Author: Thana
பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும், பயணச் சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் மேல் மாகாணத்தில் கடந்த முதலாம் திகதி அமுலுக்கு வந்தது. இது தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர்களுக்கு தௌிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும் நேற்று முதல் அந்த சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்பதுடன் எதிர்வரும் நாட்களில் சுற்றிவளைப்புகள் இடம்பெறும் எனவும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் மேல் மாகாண வீதிப் பயணிகள்…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் . இந்நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று மாலை அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக முன்னதாக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தனர். ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக அவர்கள் இவ்வாறு சென்றிருந்தனர். நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தற்போது பொலிஸ் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின்…
முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார இலஞ்ச ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டார். இன்று (15) வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகைதந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான திருமதி. டபிள்யு. எம்.டீ.ரீ. விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் இன்று(15) ஜனாதிபதி செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டன. டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள இதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் ( அனர்த்த முகாமைத்துவம்) பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியதோடு டபிள்யு. எம்.டீ.ரீ. விக்ரமசிங்க பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் மேலதிகச் செயலாளராக பணியாற்றியிருந்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு
நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலைகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் கடுமையான நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, கேரட், லீக்ஸ், கோவா போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்றுக்கு 70 முதல் 90 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகின்றன. இதனால், உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். நுவரெலியாவில் உள்ள பொருளாதார மையங்களின் முதலாளிகள், உள்ளூர் விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை வாங்குவதற்குப் பதிலாக, ஊவா மாகாணத்திற்குச் சென்று அங்குள்ள விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை மலிவாகக் கொள்முதல் செய்கின்றனர். இதனால், நுவரெலியா விவசாயிகளின் மரக்கறிகள் விற்பனையாகாமல், நீண்ட காலத்திற்கு நிலத்தில் வைத்திருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், மரக்கறிகள் அழிந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், உரம் மற்றும் மருந்து போன்றவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில், மரக்கறிகளின் விலை குறைவதால் விவசாயிகள் மிகுந்த நட்டத்தைச் சந்திக்கின்றனர்
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும்-ஹட்டனில் கையெழுத்து வேட்டை
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி ஹட்டன் பஸ் நிலைய வளாகத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. உரிமை மீட்போம், தலைமுறை காப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் அமைப்பின் தலைவர் பா. சிவநேசன் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர். “பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வழங்குவது மிகவும் அவசியமானது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறும். கையெழுத்து திரட்டப்பட்ட பின் மனு ஜனாதபதியிடம் கையளிக்கப்படும்.” என்று அமைப்பின்தலைவர் பா. சிவநேசன் தெரிவித்தார்.
சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள் எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் மற்றும் மின்னணு பயண அனுமதிப் பத்திரங்களை (ETAs) வழங்குவதை எளிதாக்குவது தொடர்பான விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பல்வேறு இடங்களைப் பார்வையிடச் செல்லும் போது சுற்றுலாப் பயணிகள் டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய இடங்களில் ஒன்லைனில் டிக்கெட்டுகளை வாங்குவதை எளிதாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாப்…
சீன ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையே சீனாவுடனான இலங்கையின் உறவைப் பலப்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தை
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று ஒக்டோபர் 14, 2025 பீஜிங்கில் அமைந்திருக்கும் மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) அவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். இலங்கையின் சீனாவுடனான ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துதல் ஆகியன குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே பிரதமர் சீன விஜயத்தினை மேற்கொண்டு இருக்கின்றார். பீஜிங்கில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்கள், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்ட அரச விஜயத்தின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டன. இக் கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவைப் பற்றி நினைவு கூர்ந்த பிரதமர், ஜனாதிபதி…
பதுளை வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலத்தின் 121 ம் ஆண்டு நிறையொட்டி விரியும் சிறகுகள் விளையாட்டு கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட போட்டி
பதுளை வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலத்தின் 121 ம் ஆண்டு நிறையொட்டி விரியும் சிறகுகள் விளையாட்டு கழகம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட போட்டி மற்றும் மைதான அங்குரார்ப்பண நிகழ்வுடன் கௌரவிப்பு விழாவும் அதிபர் ந.சுந்தரராஜ் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைப்பெற்றது இன்நிகழ்வில் பாடசாலை முன்னாள் அதிபர்கள் ,ஆசிரியர்கள் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பதுளை வலயகல்வி பனிமனையின் உத்திபோகஸ்தர்கள் சமுக ஆர்வளர்கள் கலந்து கொண்டனர். செய்தி-சந்ரா