Author: Thana

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ மோரா தோட்டத்தில் நடைமுறைப் பயிற்சிக்காக வந்த ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் குழுவை இன்று குளவிகள் தாக்கியதில், ஆறு மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. களப்பயணத்தின் போது மாணவர்கள் தேயிலைத் தோட்டத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை கிளறியதும், குளவிகள் அவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தமாணவர்கள்அனைவரும்வைத்தியசாலையில்சிகிச்சைபெற்று வருகின்றனர். பொகவந்தலாவ பொலிஸார் இச்சம்பவத்தைப் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

(க.கிஷாந்தன்) ஈஸி கேஷ் (Easy Cash) முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெராயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த ஒரு இளைஞன், ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் (13) கைது செய்யப்பட்டார். ஹட்டன் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையைத் தொடர்ந்து, ஹட்டன்–பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர். அவர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், பொலிஸார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்தபோது, பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பொட்டலத்தை கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். அவர் ரூ. 6,000 செலுத்தி, ஈஸி கேஷ் அமைப்பு மூலம் போதைப்பொருள் பொட்டலத்தை வாங்கியிருப்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனையை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் விநியோக…

Read More

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலையின் விவாதம் நாளை (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம்…

Read More

நாட்டிற்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும்…

Read More

மூன்று புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். இன்று தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பின்வருமாறு. 1. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின் மார்ட்டின் Ms. Isabelle Marie Catherine Martin, High Commissioner of Canada, based in Colombo 2. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே ஜேக்கப் டி போயர். Mr. Wiebe Jakob De Boer, Ambassador of the Kingdom of the Netherlands, based in Colombo. 3. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் அவுஸ்திரேலிய…

Read More

ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கையினை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க .புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்களின் ஆலோசனையின் பிரகாரம்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெற்றதுடன். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம்(13) அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இது உலக வாழ் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாவதோடு, இலங்கை, ஐயப்பன் யாத்திரையனை புனித யாத்திரையாக பிரகனப்படுத்திய ஒரே நாடு என்று பெருமையினையும் பெற்றுள்ளது. இப் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை யதார்த்தமாக்க… ஆரம்பம் முதல் அயராது உழைத்த இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் சகல ஐயப்ப குரு சுவாமிமார்கள் உட்பட சகல சுவாமிமார்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..

Read More

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை…

Read More

இலங்கை தபால் சேவை மூலம் குடிமக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை இலங்கை (12) ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் துறை அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வ ஆவணங்களின் பாதுகாப்பான மற்றும் திறமையான விநியோகத்தை மேம்படுத்த பதிவாளர் நாயகம் துறைக்கும் அஞ்சல் துறைக்கும் இடையிலான கூட்டு முயற்சியைக் குறிக்கிறது. மின்-சிவில் பதிவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், தற்போது 2021 ஜனவரி 1, க்குப் பின்பு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களை உள்ளடக்கியது. புதிய அஞ்சல் கூட்டாண்மை பொதுமக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான சேவையை உறுதி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முயற்சியை ஒரு “வரலாற்று மைல்கல்” என்று அமைச்சர் அபேரத்ன பாராட்டினார், இந்த சேவையை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்காக…

Read More

தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் மறுமலர்ச்சி மேம்பாட்டுத் திட்டக் கொள்கை கட்டமைப்பிற்கு இணங்க, தெஹிவளை கவுடான பொது விளையாட்டு மைதானத்தின் மறுசீரமைப்பின் முதல் கட்டம் (11) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் ரூ. 93,379,483.63 செலவிட உள்ளது. தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் விளையாட்டு பணிப்பாளர் நாயகம் மற்றும் மேயர் மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More

ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, பிரதேசங்களில் கடந்த தீபாவளி பண்டிகை காலங்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் ப‌ரிசோதனைகளை நடத்தியிருந்தனர். இதன் போது உணவு சட்டத்தை மீறிய உணவை கையாளும் நிறுவனங்களுக்கு எதிராக இன்று 12/11/2025 ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கடதாசிகளில் உணவை வழங்குதல், காலாவதியான உணவு விற்பனை, மனித பாவனைக்கு பொருத்தமில்லாத உணவு விற்பனை, அசுத்தமான ஹோட்டல்களின் சமையலறை, போன்ற பல குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத உணவகங்கள் ஒரு வாரத்துக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என ஹட்டன் மாவட்ட நீதிபதி   கடுமையாக எச்சரித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் மஸ்கெலியா பகுதியில் பிறந்தநாள் கேக் ஒன்றை வெட்டும் போது கேக்கின் நடுவே இறந்த பல்லி ஒன்று இருந்ததாக சுகாதார அதிகாரிகள் ஹட்டனில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Read More