Author: Thana
கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டுக்கு சேதம்
நுவரெலியா மாவட்டம், திம்புலபத்தனை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. ஹட்டன் – கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (21) பிற்பகல் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் பின்புறம் இருந்த பெரிய மண்மேடு திடீரென சரிந்து வீட்டின் மீது விழுந்ததில், வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையே இந்த மண்சரிவுக்குக் காரணம் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்மேடு இடிந்து விழுந்ததால் வீட்டின் ஏனைய சுவர்களும் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால், அந்த வீட்டில் வசித்த 05 பேர் தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. எனினும், வீட்டு…
பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். மேலும், முச்சக்கர வண்டிகளின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளை பொருத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் கிரிஷாந்த அபேசேன கூறியதாவது: “பெற்றோலில் இயங்கும் பழைய முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவது மிகப்பெரிய நன்மையாகும். அந்த வண்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பதுடன், பெற்றோலுக்கான செலவும் இல்லை. இந்த முறையில் ஒரு கிலோமீற்றருக்குச் சுமார் 5 ரூபாய் மட்டுமே செலவாகும். ஒருமுறை மின்னேற்றினால் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். வாகனத்தை மின்சார முறைக்கு மாற்றுவதற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் செலவாகும்” என அவர் தெரிவித்தார். தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் ஏற்கனவே புதிய மின்சார முச்சக்கர வண்டி…
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2025-11-22 முதல் 2025-11-27 வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் விற்பனை நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் விற்பனை நிலையத்தில் இருந்த சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், வீதியின் வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு செயலமர்வு நேற்று (20) மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தலைமையில் நாரஹேன்பிட்ட மெஹெவர பியச கட்டிடத்தில் அமைந்துள்ள தொழில் அமைச்சில் நடைபெற்றது. இந்த செயலமர்வில் தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த செயலமர்வு, அவுஸ்திரேலிய உதவிக்கான சர்வதேச தேர்தல் அமைப்பு நிறுவனம் (IFES) இன் நிதி உதவியுடன் தொழில் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டது, இது அமைச்சு மற்றும் அதன் இணைப்பு நிறுவனங்களின் மக்கள் தொடர்புகளில் பணிபுரியும் பணியாளர் அதிகாரிகளை இலக்காகக் கொண்டது. அனைத்து அமைச்சுக்களையும் இலக்காகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள தொடர் செயலமர்வுகளில் முதலாவதாக நடைபெற்ற இந்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகள் வெளி உலகில் எதிர்கொள்ளும் பல்வேறு கடினமான அனுபவங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது.…
376கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களை கொண்டு வந்த ஆழ் கடல் மீன் பிடிக் கப்பல்
கடற்படை, இலங்கையின் தெற்கு ஆழ் கடலில் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது, விஷப் போதைப் பொருட்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்றைக் கொண்டு வந்த உள்நாட்டு ஆழ்கடல் மீன் பிடிக்கப்பல் ஆறு சந்தேக நபர்களுடன் கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த ஆழ் கடல் மீன் பிடிக் கப்பலுடன் சந்தேக நபர்களை நேற்று ( 2025 நவம்பர் மாதம் 20 ) தங்கல்லை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் விசேட சோதனையில், போதைப் பொருளாக சந்தேகிக்கப்படும் 261 கிலோவிற்கும் அதிகமாக ஐஸ் 18 மூடை மற்றும் 115 கிலோ ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் கையிருப்புடன், 02 ரிவால்வர் ரக மற்றும் பிஸ்டல் ரக பக்க ஆயுதங்கள், 02 வெடிமருந்து பத்திரிகைகள் மற்றும் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி ஆகியவை அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மற்றும் கடற்படைத்…
பல தசாப்தங்களாக குடியிருந்த வீட்டையும் உறையும் விட்டு வேறு இடத்திற்கு யாரால் செல்ல முடியும்? ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் இவ்வாறு துரத்தப்படுவது எப்போது நிறுத்தப்படும்? மலையகத்தை பொருத்தவரையில் சில தேயிலை தோட்டங்களை தனிப்பட்ட நபர்கள் தம் வசம் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை அடிமை போல் நடத்தும் அடக்குமுறை இன்று வரை சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். தலவாக்கலை பிரதேச செயலாளர் நிர்வாகத்தின் உட்பட்ட பிளிகண்டாமலை (C. W. Coom) கூட்டமானது தனியார் ஒருவருக்கு சொந்தமானதாக இருந்து வந்துள்ளது. பிறகு அவர் குறித்த தோட்டத்தை மேலும் சிலருக்கு பகுதிகளாக பிரித்து விற்பனை செய்து உள்ளார். அதன் அடிப்படையில் இத்தோட்டத்தில் கடந்த ஆறு தசாப்த காலமாக 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இருந்த போதிலும் இந்த மக்களுக்கு இந்த குடியிருப்புகள் சொந்தமாக வில்லை.…
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண நிகழ்ச்சி (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை: போதைப் பொருள்,குற்றச்செயல்கள் என்பவற்றுடன் பிணைந்த கருப்புப் பொருளாதாரம் எமது நாட்டில் எந்த விதத்திலும் அபிவிருத்தி,அமைதி, சுபீட்சம் என்பவற்றை கொண்டுவராது. இந்தப் பேரழிவிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் பேரழிவு கிராமங்கள்,நகரங்கள், குடும்பக்…
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து…