Author: Thana

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய, மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர். புதிய அமைச்சரவை மாற்றத்தின்படி, இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சரின் விடயதானங்கள் அதற்கேற்ப மாற்றப்பட்டுள்ளன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய பிமல் ரத்நாயக்கவிடமிருந்து சிவில் விமானப் போக்குவரத்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக நகர அபிவிருத்தி அமைச்சு இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிமல் ரத்நாயக்க இன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார். பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்கப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அனுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்னர் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அவர், இன்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றார். அத்துடன் அனுர கருணாதிலகவிடமிருந்து நீக்கப்பட்ட நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சுப் பொறுப்பு பிரதி அமைச்சராகப்…

Read More

இளம் பெண்களுக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மூத்த திரைப்பட இயக்குனர் ஒருவராக நடித்து, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, ஒத்திவைக்கப்பட்ட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த தண்டனையை விதித்துள்ளார். இதன்படி, பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடின உழைப்புடன் கூடிய எட்டு மாத கடுங்காவல் சிறைத்தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதி, நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டதன் அடிப்படையிலும், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், இந்த மென்மையான தண்டனை விதிக்கப்பட்டதாகத் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். எனினும் அவருக்கு எதிர்காலத்தில் அரசுப் பணிக்கான எந்தவொரு பரிசீலனையும் அனுமதிக்கப்படாது என்பதை நீதிபதி அறிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழாவில்,நுவரெலியா மாவட்டம் ஹட்டன் டன்பார் தோட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி தர்ஷினி அவர்கள் தொழிநுட்ப துறையில் Bachelor of biosystems technology in agricultural…

Read More

புனித யூதா ததையுவின் வருடாந்த திருவிழா அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் நாளை 10 ம் திகதி மாலை 06 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை தொடர்ந்து 11/10 /2025 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆராதனை பங்கு தந்தையால் முன்னெடுப்படவுள்ளது. 12/10/2025 ஞா யிற்று கிழமை அன்று காலை 11 மணிக்கு வரவேற்பு நிகழ்வுகளுடன் திருநாள் திருப்பலி பங்கு தந்தை அவர்களால் ஒப்புக்கொடுக்கப்படும் அதனை தொடர்ந்து புனித யூதா ததையுவின் திருசுரூப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெறும்.

Read More

“அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி – 2025” கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், 2025 அக்டோபர் 10 முதல் 14 வரை ஐந்து நாட்கள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற உள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்தார். 38வது தடவையாக நடாத்தப்படும் இந்த விளையாட்டுப் போட்டியில், 31 குழு போட்டிகளையும், தடகளப் போட்டியையும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இல்லங்களுக்கிடையேயான விளையாட்டு விழா பிறகு, பிரதேச, வலய மற்றும் மாகாண போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தும் மாணவர்கள் அகில இலங்கை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும்சுமார், பதினைந்தாயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு குழு போட்டிகளில் பங்கேற்கவுள்ளர்கள், மேலும் ஐந்தாயிரம் விளையாட்டு வீரர்கள் தடகளப் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1170 பாடசாலைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நிகழ்வில் வெற்றி…

Read More

இலங்கையின் மக்கள் தொகையில் 10% பேர் பல்வேறு மனநல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் • 2% மக்கள் கடுமையான மனநல நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் • 2024 ஆம் ஆண்டில் சுமார் 37,000 நோயாளிகள் மனநல மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளனர். அவசர சிகிச்சை நடைமுறைகள் போலவே மனநலம் சார்ந்த சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் தெரிவித்தார். உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி அனுஷ்டிக்கபடுகிறது. அதன்படி, சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் தஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்தன ஆகியோரின் தலைமையில் இலங்கை மன்றத்தின் (Srilanka Foundation) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் நினைவுகூரப்படும் இந்த நாள், ” அனைவருக்கும் மனநல சேவைகள் ” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்டது. நமது நாட்டில் மனநலம் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை…

