Author: Thana
நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் விசேட கலந்துரையாடல்
நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் விசேட கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு (2026-2035) செயல்படுத்தப்படவுள்ள தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஏற்ப நாட்டின் இலவச சுகாதார சேவையை டியிட்டல் மயப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்காக பின்பற்ற வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கலுக்கான கட்டமைப்பை நிறுவுதல், டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சர்வதேச ஆதரவுடன் முக்கிய திட்டங்களை (HIQI, HSEP, PHSEP) செயல்படுத்துதல், டிஜிட்டல் மாற்றத்திற்கான தேவைகள், கருத்துக்கள், குறித்து இங்கு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. மனித வள மேம்பாடு மற்றும் இந்தப் பணியை திறம்படச் செய்வதற்குத் தேவையான பயிற்சி குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 41 வயதுடைய நபர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்றிரவு குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையிலே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கேரம் பலகை வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதனால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நிராகரித்துள்ளது. பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் பி.எம்.டி. பண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக அததெரண நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார். தீர்ப்பைப் பிரகடனம் செய்த நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டதாவது: நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதிவாதி, மேன்முறையீட்டின் கீழ் பிணை கோரும்போது, விசேடமான காரணங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது. ஆனால், இந்த இரண்டு பிரதிவாதிகளும் முன்வைத்த காரணங்கள் பிணை வழங்குவதற்குப் போதுமான விசேடமான காரணங்கள் அல்ல என்பதால், அவர்களது பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் குழாம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.…
(க.கிஷாந்தன்) நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த “மகாரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர் நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை விசாரணை செய்யும் போது, அந்தப் பெண் நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் வாடிக்கையாளர்களுடன் ஈஸி கேஷ் வழியாக பண பரிமாற்றம் செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் வாங்கியவர்களின் தொலைபேசி பதிவுகளைப் பகுப்பாய்வு செய்தபோது, சந்தேக நபர் ஹன்வெல்ல பகுதியில் உள்ள ஒரு போதைப்பொருள் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று 6ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவருடைய இல்லத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூபா 1,41,000 பணம்…
(க.கிஷாந்தன்) நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி மல்லாந்த சந்தியில் இன்று (07) பிற்பகல் 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் வண்டியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. பொலிஸாரின் தகவலின்படி, காயமடைந்த நபர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இலங்கை சுற்றுலா பயணமாக வந்திருந்த இஸ்ரேலிய பிரஜை ஆவார். அவர்கள் வெலிகமவிலிருந்து வாடகைக்கு எடுத்த மூன்று மோட்டார் சைக்கிள்களில் கண்டி மற்றும் நுவரெலியா வழியாக எல்லவுக்கு பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால், பிரதான வீதியிலிருந்து குறுக்கு வீதியில் திரும்பிய கெப் வண்டியுடன் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் கடுமையாகக் காயமடைந்த இஸ்ரேலிய பிரஜை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு…
நானுஓயாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேனுடன் லொறி மோதி விபத்து – 3 பேர் காயம்,லொறியின் சாரதி கைது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் நானுஓயா குறுக்கு வீதி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேனுடன் லொறி மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்து இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது விபத்து தொடர்பில் மேலும் தெரிவவருகையில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியிலிருந்து டெஸ்போட் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேனுடன் நானுஓயா பிரதான நகரில் இருந்து எதிர்த்திசையில் பயணித்த லொறி மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பாடசாலை மாணவர்களும் , பெற்றோர் ஒருவரும் உள்ளடங்கலாக 3 பேர் காயமடைந்த நிலையில் நானுஓயா ஆரம்ப பிரிவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். மேலும் விபத்துடன் தொடர்புடைய லொறின் சாரதியின் கவனக்குறைவினால் விபத்து சம்பவித்திருக்கலாம் என தெரிவித்த நானுஓயா பொலிஸார் லொறியின்…
ஹட்டன் நகரில் நிலவும் போக்குவரத்து சிக்கலை தீர்க்க வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு
ஹட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டில் அவசியமாக நகரத் திட்டம் தயாரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார் அங்கு தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கான தற்காலிக தீர்வை வழங்கும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அறிவித்தார். தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும். விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.