Author: Thana

விறகு தேட சென்ற முதியவர் சடலமாக இன்று மீட்கப்பட்டார். குறித்து சம்பவம் இன்று காலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட வலதலை பிரிவில் இடம்பெற்றுள்ளது. நேற்று 5.ம் திகதி காலை மறே தோட்ட வலதளை பிரிவில் உள்ள சுமார் 70 வயதுடைய ராஜகோபால் மணி என்று அழைக்கப்படும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு விற்கு சேகரிக்க சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து நல்லதண்ணி பொலிஸ் சார் தோட்ட மக்கள் இணைந்து தேடுதல் நடத்தி கிடைக்காத நிலையில் இன்று 6 ம் திகதி காலை மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது வலதளை பிவிற்க்கும் லக்சபான தோட்ட முள்ளுகாமம் மேற் பிரிவிற்க்கும் இடையே உள்ள தேயிலை செடிகள் உள்ள பகுதியில் மரணித்த நிலையில் கண்டு பிடித்து உள்ளனர். …

Read More

தவலந்தன்னையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலையில். இச் சம்பவம் நேற்று முன்தினம் 4 ம் திகதி மாலை 6 மணிக்கு இடம் பெற்று உள்ளது. நுவரெலியா மாவட்ட தவலந்தன்னை பகுதியில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த பார ஊர்தியில் பூண்டுலோயா பகுதியில் இருந்து தவலந்தன்னை தன்னை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கேந்திர விகாரை பகுதியில் உள்ள சாலையில் பார ஊர்தியில் மோதுண்டு படு காயங்களுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபட்டு உள்ளார் என பூண்டுலோயா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பார ஊர்தியின் சாரதியை பொலிசார் கைது செய்தனர். இது குறித்து பூண்டுலோயா பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.

Read More

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் இடம்பெற்ற 35 மில்லியன் (மூன்றரை கோடி) ரூபாய் பணக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில், அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. ​கடந்த ஜூன் 3-ஆம் திகதி பிற்பகல், வங்கியிலிருந்து வேறு இரு கிளைகளுக்குப் பணத்தைக் கொண்டு செல்வதற்காகப் பைகளில் எடுத்துச் செல்லப்பட்டபோதே, பாதசாரியாக வந்த நபர் ஒருவர் அப்பணத்தை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார். ​இந்தச் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, வங்கியின் உள்ளகத் தரப்பினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

Read More

இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாளாந்த செலாவணி வீதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை இன்று 332.27 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதன் விற்பனை விலை இன்று 342.00 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்று (04) டொலரின் விற்பனை விலை 340.25 ரூபாவாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை! ​அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை நோக்கி நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள திடீர் கசிவு காரணமாக, சில பகுதிகளில் இன்று (05) நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. ​இதன்படி, இன்று இரவு 8.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது: ​மொரகஸ்முல்ல ​இராஜகிரிய ​நாவல ​ஒபேசேகரபுர ​கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் ​மேற்படி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த நீர் விநியோகத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

Read More

இரத்தினபுரியில் தேயிலைக் கைத்தொழில் மேம்பாடுத்துவது தொடர்பாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல்* *சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்* இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழிலை மேம்படுதுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(04/06) இரத்தினபுரி மாவட்ட தேயிலைச் சபையில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் இக்கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினர். இதன்போது இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழில் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறிது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேயிலைத் தொழிற்சாலைகளின் நிலை, உர மானியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும் சந்தைக்கு வரும் உரங்களின் தரம் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் என்ற அடிப்படையில், எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு…

Read More

இன மத பேதங்கள் இன்றி, அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு அபிவிருத்தியையும் ஜனநாயகத்தையும் நோக்கி அடியெடுத்து வைப்போம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மைய ஐந்து வருட காலத்திற்குள் பல்வேறு சோகச் சம்பவங்களை எதிர்கொண்ட நமது நாட்டு மக்களுக்கு இப்போது மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தாலும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை வலுப்படுத்த வேண்டிய தருணம் எம்முன்னால் காணப்படுகின்றன. எல்லா வகைகளிலும் சமூகத்தை வலுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக வலுப்படுத்துவதோடு மட்டும் நின்று விடாது, சமூகத்தில் உருவாகும் சிக்கலான நிலைமைகளை தீர்க்க மனித இனம் கைக்கொண்ட உயர்ந்த நிலையிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைகள் தொடர்பில் மக்களை அறிவூட்ட வேண்டும். சமாதானமாகவும் ஐக்கியத்துடனும் புரிதலுடனும் நடந்து கொள்வது குறித்து மக்களை வலுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பல்வேறு சமூகப் பிரிவினர்களினது சமூக பின்னணிகளுக்கும், மதங்களுக்கும், கலாசாரங்களுக்கும் உரிய மரியாதையைக்…

Read More

நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் உயிரிழப்பு! நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், கலபொட தோட்டத்தை சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (04) காலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவனும் பெண்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

Read More

 நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால், தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதி, மடக்கும்பர புதுக்காடு பகுதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்தமையால் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ​இன்று (ஜூன் 04) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். தினமும் இந்தப் பாதையைப் பயன்படுத்திப் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் தமது தொழில் நிமித்தமாகப் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள், போக்குவரத்து முடக்கத்தினால் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார், குறித்த வீதியைச் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், தற்போதைய நிலவரப்படி வட்டக்கொடை வரையிலான போக்குவரத்து மட்டுமே இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். ​பாதையை முழுமையாகச் சீரமைக்கும் வரையில், சாரதிகள் மற்றும் பயணிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். கௌசல்யா.

Read More

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், அந்த மையத்தில் இருந்த சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குருவாதொட, படகொட பகுதியில் அமைந்துள்ள ‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ என்ற முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (03) பிற்பகல் இந்தத் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இந்தத் தீ விபத்தினால் அந்த மையத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் இருந்ததாகக்…

Read More