Author: Thana
பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள்
பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் (08) தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார். நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி செய்யப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, அட்டை கட்டண முறையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போதுள்ள பேருந்து டிக்கெட் இயந்திரங்கள் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதிகளுடன் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் வழங்கப்படும். பொது பயணிகள் போக்குவரத்து இன்னும் மோசமான நிலையில் உள்ளது. அதைத் தீர்க்க அனைவரும் உதவுமாறு அமைச்சர் கூறினார்.
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்பதை படிப்படியாக உறுதி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (08) பாராளுமன்ற விவாதத்தின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். கல்வியற் கல்லூரிகள் நீண்ட காலமாக மறுசீரமைக்கப்படவில்லை. வளங்கள் மட்டுமல்ல, அவை செயல்படுத்தப்படும் விதமும் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய காலத்திற்கு ஏற்றதாகவும், உத்தேச கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்பவும் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். எமக்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்காக, கல்வியற் கல்லூரிகளில் உள்ள ஆசிரிய மாணவர்களும், ஆசியர் கலாசாலைகளில் உள்ள ஆசிரியர்களும் பயிற்சிப் பெறுகின்றனர். அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக வேண்டும் என்ற நிலைக்கு படிப்படியாக வருவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள். கல்வியற் கல்லூரிகளில் பட்டம் வழங்கப்படும் நிலைக்கு அதைக் கொண்டு வர விரும்புகிறோம். குளியாப்பிட்டி கல்வியற் கல்லூரியில் ஏற்கனவே பட்டங்கள் வழங்கப்படுகிறது. அதேபோன்று…
2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk / www.results.exams.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தினம் இன்று (09) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ( IMF ) பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று (08) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது 2030 ம் ஆண்டளவில் கைத்தொழில் அமைச்சின் இலக்கு மற்றும் உபாய வழிகள் தொடர்பாக பரவலான பகுப்பாய்வொன்றை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் முன்னிலையில் தெளிவுபடுத்தியதுடன், தேசிய உற்பத்திக்கு (GDP) தொழில்நுட்பம் மற்றும் உற்பத்திகளின் பங்களிப்பை அதிகரித்தல், தொழில் முயற்சியாண்மையின் பங்களிப்பு மற்றும் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரித்தல் போன்ற பிரதான உற்பத்தித் திறன் சுட்டிகள் (KPIs) பல தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது மேலும் அமைச்சின், கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தம், வியாபார நடவடிக்கைகளுக்காக வசதிகளை திட்டமிடும் உபாய வழிகள், மற்றும் உள்நாட்டு கைத்தொழில் எதிர்கொள்ளும் சவால்கள், நிதிக் கொள்கை மற்றும் காணி ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அகில இலங்கை ரீதியான தமிழ் மொழித் தினப் போட்டியில் மத்திய மாகாண வத்தேகம கல்வி வலயம் 5 இடங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது
அகில இலங்கை ரீதியான தமிழ் மொழித் தினப் போட்டியில் மத்திய மாகாண வத்தேகம கல்வி வலயம் 5 இடங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது. வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட மடுல்கலை க/வத்/பரமேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி A. யேக்ஷிகா பிரிவு 3 பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.அதே நேரம் மமா/க/வத்/இரஜவலை இந்து தேசிய கல்லூரியில் பிரிவு 4 தனி இசைப் போட்டியில் G.அனிஷ்கா முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தையும் பிரிவு 5 பேச்சுப் போட்டியில் T.டிலுக்ஷனா மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் பிரிவு 1 குழு நடனப்போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பிரிவு 1 குழு இசைப் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்று வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளனர். phots
ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு! ——————————————————————————————— ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் நாடு முழுவதும் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் அதிகரித்துள்ள நீர்க்கட்டணங்களினால் கடுமையான அசெளகரியங்களை எதிர்நோக்கிய கல்முனை பாண்டிருப்பு பிரதேச மக்களுக்கு நிவாரணமாக, ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பு தனது சமூகப்பணியை இன்னும் ஒரு முறை சிறப்பாக நிகழ்த்தியுள்ளது. மத வேறுபாடின்றி சமூக நலனுக்காக சேவை செய்து வரும் இவ்வமைப்பு, YWMA பேரவையின் அனுசரணையுடன், பயனாளர்களை இனங்கண்டு அவர்களுக்காக குழாய்க்கிணறுகளை அமைத்துள்ளது. இந்த மனிதநேய முயற்சி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர் மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பேரில் குறுகிய காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது. புதியதாக அமைக்கப்பட்ட குழாய்க்கிணறுகள் பயனாளிகளின் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் பிரதேசவாசிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் தேவையை உணர்ந்து…
(க.கிஷாந்தன்) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் கொத்மலை ஓயாவில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதித்த பின்னர், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் வைத்தியரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்
விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு (7) சான்றுரைப்படுத்தினார். நேற்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெற்ற இரண்டாவது மதிப்பீடு விவாதத்தின் பின்னர் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025.09.12ஆம் திகதி இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலம் இலங்கையின் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சட்டத்தை, சர்வதேச சட்டத்துடன் இற்றைப்படுத்துவதற்காக 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சாமவாயச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமாகும். உலக ஊக்குப் பதார்த்தத் தடுப்பு முகவரமைப்பினால் இலங்கையின் விளையாட்டுக்களுடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட ஊக்குப் பதார்த்தம் தொடர்பான…
கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் கட்டமைப்பு ரீதியான அரசாங்கமொன்றாக அவசியமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும்…கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி கட்டமைப்பில் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்கொள்ளும் விசேட சேவை நாட்டிற்குப் பெருமை கல்வி கட்டமைப்பிற் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை கருத்தில் கொள்ளாது, இந்த நாட்டு ஆசிரியர்களின் மற்றும் வழங்கும் விசேட சேவை முழு நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதாகவும், பெற்றோர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சமமான பொறுப்பை ஏற்று பிள்ளைகளை அறிவால் நிறைந்தவர்களாக, குணத்தால் முழுமையானவர்களாக, அறிவுள்ள மற்றும் சமூகத்திற்கு பெருமதியான பிரஜைகளை உருவாக்குகின்ற ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய உயர் கௌரவம் மற்றும் இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அக்டோபர் ஐந்தாம் திகதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும்…