Author: Thana
சமந்த வித்தியாரத்னவிற்கும், இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு! பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுக்கு, அரசாங்கத்திற்கும் செந்தில் தொண்டமான் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், ரூ.1,750 சம்பளம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும், தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான், தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் ரூ.1,750 சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதேவேளை, தோட்ட தொழிலாளர்களின் 1750 ரூபாய் சம்பளத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் 200 ரூபாய் கொடுப்பனவை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கி கணக்கு இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு, வங்கி கணக்குகளை ஆரம்பிக்க தொழிற்சங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர்…
சிறைச்சாலை கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில்
சிறைச்சாலை கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில் சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா…
மேலைத்தேய நாடுகளில் பகவத் கீதையின் செல்வாக்கு பகவத் கீதை என்பது உலகளாவிய ரீதியில் தத்துவக் கோட்பாடாகவும் மற்றும் ஒழுக்க, ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு நூலாகவும் அமைகின்றது. அது ஆத்மாவின் ஞானத்தைப் பகிர்ந்தளித்து, இரண்டு உலகளாவிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. நான் யார்?;, இருமைகளும,; குழப்பங்களும் நிறைந்த இந்த உலகில் நான் எப்படி மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்? என்ற கேள்விகளுக்கு பதிலலிக்கின்றது. வாழ்க்கைப் போருக்கு நம்மை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பதை பகவத் கீதை நமக்குக் கற்பிக்கிறது . நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் படிப்பது நமது மனதைத் தூய்மைப்படுத்தி, நவீன வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நமக்கு வழிகாட்டி, அக அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது. கீதை, உபநிடதங்கள் மற்றும் வேதாந்தத்தின் சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆத்மஞானம் எனும் ஆன்மீக அறிவியலைக் கற்பிக்கிறது. இது அனைத்து மனிதர்களுக்கும் ஆன்மீக முன்னேற்றத்தையும், பரம்பொருளுடன் எவ்வாறு ஒன்றிப்போவது என்பதையும் உறுதி செய்கிறது. அதன் போதனைகள்…
செல்வின் தாஸ் தயாரிப்பில், அசோன்வே பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், பிரபல இந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர் வருண் திவாரி இணைந்துள்ளார்*
*செல்வின் தாஸ் தயாரிப்பில், அசோன்வே பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், பிரபல இந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர் வருண் திவாரி இணைந்துள்ளார்* இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்திய சினிமாவிலும் பன்முக பண்பாட்டு சர்வதேச திரைப்பட உலகிலும் தடம் பதித்துள்ள வருண் திவாரி, ஆஸ்திரேலிய மற்றும் இந்தியத் திரைத்துறையில் சிறந்த துணை நடிகருக்கான சர்வதேச விருதுகளைப் பெற்றவர் என்பதுடன், மேடை நாடகங்கள் மற்றும் உலகளாவிய அளவிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அனுபவமிக்க கலைஞர் ஆவார். சர்வதேச நட்சத்திர அந்தஸ்து கொண்ட இவரின் வருகையானது, இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் மேலும் உயர்த்தியுள்ளது. பல்வேறு உலகளாவிய…
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்களின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி!
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்களின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்களின் பூதவுடலுக்கு இன்று(20) நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் தனது இரங்கல் செய்தியில், முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிப்பதாக தெரிவித்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அமைதியான, பணிவான, கடமையுணர்வுமிக்க அதிகாரியாக அவர் நாட்டிற்கு கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர் என்ற நினைவு என்றும் நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கை காவல்துறையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி
உயிரிழந்த இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மனுவின் பின்னணி இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி ‘வொரன்ட்’ அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில் பெயரிடப்பட்ட பிரதிவாதிகள்: மைத்திரிபால சிறிசேன (முன்னாள் ஜனாதிபதி) ரணில் விக்கிரமசிங்க (முன்னாள் ஜனாதிபதி) அநுர குமார திஸாநாயக்க (தற்போதைய ஜனாதிபதி) மற்றும் அரச அதிகாரிகள் பலர். நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த சுற்றறிக்கைகள் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகத் தெரிவித்து மனுதாரரால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், மனுவை மேற்கொண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குப் போதிய சட்டப்பூர்வ நியாயங்கள் இல்லை எனத் தெரிவித்த உயர் நீதிமன்ற அமர்வு, அதனை ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரித்து உத்தரவிட்டது.
இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் உத்தியோகபூர்வ திருமணப் பதிவுகளின் எண்ணிக்கை 28 சதவீதத்தால் கணிசமாகக் குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு: நாடு முழுவதும் சுமார் 160,000 திருமணங்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன. 2023 ஆம் ஆண்டு: இந்த எண்ணிக்கை சுமார் 115,000 ஆகக் குறைந்துள்ளது. மொத்தச் சரிவு: 15 ஆண்டு காலத்தில் பதிவுகளில் 28% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. சமூக மற்றும் பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த மாற்றத்திற்குப் பின்வரும் காரணிகள் முக்கியப் பங்காற்றுகின்றன: பொருளாதாரச் சவால்கள்: அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக இளைஞர்கள் திருமணத்தை ஒத்திவைக்கின்றனர். வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்விக்காக பெருமளவிலான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது. வாழ்க்கைமுறை மாற்றம்: தொழில்முறை இலக்குகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் குடும்ப அமைப்பு முறைகளில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றங்கள். நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துள்ள போதிலும்,…
உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்
உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) சாரணர் குழுவின் தலைவர் கலாநிதி எம். சின் பின் பிடின் உள்ளிட்ட உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பிராந்திய சாரணர் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இப்பிரதிநிதிகள் குழுவுடன், இலங்கையின் சாரணர் இயக்கத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி மற்றும் அதனை கிராமிய மட்டம் வரை மேலும் விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்திற்கு, வெளிநாட்டு அனுபவங்கள் மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டு, சாரணர் இயக்கத்தின் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஆசிய-பசுபிக் பிராந்திய…
விடைபெறுகிறேன் – இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி உருக்கமான செய்தி
விடைபெறுகிறேன் – இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி உருக்கமான செய்தி இரு புனிதத்தலங்களின் காவலரின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான தூதுவராக எனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் இவ்வேளையில், எனது பதவிக்காலம் முழுவதும் இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய சிறந்த விருந்தோம்பலுக்கும் ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்குப் பங்களித்தமை எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும். நமது இரு நாடுகளுக்குமிடையிலான நீடித்த உறவுகள் குறித்த மிகுந்த பெருமையுடனும், நமது நட்பு நாடுகளினதும் மக்களினதும் நலன்களுக்குப் பயனளிக்கும் வகையில் நமது இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வளர்ந்து செழித்தோங்கும் என்ற முழுமையான நம்பிக்கையுடனும் நான் இலங்கையிலிருந்து விடைபெறுகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தனது பிரியாவிடை செய்தியில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.