Author: Thana
2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடரின் பிளே-ஓஃப் சுற்றை நெருங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்கள் வீரர் கட்டமைப்பில் கடைசி நேர அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. அதன்படி, ஜெப்னா கிங்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரானுக்குப் பதிலாக பாகிஸ்தானின் இளம் விக்கெட் காப்பு வீரரான கவாஜா நபாயை ஒப்பந்தம் செய்துள்ளதுடன், அவர் சனிக்கிழமை முதல் அணியுடன் இணைந்து தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடவுள்ளார். மறுபுறம், தம்புள்ள சிக்சர்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபஸல்ஹக் ஃபரூக்கிக்கு மாற்றீடு வீரராக பாகிஸ்தானின் முன்னணி சகலதுறை வீரர் இப்திகார் அஹமட்டை ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே, தம்புள்ள சிக்சர்ஸ் அணி, இம்முறை எல்.பி.எல் தொடரில் பிளே-ஓஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் பட்சத்தில் இவர் அணியுடன் இணைவார். இதேவேளை, ஏற்கனவே பிளே-ஓஃப் சுற்றை உறுதிசெய்துள்ள…
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நள்ளிரவு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (04 ஆம் திகதி) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் மகாவலி கங்கையை அண்மித்துள்ள: உடுநுவர உடபலாத யடிநுவர கங்கஇஹல கோரள பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் மழை பெய்யக்கூடும் என்பதால், குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மகாவலி கங்கையை அண்டியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு பகுதிகள் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட எச்சரிக்கை (Level 2 – Amber): கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ மற்றும் நோர்வுட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்ட எச்சரிக்கை (Level 1 – Yellow): கேகாலை மாவட்டம்: அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு இரத்தினபுரி மாவட்டம்: நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலவெடிப்பு, மரங்கள் சாய்தல் மற்றும் திடீர்…
சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியாவில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படுவதுடன், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இடிமின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். [கடற்பகுதி வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை] புத்தளத்திலிருந்து கொழும்பு,…
மலையகத்தில் சீரற்ற வானிலை: ஹட்டன் மற்றும் நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து அதிபர்களே தீர்மானிக்க அனுமதி!
மத்திய மாகாணத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் விடுமுறை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண பிரதம செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பிரதேசத்தின் நிலவும் வானிலைச் சூழலைக் கருத்திற் கொண்டு, தத்தமது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!
கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு! மத்திய மாகாணத்தில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், கலஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீழாத்தோட்டம் பகுதியில் நடு இரவில் துணிகரத் திருட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கீழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பிரதான உண்டியலையும் வழிபாட்டிற்குரிய வேல் மற்றும் பல பெறுமதியான பொருட்களையும் களவாடிச் சென்றுள்ளனர். இதேவேளை, அதே பிரதேசத்தில் ஆலயத்திற்கு அருக3மைந்திருந்த சிறிய வியாபார நிலையம் ஒன்றின் பூட்டையும் உடைத்து, அங்கிருந்த பணமும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கலஹா பொலிஸாரும் கம்பளை தடவியல் பிரிவு பொலிஸாரும் உடனடியாகச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தடயங்களைச் சேகரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எமது நிருபர் – க. யோகா.
கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை
கண்டி – கலஹா பிரதான வீதியின் நில்லம்பை பகுதியில் பிரதான வீதி மீது பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இங்கு நிலவிவரும் கடுமையான மழை காரணமாகவே இந்த கற்பாறை சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வீதியின் நடுவே விழுந்துள்ள இந்தக் கற்பாறையை அகற்றுவதற்கு இதுவரை எந்தவொரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாகன ஓட்டுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக அவ்வழutaச் செல்லும் வாகனங்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு, மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டிய ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குறித்த பகுதி ஊடாகப் பயணம் செய்யும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் விழிப்புடன் செயற்படுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு கற்பாறையை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை. மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நீர் ஏந்து பகுதிகளான மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் நேற்றைய தினம் 117 .5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது அதேபோல் லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் 183.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்க பட்டு உள்ளது.மேலும் சாமி மலை ஓயா மரே ஓயா சியத்தலகங்குல ஓயா காட்மோர் ஓயா சிற்றாறுகள் காட்மோர் நீர் வீழ்ச்சி மோகினி எல்ல நீர் வீழ்ச்சி மறே நீர் வீழ்ச்சி லக்சபான நீர் வீழ்ச்சி களில் அதிக அளவில் வெள்ளம் பாய்ந்த நிலையில் உள்ளது. …
நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!
2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில், எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ, விநியோகிப்பதோ முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சை வினாக்களுக்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனப் பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.