். தோட்ட நிர்வாக தொழிலாளர்களுக்கு முறையான வசதிகளையும் மரியாதையையும் வழங்குவதில்லை என்றும், இதன் காரணமாக தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் நிலவுவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். மேலும், தோட்ட நிர்வாகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து கேட்டபோது, நவம்பர் 24 ஆம் திகதி ஹட்டன் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் இந்தப் பிரச்சினை குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்றும் தோட்ட நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது. எந்தவொரு பிரச்சினைக்கும் உரிய தீர்வு கிடைக்கும் வரை…

Read More

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ‘பி அறிக்கை’ மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும் என்று நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்தில் ‘பி அறிக்கை’ ஒன்றைத் தாக்கல் செய்து எனது பட்டப்படிப்பு குறித்து விசாரிக்க அனுமதி பெற்றது. அதன் பிறகு மாதக்கணக்கில் இது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. இன்று வரை நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இணையத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பப்படுகிறது. இப்போது நுகேகொட பேரணிக்குக் கடுமையாகப் பயந்துவிட்டார்கள்.…

Read More

“போதைப் பழக்கமற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளுடன் கூடிய “புனர்வாழ்வு முகாம்” 14 நாள் சமூக அடிப்படையிலான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு முகாம் வாரியபொல ஸ்ரீ சுமங்கல பிரிவேனா விகாரையில் நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் Clean Sri Lanka பொதுச் செயலாளர் அலுவலகம் என்பன இணைந்து இந்த முகாமை நடைமுறைப்படுத்தியுள்ளன. நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த முகாம் டிசம்பர் 01 ஆம் திகதி வரை நடைபெறும்.

Read More

(க.கிஷாந்தன்) இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதை அருகில் நேற்று 18ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட கனமழையால், மண் மற்றும் பெரிய கற்பாறைகள் சரிந்ததால் கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவினால் பல பெரிய பாறைகள் ரயில் என்ஜின் மீது விழுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலின் பயணிகள் பெட்டிகள் பாதுகாப்பாக ஹப்புத்தளைக்கு மாற்றப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து பாறைகளை அகற்றவும், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தவும், நானுஓயா ரயில் நிலைய மீட்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக, கொழும்பு கோட்டையில் இருந்து இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் தற்காலிகமாக நானுஓயா ரயில் நிலையத்திற்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை…

Read More

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் மூலம் ஒரு முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்படும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுப்பதற்காக உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தி, நுகர்வோருக்கும் எந்த அநீதியும் ஏற்படாத வகையில் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு, உணவுப் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்தார். இந்தப் பிரச்சினையைத்…

Read More