Browsing: இலங்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர். அந்த சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய…

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்…

இலங்கை பிரஜைகள் எந்த காரணத்துக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்வதாயின் அதிலும் தமக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டம் காரணமாக செல்வார்களாயின் அதற்கு அரசாங்கமாக முடிந்தவரை நாம் உதவுவோம். அதனால் சட்டவிரோதமான…

உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் போல, கலைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின்…

ஊவா மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ ‘ஜன சஹன’ நடமாடும் சேவையின் இரண்டாவது வேலைத்திட்டம் நேற்று மே மாதம் 14 ஆம் திகதி வெல்லவாய…

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை துரிதப்படுத்துமாறு காணி அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். முன்னுரிமைகளை இனங்கண்டு இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் மேலும் ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 07 விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை குறைக்கும் திட்டம் 03 கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. கொழும்பிற்கு வெளியே நீர் போக்குவரத்து மேம்பாடு மற்றும் நகர  நிலத்தை அலங்கரிக்கும் திட்டம், பலன்கஸ்துடுவ நீரேற்று நிலைய திட்டம், மழைநீர் நீரேற்று நிலைய வெள்ள வாயில்கள் உட்பட வெள்ள கட்டுப்பாட்டு வசதி செயற்பாடு மற்றும் பராமரிப்பு திட்டம், ஒருங்கிணைந்த வெள்ள முகாமைத்துவ அமைப்பு மற்றும் நிகழ்நேர கட்டுப்பாட்டு தரவு மைய நடைமுறைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு திட்டம், பிலியந்தலை முதன்மை அபிவிருத்தி திட்டத்தின் நீர் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பாராளுமன்றத்தின் மேல் நீர் பிடிப்புப் பகுதியான பத்தரமுல்ல நீர் பிடிப்புப் பகுதியின் நீர் போக்குவரத்து மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டம் என்பன அந்த 7 திட்டங்களாகும். இவற்றில் 02 வேலைத்திட்டங்கள் இவ்வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலியந்தலை முதன்மை அபிவிருத்தி திட்டத்தில் நீர் போக்குவரத்து மேம்பாட்டு திட்டம் மற்றும் பாராளுமன்றத்தின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதியான பத்தரமுல்லை நீர்நிலையில் நீர் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 203 மில்லியன் ரூபா. மேலும், பேலியகொடையில் தற்போதுள்ள நீரேற்று நிலையத்தை மேம்படுத்தும் திட்டமும் இவ்வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 2019ஆம் ஆண்டு முதல் மாதிவெல தெற்கு மாற்றுப்பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. களு பாலத்தில் முன்மொழியப்பட்ட Gate Mounted Pumps களை நிறுவுதல், நிர்மாண வேலைத் திட்டம் 2021 முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இரண்டு திட்டங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முறையே 10 இலட்சம் ரூபாய் மற்றும் 90 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுடன் கொழும்பு கால்வாய்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பும் வெள்ளத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜப்பபான்  கோர்ஸ் புல், சல்வீனியா, ஆக்கிரமிப்பு செடிகள் என்பதால் கால்வாய்களில் வளர்ந்துள்ள இச்செடிகளை அகற்றி, நகர  பொலிதீன் மற்றும் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, மனித உழைப்பு மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி கால்வாய்களை சுத்தம் செய்கின்றனர். இப்பணிகள் ஆண்டுதோறும் செய்யப்பட வேண்டியுள்ளதால், இத்திட்டம் ஆண்டு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்…

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோருடன் கல்முனையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விசேட…

இரத்தினபுரி சூரியகந்த புலுதொட்ட பல்லபெந்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்(14) இருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்குறிப்பிட்ட வீதியில் தனியார் பேருந்து ஒன்றில் உந்துருளி ஒன்று மோதியதில்…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,…

நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்க்காக ஏற்றுக்கொண்டது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…