Author: Thana

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் எச்சரிக்கை விடுக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது நாளை (28) பிற்பகல் 4 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலையின் கீழ் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் வருமாறு: களுத்துறை மாவட்டத்தில்: மத்துகம கேகாலை மாவட்டத்தில்: தெஹியோவிட்ட தெரணியகல ருவான்வெல்ல யட்டியாந்தோட்டை புலத்கொஹுபிட்டிய நுவரெலியா மாவட்டத்தில்: அம்பகமுவ இரத்தினபுரி மாவட்டத்தில்: பெல்மதுல்ல கிரியெல்ல எலபாத கலவானை நிவித்திகல

Read More

ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுகின்றது. நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வுலகில், மனிதர்களுக்கிடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குகின்றது. தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்ததொரு முன்மாதிரியை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன். மேலும், மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள கடினமான சவால்களுக்கு மத்தியிலும், மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹீம் நபி அவர்கள்…

Read More

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா புத்த சாசனத்தையும் பௌத்த தர்மத்தையும் அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற உறுதி பூணுவோம் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் போது, மத மறுமலர்ச்சியும் அவசியமானதாகும். – ஜனாதிபதி நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மத மறுமலர்ச்சி இன்றியமையாதது எனவும், உன்னத புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக அனைவருக்கும் உள்ள பொறுப்புக்களைச் சரியாக இனங்கண்டு, அதற்காகக் கைகோர்ப்பதே இந்த வெசாக் புண்ணிய தினத்தில் நாம் எடுக்கக்கூடிய சிறந்த உறுதிமொழியாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (27) முற்பகல் திஹகொட, மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் நடைபெற்ற அரச வெசாக் விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். பௌத்த தர்மம் தற்போது வாழும் நமக்கோ அல்லது காவி உடை தரித்து வீற்றிருக்கும் மகா சங்கத்தினருக்கோ மாத்திரம் சொந்தமானதல்ல என்றும், புத்த தர்மம் ஒட்டுமொத்த…

Read More

கொழும்பில் வேலை செய்யும் பெற்றோரை தேடி செல்ல முற்பட்ட 12 வயதுடைய ஹட்டன் சிறுவன் நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் ஒருவன், ஹட்டன் பேரூந்து நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து நிலைய நேரக் காப்பாளரின் சாதுரியமான செயலினாலேயே இந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக, தான் தனியாகப் பேரூந்து மூலம் கொழும்புக்குச் செல்லப் போவதாக அந்தச் சிறுவன் நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும், கொழும்பு செல்வதற்காகத் தனது பெரியம்மா (தாயின் அக்கா) தனக்குக் காசு கொடுத்ததாகவும் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார். 7 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாகக் கொழும்பு செல்ல முயன்றதைக் கண்டு…

Read More

தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையின்…

Read More

கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 7.00 மணி முதல் நாளை (28) முற்பகல் 7.00 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை இடமாற்றம் செய்யும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Read More

மலையக இந்து குருமாருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு மலையக இந்து குருமாருக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மலையக இந்து குருமார் பல தசாப்தங்களாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் சில பொதுவான விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார். மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி இது குறித்து கலந்துரையாடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்காக அரசாங்கத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக இந்து குருமார் இங்கு குறிப்பிட்டனர். இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள் உள்ளிட்ட…

Read More

டி.சந்ரு செ.திவாகரன் இரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல். மூன்று வருடங்களுக்கு மேலாக இரண்டு கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை மதுகம – வெலிகந்த பிரதேசத்தில் வைத்து (24) கைது செய்து பின்னர் (25) ஞாயிற்றுக்கிழமை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேற்கொண்டுட மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும் – ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தலவாக்கலை கிரேட் வெஸ்டன் (Great Western) மலையில் உச்சியில் (2023) ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி பெண்ணொருவரின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபரும் ,…

Read More

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு சமூகத்தை வலுவூட்டுவதற்கும், பொருளாதார நன்மைகள் சமூகத்தில் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. “சமூக சக்தி” வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய வறுமையை ஒழித்து, சமூகத்தை வலுவூட்டுவதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீளாய்வு செய்வது குறித்தும், 2027ஆம் ஆண்டிற்கான முன்மொழிவுகளைக் கண்டறிவதற்கான ஒரு கட்டமைப்பைத் தயாரிப்பது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சமூக சக்தி தேசிய செயற்பாடின் முதன்மை நோக்கம் சமூகத்தை வறுமையிலிருந்து மீட்பதாகும் என்றும், அதற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெரிவித்தார். அதற்காக அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் மட்டுமன்றி, அனைத்து அபிவிருத்தி தரப்பினர்களும் ஒரே…

Read More

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாணவி சிவயோகநாதன் வித்யா கூட்டு வன்புணர்வு மற்றும் படுகொலைச் சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபராகக் கண்டறியப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தற்கொலை நிலையில் இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சிறைக்கூண்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் சசிகுமார் அல்லது ‘ரவி’ (வயது 46) என யாழ்ப்பாணப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். பின்னணி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், கைதடி (நெடுந்தீவு/புங்குடுதீவு பிராந்தியம்) பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவியான சிவயோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். முழு நாட்டையும் உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் (Trial-at-Bar) ‘ரவி’ உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். இன்று (25) காலை சிறைச்சாலை அதிகாரிகள் வழமையான சோதனைகளில் ஈடுபட்டிருந்த போதே,…

Read More