Author: Thana
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“மூன்று வருட தேசிய பயிலுநர் கல்வி டிப்ளோமா பாடநெறி” யைத் தொடர்வதற்காக 2023 ஆம் ஆண்டு அல்லது 2024 ஆம் ஆண்டு க. பொ.த. (உ.த) பெறுபேறு அடிப்படையில் தேசிய கல்வி நிறுவனங்களுக்கு மாணவப் பயிலுனர்களை உள்வாங்குதல் தொடர்பான வர்த்தமான அறிவித்தல் அண்மையில் (07) வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களை நிகழ் நிலையில் சமர்ப்பிக்க முடியும். 2025.11.07 ஆம் திகதி காலை 10.00 மணி முதல் 2025.11.28 ஆம் திகதி இரவு 12.00 மணி வரை விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 8 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. அதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் மாலை…
புறக்கோட்டை, செட்டியார் தெருவில் ஆபரண விற்பனை நிலையமொன்றில் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற நபர் கைது
புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை நிலையமொன்றில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபரொருவரைப் பேலியகொடைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார் சுமார் 70 இற்கும் மேற்பட்ட CCTV காட்சிகளைப் பரிசோதித்த பின்னரே இந்தச் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 1993 ஆம் ஆண்டில் நாட்டினால் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 60 வயதுடைய நபர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் அந்த விற்பனை நிலையத்திலிருந்து திருடிய தங்க ஆபரணங்களில் ஒரு பவுண் (Pawn) எடையுள்ள ஆபரணங்களையும், சுமார் 3 கிலோகிராம் எடையுள்ள வெள்ளி ஆபரணங்களையும் பொரளை சிறிசெத உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறைக்குள் மறைத்து வைத்திருந்ததாகச் சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மீட்டெடுத்தனர். கடந்த மாதம் 25 ஆம் திகதி இரவு,…
அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 25 பேர் வைத்தியசாலையில்
அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 25 பேர் வைத்தியசாலையில. அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகவும், காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அளுத்கம பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹெரோயினை பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கு விற்பனை செய்யும் கடத்தல் வலையமைப்பைக் கண்டறிந்து, அது தொடர்பான ஒரு சந்தேகநபரையும், இரண்டு பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொதி செய்யப்பட்ட ஆயிரம் ஹெரோயின் பக்கெட்டுகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாலி-எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 28 மற்றும் 30 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது போதைப்பொருளைப் பொதி செய்து கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளில், அளுத்கமவில் இருந்து வரும் ஒருவரே அவர்களுக்கு ஹெரோயினை வழங்குவது தெரியவந்தது. அவரைப் பிடிப்பதற்காக பண்டாரவளைப் பொலிஸார் ஒரு தந்திரோபாயத்தைப் பயன்படுத்தினர். அதன்படி, கடந்த பௌர்ணமி தினத்தன்று, சந்தேகநபரின் தொலைபேசி மூலம் பண்டாரவளை தோவ ரஜமகா விகாரைக்கு வருமாறு பெண்…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறை
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்கு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார். அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “6 ஆம் தரத்திற்காக, வயதுக்கு ஏற்ற வகையில் ஒரு புத்தகத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு, குறிப்பாகக் குடும்பநல சுகாதாரப் பிரிவு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. நம் நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்குக் பிள்ளைகள் உள்ளாகும் போக்கு அதிகரித்து வருவதால்,…
நாட்டில் நடைமுறையில் உள்ள அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் சலுகை பெறுபவர்களுக்கான வருடாந்தத் தரவுப் புதுப்பித்தல் (Annual Data Updates) நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரிச் சலுகைகள் சபை (Welfare Benefits Board) நேற்று (நவம்பர் 9, 2025) அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு அஸ்வெசும சலுகைகளைப் பெற்ற அல்லது அதற்குத் தகுதிபெற்ற அனைத்துக் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள், இந்தத் தரவுப் புதுப்பித்தல் நடவடிக்கையை இம்முறை முதன்முறையாக நிறைவு செய்வது கட்டாயமாகும் என்று வாரியம் வலியுறுத்தியுள்ளது. யாருக்குப் புதுப்பித்தல் கட்டாயம்? 2023ஆம் ஆண்டு அஸ்வெசும சலுகைக்காகத் தகுதிபெற்ற அனைத்து குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள். இதுவே அவர்களுக்கு வழங்கப்படும் முதல் வருடாந்தப் புதுப்பித்தல் நடைமுறையாகும். யாருக்குக் கட்டாயம் இல்லை? 2024ஆம் ஆண்டு அஸ்வெசும சலுகைக்காக குறைகள் அல்லது மேன்முறையீடுகளை (Grievances or Appeals) சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், அவர்களது தகவல்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டுள்ளதால், மீண்டும் தரவுகளைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சரிபார்ப்புக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள்…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை முதல் (10) ஆரம்பமாகிறது. இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர். பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார். அத்துடன், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்தங்கள் காரணமாக ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதாக அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர்…