Author: Thana
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு
அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்குத் தெரிவிப்பு அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (14) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த நிதியாண்டில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு மீள் கையளிக்க இடமளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம்…
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நேபாள பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவை மற்றும் தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்கு ஏற்ப, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கும் பரிந்துரை குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த சம்பள அதிகரிப்பு முறை தொடர்பில் தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். பெருந்தோட்டத் தொழிற்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இங்கு ஜனாதிபதியிடம் விளக்கினர். தோட்டத் தொழிற்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த விடயத்தில்…
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது. இந்தப் புதிய நியமனம் வழங்கும் போது, எல். குமுது லால் போகஹவத்த நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகப் பணியாற்றி வந்தார். ஜனாதிபதியால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்படி, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க நியமிக்கப்பட்டார். அதன்படி, இந்தப் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு
மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை சென்ற ஆட்டோவில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள்
(க.கிஷாந்தன்) கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரை சென்ற ஆட்டோவில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களை வட்டவளை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர். 25 மற்றும் 27 வயதுடைய வெலிமடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மருதானை பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் என தெரியவந்துள்ளது. ஈசி கேஸ் முறையில் பணத்தை பெற்றுக்கொண்டு, வீதிகளில் அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் போதைப்பொருளை வைத்துவிட்டுச் செல்கின்றனர் என வட்டவளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது. மருதானையில் இருந்து வெலிமடை நோக்கி இவர்கள் ஆட்டோவில் இன்று (13) பயணித்துக்கொண்டிருந்தபோது, வட்டவளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சோதனைச் சாவடியில் அவர்களது ஆட்டோ நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதன்போது கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.…
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
(க.கிஷாந்தன்) ” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதியே அதிகம் கதைத்திருந்தார். எனவே, பண்டாரவளையில் அசல் காணி உரித்து வழங்கப்படும் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. கடசாதி ஆவணமே கையளிக்கப்பட்டுள்ளது. 2015 இல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பமானது. ஒரிஜினல் டீட் வழங்கப்பட்டது. இது பொய்யென ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். ஆனால் அவர்களின் ஆட்சியின்போது அவர் அதனையே வழங்கினார். நல்லாட்சி காலத்தில் எல்லோருக்கும் காணி உரிமை வழங்க முடியாமல்போனது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய ஜனாதிபதி ஆட்சியின்கீழ்…
நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்பு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்த நிஷாந்த ஜயவீர ஆகியோர் இன்று (13) காலை நிதி அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமைச்சுப் பதவியை வகிப்பது ஒரு சலுகையாக கருதுவது வரலாற்றின் இணைந்துள்ள ஒரு கருத்து என்றும், அது உண்மையில் ஒரு சலுகை அன்றி மாறாக ஒரு பொறுப்பு என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு பங்களித்த அதிகாரிகள் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி எடுத்துச் செல்வதில் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். நிதி, திட்டமிடல்…
ரதல்ல குறுக்கு வீதியின் ஊடாக நுவரெலியா செல்லும் பாதையில் மீண்டும் பஸ் சேவையை ஆரம்பிக்க கோரி ஆர்ப்பாட்டம்
ஹட்டன் நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியின் ஊடாக நுவரெலியா செல்லும் பாதையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பஸ் விபத்தின் காரணமாக அப்பகுதிக்கான பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐந்து 5km கிலோ மீட்டர் தூரம் இந்த பகுதி மக்கள் நடந்து செல்வதால் பெரும் அசௌகரிய நிலைமைக்கு முகம் கொடுக்கின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் கூலி தொழிலாளர்கள் காலை அனைவரும் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அரசாங்கம் வீதியில் பஸ் போக்குவரத்து சேவையை மீண்டும் வழங்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று காலை 9 மணிக்கு ரதல்ல வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வ. கார்த்திக்
அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் சம்பள சூத்திரம் என்ன? — தமுகூ தலைவர் மனோ கணேசன் இன்று, அடிப்படை சம்பளம் ரூ. 1,350 ஆகும். கேள்வி இதுதான்: அரசு அடிப்படை சம்பளத்தை உயர்த்த உள்ளதா, அல்லது பிற மேலதிக கொடுப்பனவுகள் மூலம் ரூ. 1,750 வருகிறதா? ஜனாதிபதியை முதலில் மூன்று அரச பெருந்தோட்ட நிறுவன தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டு, பின்னர் தனியார் கம்பனிகளுடன் பேச வேண்டும். மனோ கணேசன் தன் எக்ஸ் தளத்தில் மேலும் கூறியதாவது; அடிப்படை சம்பளம் மட்டுமே EPF பங்களிப்புக்கு உட்பட்டது. கொடுப்பனவுகள் அல்ல. கம்பனிகளின் நிலையான நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. தொழிலாளரின் அதிக கொழுந்து பறித்தால், கூடுதல் சம்பளம் வழங்க தயார். இது தான் அவர்களின் சூத்திரம். “அதிக கொழுந்து, அதிக சம்பளம்”. ஜனாதிபதியின் சூத்திரமும் இதுவென்றால், இதில் புதியதொன்றும் இல்லை. தொழிலாளர்கள் அதிக கொழுந்து பறிக்க முடியாததற்கு காரணம் என்ன? ஏனெனில் தோட்டங்கள் பல…
மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் குறித்து அழையுங்கள் -0112882228
மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 0112882228 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் விசேட விசாரணைப் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட பொலிஸ் பிரிவுக்கு அந்த தகவல்களை வழங்க முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் குறித்து பொலிஸ் பிரிவுக்கு ஏற்கனவே ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 02 நாட்களில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து பணம் பெற்றதற்காக ஒரு பெண் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து கிரிபத்கொட பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடமிருந்து 8 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றமையும் , குருநாகல் பகுதியில்…