Author: Thana

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (04) இரவு 8.10 மணியளவில் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை. இதன்போது, வெதுப்பக உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபருடன் போராடி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளார். பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வெதுப்பக உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Read More

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேவேளை, குறித்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து, மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது உடமைகளில் பெரும்பாலானவற்றை இழந்து பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு, நாளை (05) ஹட்டன் கல்வி பணிமனைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Read More

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தத் திருத்தச் சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, தயாரிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

கடந்த 04 நாட்களில் வட்டவளைப் பகுதியில் 661 மில்லிமீற்றர் அளவிலான மிக உயர்ந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். நேற்று ஒரு நாளில் மட்டும் அப்பகுதியில் 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இது நேற்று பதிவான மிக உயர்ந்த மழைவீழ்ச்சி அளவாகும். அத்துடன், அம்பகமுவை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 3 நாட்களில் 150 முதல் 500 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய காலநிலை மாற்றங்களின் தாக்கம் காரணமாகக் குறுகிய காலத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவது தற்போது சாதாரண நிகழ்வாக மாறியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி வசந்த சேனாதீர, இந்த நிலைமையை முன்னர் பதிவான ‘திட்வா’ சூறாவளி காலத்துடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மலையகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதால்,…

Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா – நோர்ட்டன் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் கெனியன் பகுதியில் 234.6 மில்லிமீற்றரும், லக்ஷபானவில் 208 மில்லிமீற்றரும், காசல்ரீயில் 164 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், மாவுஸ்ஸாக்கலையில் 125 மில்லிமீற்றர், மேல் கொத்மலையில் 110.3 மில்லிமீற்றர் மற்றும் கொத்மலைப் பகுதியில் 105 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் தற்போது வானிலை சீரடைந்து வருவதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமை போல் தொடர்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன், இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கினிகத்தேனை, மொரஹேன கிராமப் பகுதியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோன்று, அம்பகமுவை பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வெள்ள நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிலிருந்து 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் உடனடி பாதுகாப்பு நடவடிக்கையாக 20 இடைத்தங்கல் நலன்புரி மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்கும் பணிகள் மாவட்ட…

Read More

நுவரெலியா மாவட்டம் முழுவதும் தற்போது மழைப்பொழிவு குறைந்து, ஒப்பீட்டளவில் சீரான காலநிலை நிலவி வருகிறது. எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவுவதுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மொத்தமாக 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். * தற்போதைய நிலவரப்படி, 20 நலன்புரி முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் தொடர்ந்து தங்கியுள்ளனர். * இது தவிர, உறவினர்களின் வீடுகளில் 224 குடும்பங்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனிடையே, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருவதை தொடர்ந்து, முகாம்களில் தங்கியுள்ளவர்களை விரைவாகத் தங்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த நாட்களில் பதிவான அனர்த்த சம்பவங்களில் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இவர்களில் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் தொடர்பில் தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டு…

Read More

கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா! ‘வளமான நாடு அழகான வாழ்க்கையை“ நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்த செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கும்  ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். கலவானை -டிப்டீன் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு,  (03.082026) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவி்த்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நில தாழ்விறக்கம் காரணமாக பாதிப்புக்குள்ளான குறித்த பாடசாலையானது, கடந்த 5 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில், தோட்ட கோவிலிலேயே இயங்கி வந்தது. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்றிட்டத்தினுடன் இந்த பாடசாலைக்காக காணி ஒதுக்கப்பட்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்…

Read More

மாவட்டங்கள் பலவற்றில், குறிப்பாக கொழும்பு, கம்பஹா, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 1,880 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 129 சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வரை அதிகரிக்கலாம் என்பதால், இப்பகுதிகளில்  பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆறு மற்றும் நீர் மட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், களு கங்கை மற்றும் மகாஓயா பகுதிகளில் நீர் மட்டம் குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, காலி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழைவீழ்ச்சி 80 முதல் 200 மி.மீ வரை பதிவாகியுள்ளதால், சில பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. வளி மண்டளவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் 75 மி.மீ-க்கு அதிகமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி,…

Read More