Author: Thana
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதில் வரவுக் கொடுப்பனவுக்கான 200 ரூபாவை அரசாங்கம் வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2025-11-07
தென்கொரியா, இத்தாலி மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண்
தென்கொரியா, இத்தாலி மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கம்பஹா பிரதேசத்தில் கைது வைத்து செய்துள்ளனர். சந்தேகநபரான இந்தப் பெண் இவ்வாறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள ஆண்களை ஏமாற்றி 50 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். எனினும், குறித்த பெண் உறுதியளித்தபடி வேலைவாய்ப்பை வழங்கவில்லை என விசேட விசாரணைப் பிரிவுக்கு 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி, அதிகாரியர்கள் சந்தேகநபரை கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றபோதிலும், அவர் அதிகாரிகளைத் தவிர்த்து வந்துள்ளார். நேற்று (06) கம்பஹா பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்ரேலுக்கான வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக நேர்காணல் நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், உரிய அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைக்காக ஆட்களைச் சேர்த்தல் மற்றும் பணம்…
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் 01.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையைச் சமர்ப்பிக்க உள்ளார். அதற்கிணங்க, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை (08) முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் இடம்பெற்ற பின்னர், வரவு செலவுத் திட்ட…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக மாணவத்தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டமானது இன்று (06) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக தேசிய கொள்கை தொடர்பாக மாணவத் தலைவர்களுக்கு அறிவூட்டுதல், பாடசாலையினுள் சிறுவர் துஷ்பிரயோகம் நடப்பதை குறைப்பதற்கும் தடுப்பதற்கும் மாணவத் தலைவர்களின் பங்களிப்பினைப் பெறுதல், சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக முடிவெடுக்கும் செயல்பாட்டில் மாணவத் தலைவர்களைப் பங்குபற்ற வைத்தல், பாடசாலையினுள் சிறுவர் நட்பு மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு மாணவத் தலைவர்களின் தலைமைத்துவ அறிவு, திறன், மனப்பாங்கை மேம்படுத்துவதற்கான தலையீடு மற்றும் சிறுவர் பாதுகாப்பின்…
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை “2025ம் அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 2025.11.07ம் திகதி வெள்ளிக் கிழமையன்று நிறைவடைவதுடன், சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் 2025.12.08ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.11.24ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும்.”
“அஸ்வெசும” நலன்புரி நன்மைகளைப் பெறத் தகுதி பெற்ற மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் விவரங்களைப் புதுப்பித்தல்
“அஸ்வெசும” அரசாங்க நலன்புரி நன்மைகளைப் பெறத் தகுதி பெற்ற மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் விவரங்களைப் புதுப்பித்தல் நடவடிக்கைகளை (06) ஆரம்பிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். 2002 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் பிரிவு 23 இன் படி, இந்த தகுதியுள்ள நபர்களின் விவரங்கள் வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் கூறினார். அதன்படி, www.eservices.wbb.gov.lk என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது படிவங்களை நிரப்பி பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் சமர்ப்பிப்பதன் மூலமோ இதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பான மேலதிக விபரங்களை கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி அலுவலர்,…
ரம்பொட வெதமுல்ல தோட்டத்தில்,வியாழக்கிழமை (06) அன்று குளவி கொட்டுக்கு இலக்காகி எழுவர் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஆண் தொழிலாளர்கள் ஐவரும் பெண் தொழிலாளர்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குறித்த ஆசிரியர், சில மாணவர்களுடன் இணைந்து பல மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் மேற்கொண்ட இச்செயல்களை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசிகளைச் சோதனையிட்டபோது, பல மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் தவறான முறையில் நடந்துகொண்ட வீடியோக்கள் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். ஆசிரியர், குறிப்பிட்ட மாணவர்களைப் பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழச் செய்து, அவர்கள் மூலம் மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுள்ள சம்பவம் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியரின் தொலைபேசியில் இருந்த…