Author: Thana
மஸ்கெலியா சாமிமலை – காட்மோர் பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தம்: பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அவதி !
ஹட்டன் SLTB பணிமனை பேருந்துகள் ஒரு வாரமாக முடக்கம்; மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி! மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) இயக்கப்படும் சாமிமலை – ஹட்டன் மற்றும் காட்மோர் – மாஸ்கெலியா ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பாடசாலைப் பேருந்துகள் கடந்த ஒரு வார காலமாக இயங்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தினமும் காலை 06.30 மணிக்கு சமிமலை நகரத்திலிருந்து புறப்பட்டு மாஸ்கெலியா வழியாக ஹட்டனுக்குச் செல்லும் பேருந்தும், காலை 06.15 மணிக்கு காட்மோரிலிருந்து புறப்பட்டு மஸ்கெலியா நகருக்குச் செல்லும் பேருந்தும் கடந்த ஒரு வாரமாக சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்தப் பேருந்துகள் மஸ்கெலியா நகரில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமியப் பாடசாலைகளுக்கும், ஹட்டன் நகரில் உள்ள பிரபல சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் செல்லும் பெருமளவான…
தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.
தித்வா சூறாவளியில் உயிரிழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 50 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார். கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் உடதும்பர, கங்கொட பகுதியில் வசித்து வந்த தல்கஸ்பிட்டிய கம்லத்கே ஹசித உதயங்க என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 13 உறவினர்கள் உயிரிழந்தனர். அவரது வீடு உட்பட அனைத்து சொத்துகளும் மண்சரிவினால் முற்றாக சேதடைந்தன. பாதிகப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடொன்றை வாங்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமைய, கொடகவெல பிரதேச செயலகப் பிரிவின் மெத்தேகம, ஆசிரி மாவத்தையில் அமைந்துள்ள புதிய காணிக்காக 50 லட்சம் ரூபா நிதியுதவியினை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இன்று [02.06.2026] கொடகவெல பிரதேச செயலகத்தில் நிதியுதவிக்கான காசோலையை பயனாளிக்கு வழங்கி வைத்தார். இந்த உதவியின் மூலம் பாதிகப்பட்ட குடும்பம்…
முதியவர்களின் பாதுகாப்பு: காவல்துறை அதிரடி எச்சரிக்கை – பொதுமக்கள் அவதானம் தேவை! நாட்டில் தனியாகவும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலும் வாழும் முதியவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து பொதுமக்கள் அதீத அவதானத்துடன் இருக்க வேண்டும் என காவல்துறை அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் பிள்ளைகள் மற்றும் இடம்பெயர்ந்த குடும்ப உறுப்பினர்கள் காரணமாக, முதியவர்கள் தனிமையில் வசிக்கும் சூழல் அதிகரித்துள்ளது. இந்த நிலையைச் சாதகமாக்கிக் கொள்ளும் குற்றவாளிகள், முதியவர்கள் வசிக்கும் வீடுகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள், முதியவர்கள் வசிக்கும் வீடுகளில் புகுந்து நகை, பணம் மற்றும் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இத்தகைய சம்பவங்கள் வன்முறைத் தாக்குதல்களாகவும், சில நேரங்களில் கொலைகளாகவும் முடிவடைவது மிகுந்த கவலையளிப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொதுமக்களுக்கான காவல்துறை அறிவுறுத்தல்கள் முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்: பாதுகாப்பு வசதிகள்:…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி. நுவரெலியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டுட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாகவும் இவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களுக்கு தற்போது உடல்நிலை சற்று தேறிவருவதாகவும் ஆபத்தான எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வைத்திய சாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் . இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளவத்தையில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு – அடையாளம் தெரியாத உடலம் களுபோவில வைத்தியசா லையில்
வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் சனிக்கிழமை (30) மாலை நிகழ்ந்த கொடூர விபத்தில், ரயிலில் மோதி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பொலிஸ் தரப்பில் இருந்து கிடைக்கும் முதற்கட்ட தகவல்களின்படி, பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த பெண் மோதியுள்ளார். இக்கோர விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், வெள்ளவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த பெண் யார் என்பது குறித்த எந்தவொரு விபரமும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் அவரது அடையாள விபரங்களை வெளியிட்டுள்ளனர்.விபத்து நடந்த போது அவர் வெள்ளை மற்றும் பழுப்பு (White and Brown) நிறங்கள் கலந்த சேலை அணிந்திருந்தார்,அவரிடம் ஒரு பச்சை (Green) நிறக் கைப்பை இருந்தது.தற்போது உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காகவும், உறவினர்களால் அடையாளம் காணப்படுவதற்காகவும் களுபோவில போதனா மருத்துவமனையில் (Kalubowila Teaching Hospital) வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தற்கொலையா அல்லது…
எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. மண்ணெண்ணெய் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
டிக் டொக் பார்க்க கைபேசி தராததால் கொடூரம்: 11 வயதுச் சகோதரியைக் கொலை செய்த 14 வயது அண்ணன் கைது!
