Author: Thana
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இன்று அறிவித்தார். வழக்கின் பின்னணி கடந்த 2006 ஆம் ஆண்டு சரண குணவர்தன தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலப்பகுதியில், அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பிலேயே அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் தற்போது, பிரதிவாதிக்கான தண்டனை விபரங்களை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான…
வெளிநாடு ஒன்றில் அச்சிடப்பட்ட போலி 100 டொலர் நோட்டுகளுடன் (700,000 டொலர்) இலங்கை பெண் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளது. இன்று (08) முற்பகல் கொட்டிகாவத்தையில் 53 வயதுடைய சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பணத்தொகையின் இலங்கை ரூபா பெறுமதி 21 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த பண நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கிப்பதுடன், இந்த கடத்தல் சம்பவத்துடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த போலி பண நோட்டுகளை ஒரு டொலர் 284 ரூபா என்ற வீதத்தில் மாற்றுவதற்காக தயாராக இருந்துள்ளதுடன், உள்நாட்டு வர்த்தகர்களை ஏமாற்றி இந்த டொலர் நோட்டுகளை அவர்கள் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் நாளை (09) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் 07.06.2026 மாலை 6.30 மணியளவில் கைதுசெய்துள்ளனர். பொலிஸார். மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து தீடிரென குறித்த கடையினை முற்றுகை இட்டு பரிசோதனையை மேற்கொண்டபோது. ஐஸ் போதையுடன் இருவரையும் கைது செய்தனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தலைமையிலான குழுவின் முயற்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர். கௌசல்யா
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும், இரு நாடுகளிலும் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, இந்த நிலநடுக்கம் 8.2 ரிக்டர் அளவில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பும் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை விடுத்தது. பிலிப்பைன்ஸ் நாட்டின் முகமையான ‘பிவோல்க்ஸ்’ இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாகக் கூறியதோடு, சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஒரு மீட்டருக்கும் அதிக உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகி பல…
நாட்டில் இன்றும் (8) மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது
நானுஓயா நிருபர – முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம் . நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கு திரும்பும் காமினி தேசிய பாடசாலை சந்தி அருகில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்களும் ஒரு பெண் அடங்களாக மூவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர் , பதுளை பிரதான வீதியிலிருந்து நுவரெலியா பிரதான நகர் நோக்கி பயணித்த வேனொன்றும் நுவரெலியா நகரில் இருந்து நானுஓயா நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்,
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்று நிலைமை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு **2026 ஜூன் 07 ஆம் திகதி மாலை 03.30 மணி முதல் ஜூன் 08 ஆம் திகதி மாலை 03.30 மணி வரை** செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சபரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு **40 – 50 கிலோமீற்றர்** வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு **30 – 40 கிலோமீற்றர்** வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. * வீடுகளின் கூரை தகடுகள் மற்றும் ஓடுகள் பெயர்ந்து வீசப்படலாம். * மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகள் சேதமடையலாம். * மரங்களின் கிளைகள் முறிந்து விழுவதுடன்,…
வட்டவளை ரொசல்ல பகுதியில் அதிர்ச்சி: கேஸ் சிலிண்டரை திருடிச் சென்ற நபரை பிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்!
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல கிராமப் பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வீடொன்றின் கதவை உடைத்து எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை அடையாளம் காணப் பொலிஸார் பொதுமக்களின் அவசர உதவியைக் கோரியுள்ளனர். இத்திருட்டுச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) பாதுகாப்பு கேமராவில் அதிர்ச்சியூட்டும் வகையில் பதிவாகியுள்ளது. அந்த காணொளிக் காட்சிகளில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடொன்றின் கதவை மிகத் துணிச்சலாக உடைத்து உள்ளே நுழைவதும், பின்னர் அங்கிருந்த எரிவாயு சிலிண்டரை திருடிக் கொண்டு தப்பிச் செல்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தீவிரமடையும் பொலிஸ் விசாரணை இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், சிசிடிவி காட்சிகளில் உள்ள நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனவே, ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ள இக்காணொளியில் உள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தாலோ அல்லது அவரை அடையாளம் காண முடிந்தாலோ, உடனடியாக…
ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வீட்டில் ஏற்பட்ட தகராறின் போது, மனைவி கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெனீவா மாநாட்டில் இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!
ஜெனீவாவில் ஐக்கிய நாட்டு சபையின் 114 வது கூட்டத்தொடரில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்து கவனம் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமையகத்தில், சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களது தொழில் பாதுகாப்பு, பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் அவர்கள் கருத்துரைத்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதேவேளை, பெருந்தோட்டப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்துச்…