Author: Thana

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீப தரவுகளின் படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் புதிதாக பதிவான பெரும்பாலான நோயாளிகள் ஆண்கள் என தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) மட்டும் 200 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு காலாண்டில் பதிவு செய்யப்பட்ட அதிக பட்ச எண்ணிக்கையாகும். 2025 ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் மற்றும்ஜூன்) மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய நோயாளிகளில், 20 ஆண்களும் ஒரு பெண்ணும் (15-24) வயதுக்கு உட்பட்டவர்கள்,மற்றவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். மேலும்,2025 ஆம் ஆண்டில் பதிவான ஆண்-பெண் எச்.ஐ.வி தொற்றுகளின்…

Read More

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த குற்றத்திற்கான தண்டணைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று (17) வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி, அவர் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா தனது ஆட்சிக்காலத்தில் (குறிப்பாக 2024 ஆம் ஆண்டு ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில்) நடந்த மாணவர் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்காக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீதான படுகொலை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு அவரே நேரடியாக உத்தரவிட்டார் அல்லது தடுக்கத் தவறியதே அடிப்படைக் குற்றச்சாட்டுகளாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின்படி, இந்தப் போராட்டங்களை ஒடுக்கும்போது சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தலைமை சட்டத்தரணி,…

Read More

இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்கப் பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகளவான பலத்த மழை பெய்யலாம். நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யலாம். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும்…

Read More

திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். இவரும் இவரது மனைவியும் திருகோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாடகை அடிப்படையில் பல வீடுகளில் வசித்து வந்துள்ளனர். குறித்த வீடியோ மற்றும் அது தொடர்பான தகவல் ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரவிய நிலையில், இந்தச் சந்தேகநபர் திருக்கோவில் பிரதேசத்தில் கடலை விற்பனையாளர் என்று சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவியுள்ளது. அதன்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் வசித்த இடங்கள்…

Read More

பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் நிதியாண்டு தொடர்பாக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய வைத்தியசாலை மருத்துவ பரிசோதனையின் போது வைத்தியசாலையில் கிடைக்காத மருந்துகளைப் பெற நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை வழங்காமை, ஆய்வக சோதனைகளை வெளிப்புறமாக நடத்த பரிந்துரைகளை வழங்காமை, தினசரி மருத்துவ பரிசோதனைகளை தவிர மேலதிகமான எந்தவொரு பரிசோதனையிலும் கலந்துகொள்ளாமை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் அடங்கும்.

Read More

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் நீராடியபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த இரண்டு இளைஞர்களும் பாதுக்காப்பு தரப்பால் படகு உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் மஹரகம பகுதியில் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்டுகின்றது.

Read More

கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்தச் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். இந்த வெளிநாட்டுப் பெண் மற்றுமொரு பெண்ணுடன் குறித்த ஹோட்டலின் விசேட விருந்தினர் அறையில் தங்கியிருந்ததாகவும், அவரது பணப்பையில் இருந்த திராம் (Dirham) மற்றும் யூரோ (Euro) பணம் (இலங்கை மதிப்பில் ரூபா 330,000) காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாத நேரத்தில் இந்தத் திருட்டைச் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட வெளிநாட்டுப் பணத்தை ஜ-எல பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனமொன்றில் மாற்றி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (14)…

Read More

பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் ரூ.200 வையும், அரசாங்கம் ரூ.200 வையும் செலுத்தும் தீர்மானத்தற்கு வந்துள்ளது. துயர் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வரும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு, இந்த ரூ.400 சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள எடுத்த தீர்மானம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். இதை விட அதிக ஒதுக்கீடு இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பெருந்தோட்ட சமூகத்தினருக்கான சம்பளத்தை அதிகரிக்கும் விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்ற. பெருந்தோட்ட சமூகத்திக்கு சம்பளம் கிடைத்தால், அது ஒரு நல்ல விடயமாகும். அவ்வாறே இது சாதகமான விடயமுமாக அமைந்து காணப்படுகின்றன. அரசாங்கத்தால் இவ்வாறு நிதிகளை ஒதுக்க முடியும். கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்ட சமயம், வீழ்ச்சி கண்ட தொழிற்றுறைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நிதியை…

Read More

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு குறித்த இலங்கையர் கொலை செய்யப்பட்டதாக, அங்குள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் காலி, படபொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இவர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைக்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதன் காரணமாக, அவர் இந்த இலங்கையரைக் கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக நிமல் பண்டார கூறினார். இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்காக இஸ்ரேல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், இது தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் என இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

(எஸ்.கணேசன்)   2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்தியதற்காக அரசு நடவடிக்கையை ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் பாரத் அருள்சாமி பாராட்டியுள்ளார். இந்த திட்டத்தின் படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.200 சம்பள உயர்வு மற்றும் வருகை ஊக்கத்தொகை ரூ.200 வழங்கப்பட உள்ளது. இதனால், தற்போது ரூ.1350 ஆக வழங்கப்படும் நாட்சம்பளம் ரூ.1750 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இது வரலாற்றில் முதல் முறையாக வரவு செலவு திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் நேரடியாக உயர்ந்துள்ளது. எந்த தொழிற்சங்க அழுத்தமும் அரசியல் பேதங்களும் இல்லாமல், பொறுப்பான பேச்சுவார்த்தை மற்றும் நேர்மையான அணுகுமுறையின் மூலம் இது எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது வரவு செலவு உரையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் இடைவிடாத முற்போக்கான சிந்தனையையும்  பெருந்தோட்ட சமூகத்திற்கான முயற்சிகளையும் நேரடியாக பாராட்டியதையும் பாரத் அருள்சாமி வரவேற்றார்.…

Read More