Browsing: இலங்கை
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. இதனடிப்படையில், அமெரிக்க டொலரின்…
பதுளையில் கணனிப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 80 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கைத்தொழில் அமைச்சின் மேற்பார்வையில் பதுளை மாவட்ட செயலகத்தின் “அருணோதய” என்ற தொனிப்பொருளின் கீழ் பதுளை மாவட்ட விதாதா பிரிவின் ஊடாக நடைபெற்ற மூன்று மாத கால கணனிப்…
உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையினை நிலையாகப் பேணுவதற்காக ஏப்ரல் 30 வரை அவசியமான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
2023 (2024) உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறைத் பரீட்சை இன்று 19 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட…
வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்ட வேலை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பூவரசங்குளம் சந்தி பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று…
அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இளம் விவசாயி
அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
அநுராதபுரத்தில் செயல்பட்டு வரும் முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்…
பொருளாதார சிக்கலினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்காக தேசிய கடன் பிணை நிறுவனத்தினை நிறுவுதல் உட்பட சகல நடவடிக்கைளுக்காகவும் 100 மில்லியன்…
மேல் மாகாணத்தில் வருடாந்த சுகாதார இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவேண்டுகோளுக்கு இணங்க, மேல்மாகாண ஆளுநர் எயர்வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். மேல்மாகாணத்தில் வருடாந்த இடமாற்றங்கள் முறைசாரா முறையில் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி மேல்மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் இன்று (18) நகர அபிவிருத்தி அமைச்சின் பொது மக்கள் தினத்திற்கு வந்து தமது முறைப்பாடுகளை முன்வைத்தனர். மேல் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 300 மருத்துவமனை ஊழியர்கள் அமைச்சரைச் சந்திக்க வந்தனர். முறைசாரா முறையில் இந்த வருடாந்த இடமாற்றங்கள் இடம்பெற்றதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அப்போது மேல்மாகாண ஆளுநர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களுடன் மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று ஆளுநரை சந்தித்தார். இதன்போது உண்மைகளை விளக்கிய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், இந்த வருடாந்த இடமாற்றங்களை மேற்கொள்வதில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். சில சுகாதார தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஊழியர்கள் தெரிவித்தனர். நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி சுகாதார சேவையை சீர்குலைத்து அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்கு சில சுகாதார சங்கங்கள் செயற்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு தெரிவித்தார். பெரும்பான்மையான சுகாதார ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்களை தற்காலிகமாக ரத்து செய்து முறைப்படி நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இந்த இடமாற்றங்களை தற்காலிகமாக இரத்து செய்து வருடாந்த இடமாற்றங்களை எவ்வித பிரச்சினையும் இன்றி சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்துமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பின்னர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண சபையின் தரைத்தளத்தில் உள்ள சுகாதார ஊழியர்களிடம் வந்து சில சுகாதார சங்கங்கள் சுகாதார சேவையை சீர்குலைக்க சதி செய்வதால் குறிப்பிட்ட சில சுகாதார சங்கங்கள் மீது வீழ்ந்து விட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தை சங்கடப்படுத்தவே அவர்கள் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.