Author: Thana
இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனவே, சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பல்வேறு வருமான ஆதாரங்களை வழங்குவதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் செய்யும் மோசடி தூண்டுதல்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல், கணக்கு இலக்கங்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற இரகசியத் தகவல்களை வெளியாட்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள வீதித் தடையில் இருந்த பொலிஸார், மோட்டார் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், உத்தரவை மீறி மோட்டார் வாகனம் பயணித்துள்ளது. அப்போது, பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. நிற்காமல் சென்ற மோட்டார் வாகனம், பின்னர் மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் வாகனத்தில் இரண்டு பேர் பயணித்திருந்த நிலையில், அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) தலைவர் உட்பட அதன் சிரேஷ்ட முகாமைத்துவம் ஜனாதிபதியை சந்திந்தது
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) தலைவர் உட்பட அதன் சிரேஷ்ட முகாமைத்துவம் ஜனாதிபதியை சந்திந்தது இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார். ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)மற்றும் அதன் சிரேஷ்ட முகாமைத்துவம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தது. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடனுதவியின் கீழ் இதுவரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்குவதாக தலைவர் இங்கு தெரிவித்தார். அதன்படி, இலங்கையில் வலுசக்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதுடன், பசுமை வலுசக்தி, பசுமை போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி எதிர்காலத்தில் ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
(க.கிஷாந்தன்) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவர் காயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலையில் இருந்து ஹட்டன் நோக்கியும், ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கியும் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கொட்டகலை நகர மைய பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளன. விபத்து குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகத் தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது. மேலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்னவென்றால், இருமல் அல்லது சளி போன்ற ஒரு சிறிய நோய் ஏற்பட்டால் கூட அது மரணத்திற்கு வழிவகுக்கும். எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படக்கூடிய மூன்று முக்கிய வழிகளை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 1. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்வது எச்.ஐ.வி நோயாளியை முத்தமிடுவதால் நோய் பரவாது. எனினும் பாலியல் ரீதியான உடலுறவினால் பரவுகின்றது. குறிப்பாக ஆசனவழி உடலுறவுதான் எச்.ஐ.வி வருவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. இதுபோன்ற பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவக்கூடிய எச்.ஐ.வி வைரஸ், உடல் முழுவதும் சுமார்…
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (07) தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் பவுண் தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது கடந்த வௌ்ளிக்கிழமை 283,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில், கடந்த வாரம் 306,000 ரூபாவாக நிலவிய 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இலங்கை தபால் திணைக்களத்தின் அஞ்சல் உதவியாலர்களாக தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்காக நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் (06) பிற்பகல் அலறி மாளிகையில் இடம் பெற்றது. 2021 ம் ஆண்டின் பின்னர் தபால் திணைக்களத்திற்கு நிரந்தர அஞ்சல் உதவியாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படவில்லை என்பதுடன் அதனால் கடந்த வருட இறுதியில் தபால் திணைக்களத்தில் 1982 அஞ்சல் உதவியாளர்களுக்கான வெற்றிடம் காணப்பட்டது. அந்த வெற்றிடங்களின் எண்ணிக்கையுடன் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடும் சிக்கலான நிலை தோன்றியதுடன் அதற்கு தீர்வாக 1000 சம்பந்தப்பட்ட வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கோரிக்கைக்கு அமைவாக 2025 ஆகஸ்ட் 19 ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதன்படி இதுவரை தபால் திணைக்களத்தில் மாற்றுத்திறனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ளவர்களில் 731 பேர் இவ்வாறு…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ஏட்பாட்டில் தலசீமியா குழந்தைகளுக்கான விசேட சுற்றுலா
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) அக்டோபர் 5 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தலசீமியா பிரிவில் சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கான விசேட சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தது. சேவா வனிதா பிரிவின் தலைவி Dr. திருமதி ருவினி ரசிகா பெரேரா தலைமையிலான இந்த நிகழ்ச்சி, அச்சிறுவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அவர்களின் கலாச்சார மற்றும் கல்வி அனுபவங்களை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மேட்கொள்ளப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, கண்டி மெழுகு அருங்காட்சியகம், தலதா மாளிகை, ஹந்தான பறவைகள் பூங்கா மற்றும் தேயிலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இதன் மூலம் இலங்கையின் பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு பற்றிய குழந்தைகளின் அறிவை வளர்க்க மற்றும் மருத்துவமனையின் சூழலுக்கு அப்பால் அவர்களுக்கு சிறந்த மகிச்சியூட்டக்கூடிய அனுபவத்தையும் அடைய இது வழிகோலியது. சமூகப் பொறுப்பு…
டிக்கோயா பிலிங்போனியை சேர்ந்த ராமசாமி தயாபரன் (35வயது )என்பவரை 2025.09.30 அன்று காலை 6.45 ல் முதல் காணவில்லை என அவரின் குடும்ப உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளனர். இவர் தொடர்பான தகவல் கிடைத்தால் 0772545708 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு குடுபத்தினர் மேலும் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.