Author: Thana

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம். பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Read More

“2000 வீடுகள் அல்ல!, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு! மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம்! – ஜீவன் தொண்டமான்” அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் ஒரு விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவருடைய சமூக ஊடகப் பதிவின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…. “இன்று வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்) இந்நிகழ்வானது “2000 வீடுகளைக் கையளிப்பது அல்ல!”, ஆனால் 2000 காகிதத் தாள்களைக் கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே” என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை, கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு…

Read More

மலையக மக்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பூமியுடன் போராடும் மலையக மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்யும் பொறுப்பை நிறைவேற்றுவேன் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான 1,750 ரூபா நாளாந்த சம்பளத்தை எவ்வாறேனும் இந்த ஆண்டு நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சுமார் 202 ஆண்டுகளாக பூமியுடன் போராடி, இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களித்து வரும் மலையக சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்யும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும், ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று (12) முற்பகல் பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இந்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக கடந்த பொதுத் தேர்தலில் தங்கள் உறவினர்…

Read More

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் (09) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் 70 ரூபாவுக்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

கண்டி – தென்னேகும்புர பாலம் அருகே காணாமல் போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட மாணவர் 14 வயதுடைய ஜெகதீஸ் என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் (09) இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. கண்டி நகரில் இரு பாடாலைகளில் கல்வி கற்று வந்த ஜெகதீஷ் மற்றும் எம். மிலான் ஆகியோர் நேற்று மாலை வளர்ப்பு மீன்களை கொள்வனவு செய்வதாக கூறி வீடுகளில் இருந்து திகன பகுதிக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில், குறித்த இருவரும் மகாவலி ஆற்றில் இறங்கி பாறைக் கரையில் இருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பலர் இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர். கண்டி தலைமையக பொலிஸார் மற்றும் பலகொல்ல பொலிஸாரும் இணைந்து காணாமல் போன மாணவர்களைத் தேடுவதற்காக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதுடன், மகாவலி ஆற்றில் தேடுவதற்காக…

Read More

அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தின தலைமையில் நேற்று (2025.10.10) தியகமயில் ஆரம்பமானது. நாட்டில் உள்ள 1,170 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி, 525 போட்டி பிரிவுகளில் இந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. நாட்டின் பாடசாலை விளையாட்டு துறையில் முன்னணி விளையாட்டுப் போட்டி இதுவாகும். விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண உரையை நிகழ்த்திய பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை செனவிரத்ன; விளையாட்டு மாத்திரம் அன்றி பிள்ளையின் ஆளுமையை தீர்மானிக்கும் இயலுமை மற்றும் குழுவாக செயல்படும் மனப்பான்மையை வளர்ப்பதற்காக பாடசாலைகளில் விளையாட்டு உதவி அளிக்கின்றது என தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்; விளையாட்டின் முக்கியத்துவம் அறிந்த அரசாங்கம் ஒன்றாக விளையாட்டு வீரர் ஒருவரின் ஆரம்ப முதல் தேசிய மட்டம் வரை வீரர்களை ஊக்குவிக்கும் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக,…

Read More

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணியளவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 50மில்லி மீட்டரளவில் கடும் மழை பெய்யலாம். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியளவின் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக கடும் காற்றினால் ஏற்படக்கூடிய அபாயங்களை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது

Read More

நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். “கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்குக் காரணங்கள் என்பதை இந்த மனநல சோதனை கண்டறிந்துள்ளது.” “இலங்கையின் மக்கள் தொகையில் 19% பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.” என்றார். இன்றைய (10) உலக மனநல தினத்தை முன்னிட்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது பேராசிரியர் மியுரு சந்திரதாச இவ்வாறு கூறினார்.

Read More

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Read More