டிக் டொக்’ (TikTok) பார்ப்பதற்காகத் தன் கைபேசியைத் தர மறுத்த 11 வயதுச் சொந்தச் சகோதரியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தைக் குளியலறைத் தண்ணீர் தொட்டியில் வீசிய குற்றச்சாட்டின் கீழ் 14 வயதுச் சிறுவன் ஒருவனை ஏறாவூர் பொலிஸார் இன்று (30) கைது செய்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் ஏறாவூர்றில் கடந்த வியாழக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்11 வயதுச் சிறுமியே படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், தந்தையார் சம்பவ தினத்தன்று வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருந்துள்ளார். இதனால் வீட்டில் 14 வயதுடைய அண்ணனும், 11 வயதுடைய தங்கையும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர். இதன்போது, ‘டிக் டொக்’ பார்ப்பதற்காகத் தங்கையிடம் இருந்த கைபேசியை அண்ணன் கேட்டுள்ளார். அதற்குத் தங்கை மறுக்கவே, இருவருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 14 வயதுச் சிறுவன், தன் தங்கையின் கழுத்தை நெரித்துக்…
அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கரும் ருவன்வெலி சைத்தியாராமாதிகாரியுமான வணக்கத்திற்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மல்வத்து மகா விகாரை இன்று (30) அறிவித்துள்ளது. மல்வத்து மகா விகாரைப் பிரிவின் கண்டி வலயத்தின் பிரதம சங்கநாயக்கரும் தற்போதைய அட்டமஸ்தானாதிபதியுமான வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்வத்து பிரிவின் செயலாளர் கலாநிதி வணக்கத்திற்குரிய பஹமுணே சுமங்கல நாயக்க தேரரின் கையொப்பத்துடன் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை: தற்போது இந்த இரு பதவிகளையும் வகிக்கும் பல்லேகம ஹேமரதன ஸ்தவிரரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அவதானம் செலுத்திய மல்வத்து மகா விகாரையின் மகா சங்க சபை, சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து இது குறித்து…
பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச் சிறந்த போதனையாகும்
வெசாக் செய்தி புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். பௌத்த மத பாரம்பரியத்தால் செழித்து விளங்கும் உயரிய கலாசாரத்தை மரபாகக் கொண்ட இலங்கை மக்கள், உலக பௌத்த மதத்தவர்களுடன் இணைந்து இப்புனிதத் திருநாளை பக்தியுடன் கொண்டாடுகின்றனர். பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச் சிறந்த போதனையாகும். கௌதம புத்த பெருமானால் போதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தர்மமும் அன்பு , கருணை, மகிழ்ச்சி மற்றும் சமநோக்கு ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்த முன்மாதிரியான பாடம், புத்த பெருமான் உட்பட அனைத்து சமயத் தலைவர்களும் போதித்த தர்மமாகும். வெளி உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு, முதன்முதலில் மனிதனின் உள்ளத்தில் ஆன்மீக அமைதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பௌத்த தர்மம் சுட்டிக்காட்டுகிறது.…
ராகலை – மஹாகுடுகலை பகுதியில் மர்ம வெடிப்பு: குடும்பத் தலைவி படுகாயம்; நீதிக்காகக் குரல் கொடுக்கும் மக்கள்!
ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாகுடுகலை, மகாவலி குவார்டர்ஸ் பகுதியில் இடம்பெற்ற மர்மமான வெடிப்புச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், 46 வயதுடைய சித்ராதேவி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாய காணி ஒன்றுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென இடம்பெற்ற மர்ம வெடிப்புச் சத்தத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் படுகாயமடைந்த சித்ராதேவி, உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடிப்புச் சம்பவம் எதனால் ஏற்பட்டது? எத்தகைய வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் வலுத்துள்ளன. நீதி மற்றும் நட்டஈடு: பாதிக்கப்பட்ட சித்ராதேவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அத்துடன், காயமடைந்த அவருக்குப் போதிய நட்டஈடும், மருத்துவ…