Read More

அரசாங்க பாடசாலைகளில் அரச உதவி பெறும்/ உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் 2026ம் ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வகுப்புக்களை 2026 ஜனவரி மாதம் 20ம் திகதியன்று (செவ்வாய்க் கிழமை) முறைப்படி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத் தினத்திற்கு முன்னர் தரம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுமதித்துக் கொள்ள வேண்டும். 02. அன்றைய தினம் அதாவது, 2026.01.20ம் திகதியன்று தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்குரிய வரவேற்பு நிகழ்ச்சியில் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்குவது பொருத்தமாகும். • 2026ம் ஆண்டில் தரம் இரண்டைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றல். • பெற்றோர் மற்றும் விருந்தினர்களை வரவேற்றல், தேசிய மற்றும் பாடசாலை கொடியேற்றம், தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைத்தல். • ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு, தரம் ஒன்றின் புதிய கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் தொடர்பில் தரம் ஒன்றில் அனுமதிக்கப்படும் மாணவர்களது பெற்றோர்களை அறியப்படுத்துதல்.…

Read More

(க.கிஷாந்தன்) உலக அஞ்சல் தினத்தன்று (09), நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் பிரதான அஞ்சல் அலுவலகம் முன்பு கறுப்பு கைப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களை அவமதிக்கும் வகையில் அஞ்சல் மா அதிபர் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. இன்றைய தினம் மதிய உணவு நேரத்தில் ஊழியர்கள் தபால் நிலையத்தை மூடிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில தபால் நிலையங்கள், பிராந்திய தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களின் ஊழியர்கள் கறுப்பு கைப்பட்டி அணிந்து பணிக்கு சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.

Read More

இலங்கையின் இளம் தலைமுறையினருக்கு கல்வி, தேடல் மற்றும் படைப்பாற்றலுக்கான பாதுகாப்பான டிஜிட்டல் தளம் TikTok (TikTok நிறுவனத்தின் தெற்காசியாவுக்கான பொதுக் கொள்கை மற்றும் அரசாங்க உறவுகளுக்கான தலைவர் ஃபெர்டௌஸ் மொட்டாகின்) டிஜிட்டல் தளங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கான இடங்கள் அல்ல, மாறாக அறிவுப் பரிமாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவிகள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இலங்கையின் கல்வித் துறையின் டிஜிட்டல் மாற்றம் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் TikTok இன் STEM Feed இன் அங்குரார்ப்பண விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுடன், இதில் இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அரசாங்கத்தின் உயர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு, உலகளாவிய தளங்கள் மற்றும் தேசிய கல்வி முயற்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. கற்போரையும் கற்பிப்போரையும் வலுப்படுத்த டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதில் இலங்கையின் தெளிவான பாதையைக் காண்பது உற்சாகமூட்டியது. அந்த மேடையில் நின்று, மாணவர்களின்…

Read More

‘கரம் கொடுப்போம் கடைசி மூச்சு உள்ளவரை’ என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக இயங்கி வருகின்ற தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் முப்பத்து மூன்றாவது செயல் திட்டம் கண்டி மாவட்டத்தின் குருந்துவத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமர்செட் தோட்டம், உடகநயந்தன்ன, கம்பளையில் உலக சிறுவர் தின நிகழ்வுகளுடன் இனிதே நடைபெற்றது. உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 04.10.2025ம் திகதி சனிக்கிழமையன்று சமர்செட் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளில் பங்குப்பற்றிய சிறுவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் முகமாகவும், சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும் தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.எல்.எம் ஹசீம் அவர்களின் ஆலோசனைக்கு இணங்கவும், செயலாளர் எஸ்.யசோதை அவர்களின் அமுலாக்கத்திலும் அமைப்பின் அனைத்து அங்கத்தவர்களின் நெறியாள்கையிலும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தனியின் சிறகுகள் சமூக நலன்புரி அமைப்பின் பூரண நிதி அனுசரணை ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வுகள் யாவும் இறைவழிபாட்டுடனும், மங்கள குத்துவிளக்கேற்றலுடனும், சிறப்பு அதிதிகள்,…

Read More

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் நல்லதண்ணி லக்ஸபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் நள்ளிரவு இடம்பெற்ற தீ விபத்தினால் அத் தொழிற்சாலைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலைக்கும் அதன் உடமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான தேயிலை அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேயிலை தூள் உற்பத்திப் பகுதியில் ஏற்பட்ட தீ, தேயிலை கொழுந்து சேமிக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கு பரவி, பொதி செய்யப்பட்டு முடிக்கப்பட்டிருந்த தேயிலை தூளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பரவத் தொடங்கிய தீ, தேயிலை தொழிற்சாலையின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தோட்டத் தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை, மேலும் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தீ விபத்து குறித்து நல்லதண்ணி பொலிஸார்…

Read More