Author: Thana
புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
*புத்தளம் முதல் பொத்துவில் வரை கடற்றொழில் தடை நீடிப்பு: கடலில் மிதக்கும் 15 கொள்கலன்கள் குறித்து மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடற்றொழில் பணிப்பாளர் நாயகம்* நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் நிலவிய சீரற்ற காலநிலை ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும், புத்தளம் முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பில் தொடர்ந்தும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலவுவதால், விதிக்கப்பட்டுள்ள கடற்றொழில் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். அதற்கமைய புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் சிறு மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகள் தொழிலுக்குச் செல்வதற்கான தடை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய கடற்பரப்பு வழமைக்குத் திரும்பியவுடன் இந்தத் தடை நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். கடந்த சில…
கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் முதல் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ண்டி ,நுவரெலியா மாவட்டத்தின் சகல அரச பாடசாலைகளுக்கும் இன்று (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – பொல்பிட்டிய பகுதியில் வீடு மீது மண்மேடு சரிந்து காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு!
ஹெட்டன், கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்தத் துயரச் அசம்பாவிதம் சம்பவித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல் போயிருந்தனர். அவர்களைத் தேடும் நோக்கில் பொலிஸார், பாதுகாப்புப் பகுதியினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களின் ஊடாக மேலும் இரண்டு பெண்களினதும், ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொல்பிட்டிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தொடர் மழைக் காரணமாகப் பிராந்தியத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதால், மலையகப் பகுதி மக்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவப்…
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி 06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும், எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் குறித்தும்…
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு 65 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போதைய சீரற்ற காலநிலை நிலவரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலையினால் கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாவலப்பிட்டி பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.
ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பலத்த மழை வீழ்ச்சியுடனேயே இப் விபத்து சம்பவித்துள்ளது. காணாமல்போன நபர்களைக் கண்டறிவதற்காக தற்போது பரந்த அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனர்த்த நிலைமைகள் காரணமாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.
மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மத்திய மாகாண பிரதான லேமாவின் அறிவுறுத்தலுக்கமைய, நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (2026.08.04) ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்கள் தொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செ.திவாகரன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று உபரிநீர் வழித்தடங்கள் இன்று காலை (03) தானாகவே திறக்கப்பட்டுள்ளன என நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது காணப்படும் மோசமான மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தால் மீதமுள்ள வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படலாம் எனவும் அப்பகுதியில் சென் கிளைய்ர் (St. Clair’s) மற்றும் டெவன் (Devon) நீர்வீழ்ச்சிகளின் நீர் வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர் . கொத்மலை ஓயா நீர்த்தேக்கத்திற்குக் கீழ் பகுதி இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் மற்றும் நீர் நிலைகளைப் பயன்படுத்துபவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு
நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு. இன்று நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நுவரெலியா நகரை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியான மழை காரணமாக பல இடங்களில் சிறிய மண் சரிவுகளும், மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு, வலயத்திற்குட்பட்ட பெரும்பாலான தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேவேளை, பெரும்பாலான சிங்கள மொழி பாடசாலைகள் வழக்கம்போல் இயங்கின. எனினும், சில பாடசாலைகளில் விடுமுறை தொடர்பான அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உரிய நேரத்தில் சென்றடையாததால், பல மாணவர்கள் வழக்கம்போல் பாடசாலைக்கு வந்து பின்னர் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அவசர அறிவிப்புகள் விரைவாகவும் துல்லியமாகவும் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட…
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக, இரண்டு வெவ்வேறு தோட்டப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் இடர் நிலவரங்களால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான பிலக்வாட்டர கெனில் வத்த பகுதியில், இரவு முழுவதும் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர், இன்று (3ஆம் திகதி) அதிகாலை வேளையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உரித்தான மேபில்ட் தோட்டத்தின் ரொப்கீல் பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, 30 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனிடையே, நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான காலப்பகுதியில் பதிவான…