Author: Thana
தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் புதுப்பித்துள்ளது. நேற்று (18)மாலை 4:00 மணி முதல் இன்று (19) மாலை 4:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவித்து இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் பின்வருமாறு: பதுளை மாவட்டம்: – ஹல்துமுல்ல களுத்துறை மாவட்டம்: – மத்துகம கேகாலை மாவட்டம்: – அரநாயக்க – கேகாலை – வரக்காபொல இரத்தினபுரி மாவட்டம்: – இம்புல்பே தற்போது விழிப்புடன் இருக்க வேண்டிய மட்டத்திலுள்ள முதலாவது நில அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: பதுளை மாவட்டம் பண்டாரவளை ஹப்புத்தளை ஊவா பரணகம கந்தகெட்டிய கொழும்பு…
நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் ஜனாதிபதி
நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (18)இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது. ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பிறகு இது ஒரு விகாரையாக அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. அது ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் கட்டுமானங்கள் குறித்து ஒரு பிரச்சினை எழுந்தது. அதில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், நகர அபிவிருத்தி…
எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மொரட்டுவ பகுதியில் உள்ள பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதான ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ நீதவான் இன்று (18) உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இந்தச் சம்பவத்தை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு பிரபலமான பாடசாலையில் 14 வயது மாணவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை தொடர்பில், அந்தப் பாடசாலையின் ஆசிரியரொருவரும், சம்பவத்தை மூடிமறைத்தமை தொடர்பில் அதிபரும் அண்மையில் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் பதுரலிய மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பாதணிகளை வழங்க உள்நாட்டு பாதணி உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம்
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் தற்போது வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரின் தலைமையில்பாராளுமன்ற குழு மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது
பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ‘ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அவர் கட்டாரில் இருந்து அவர் நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் வனிந்து ஹசரங்கவுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த முத்தரப்பு தொடரில் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்) பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வட்டகொட நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேனும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில், நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பொரளையைச் சேர்ந்த 53 வயதான எச். எம். இந்திக பிரியகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் காயமடைந்த நிலையில் கிதுல்கல தலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முச்சக்கர வண்டியின் பின்புற இருக்கையில் இருந்த ஒரு பெண்ணும் காயமடைந்து தலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அதிக வேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்தில் முச்சக்கர வண்டியும் வேனும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், வேன் சாரதி சந்தேகநபராக…
(க.கிஷாந்தன்) இன்று காலை 11:30 மணியளவில் கண்டியிலிருந்து பதுளைக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஓஹியா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால் மலையக ரயில் மார்க்கத்திலான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயிலின் ஒரு சரக்கு பெட்டி தடம் புரண்டதால், கொழும்பு – கோட்டை – பதுளை இடையிலான பயணிகள் ரயில்கள் பாதிக்கப்படாமல், மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக செயல்பட்டு, ரயில் பாதை சரி செய்யும் வரை பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் பாதுகாப்பையும் செயல்திறனையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டியெழுப்பப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணுவதற்கு ஆதரவளிக்கவும் – ஜனாதிபதி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் தெரிவிப்பு
கட்டியெழுப்பப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணுவதற்கு ஆதரவளிக்கவும் – ஜனாதிபதி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் தெரிவிப்பு நீங்கள் கேட்பவராகவும் நான் கொடுப்பவராகவும் இல்லாமல் ,நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2022 இல் வீழ்ச்சியடைந்த இந்நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையைப் பேணுவது அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் இங்கு தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். பிஜைகளின் நல்வாழ்வுக்கு சிறந்த சுகாதாரத் துறை மிகவும் முக்கியமானது என்பதையும், அது நமது அரசாங்கத்தின் முதன்மையான குறிக்கோள் என்பதையும் ஜனாதிபதி இதன் போது தெளிவுபடுத்தினார். மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் நிபுணர்கள் பெற வேண்டிய வசதிகளைக் குறைக்க அரசாங்கம்…