Author: Thana
ஜனாதிபதி தலைமையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
ஜனாதிபதி தலைமையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), ஆட்பதிவுத் திணைக்களம் (DRP) மற்றும் GovTech (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டங்களின் எதிர்காலச் செயற்பாடுகளை ஆராய்வது, செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும் தடைகளை அடையாளம் காண்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக தேவையான கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளை எடுப்பது போன்றவற்றை நோக்காகக் கொண்டு இந்தக் கூட்டம் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மையக் காரணியாக உள்ள டிஜிட்டல் பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட அரச முதலீடுகளுக்கு வலுவான அடித்தளத்தை…
கேகாலை எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீஓயா தோட்டத்தைச் சேர்ந்த 44 வயதான இராஜேந்திரன் நேற்று முதல் காணாமல் போயிருந்தார். இவரை பிரதேச மக்கள் தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று (12.11.2025) காலை 11 மணியளவில் வீஓயா ஆற்றில் ஒரு சடலம் மிதப்பதை தோட்டத்தினர் கவனித்து, உடனடியாக எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், மிதந்த சடலம் காணாமல் போன இராஜேந்திரனுடையது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் எட்டியாந்தோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் திட்டங்களை முன்வைத்தாலும் அதற்கும் நிதி ஒதுக்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. எனவே, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொதுவேலைத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஏற்பாட்டில், இணைந்து ஒளிரும் மலர்கள் (Inclusive Talent Show) நிகழ்வு கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்று செவ்வாய்க்கிழமை (11.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் யாழ். சமூக செயற்பாட்டு மையத்துடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். மீள்குடியேற்றப் பகுதிகளில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளேன். சமூகப் பிரச்சினைகள் இன்று அதிகரித்துள்ளன. சிறுவர் குழுக்கள் மற்றும் பெண்கள் குழுக்களை அண்மையில் நான் சந்தித்திருந்தேன். எமது சமூகத்தில் நடைபெறும் பல்வேறு விடயங்களையும்…
பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தல்
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல விசாரணைகள் இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. தங்களுக்கு வேண்டப்படாதவர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதமாகவும், வேண்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விசாரணைகளையும் 6 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பான மாதாந்திரக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் நேற்று (11.11.2025) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கல்வித் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம் மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டன. கல்வித் திணைக்களத்தின் கீழ் பல்வேறு நிதி மூலங்களிலிருந்து முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஒவ்வொரு வலய ரீதியாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.…
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான F.W.U. வூட்லர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை பதிவேற்றினால் உங்களை பின் தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது தங்களது வீடு மற்றும் சொத்துக்கள் குறித்து நோட்டமிடும் நபர்களுக்கோ சாதகமான தகவலாக அமையலாம் என்று அவர் விளக்கியுள்ளார். அத்துடன் சுற்றுலா பயணங்களுக்காக தெரிவு செய்யும் பஸ் அல்லது வாகனம் மற்றும் அதன் சாரதி குறித்து சரியான புரிந்துணர்வுடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பில் சல்மான் ஆகா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 105 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். ஹுசைன் தலாத் 62 ஓட்டங்களையும் மொஹமட் நவாஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்படி, 300 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் வனிந்து…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை உருவளி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) அன்று இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலயத்தை திறந்து ஆலயத்தில் உள்ள பணிகளை முன்னெடுப்பதற்கு ஆலயத்திற்கு வந்த குருக்கள் சிறுத்தையை கண்டுள்ளார். இது தொடர்பாக பொதுமக்கள் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் ஊடாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுத்தையை பிடிப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வரவிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சிறுத்தை சாமி கும்பிடுவதற்கு வந்ததோ… என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருடிச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கடந்த 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் மாத்திரம் மேல் மாகாணத்தில் 10 மோட்டார் சைக்கிள்களும் 3 முச்சக்கர வண்டிகளும் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.