Author: Thana
குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மஸ்கெலியா வைத்திய சாலையில். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் இன்று காலை 8.30.மணிக்கு தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் குளவி கொட்டுக்கு இலக்கான 15 பெண்களில் மூன்று பெண்கள் அதிக அளவில் கொட்டுக்கு இலக்கான நிலையில் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வர பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று காலை முதல் சற்று வெப்பமான வானிலை நிலவுகிறது இதன் காரணமாக தேயிலை செடிகள் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு களைந்து கொட்டியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என இப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். மஸ்கெலியா நிருபர்.
பொதுச் சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ‘அத்தியாவசிய சேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள புயல் அனர்த்தத்தின் பின்னரான அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பரந்தளவிலான பொதுச் சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ‘அத்தியாவசிய சேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (28) வெளியிடப்பட்டுள்ளது. புயல் அனர்த்தத்திற்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கும், முக்கியமான பொதுச் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகளோ அல்லது முடக்கங்களோ ஏற்படுவதைத் தடுப்பதற்கும் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் பிரதான சேவைகளை இந்த வர்த்தமானி உள்ளடக்கியுள்ளது. அதன்படி அத்தியாவசியமாக்கப்பட்டுள்ள துறைகள் வருமாறு: சக்தி மற்றும் கட்டமைப்பு: மின்சார விநியோகம், எரிவாயு உட்படப் பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு. தொடர்பாடல்…
மட்டக்களப்பு விடுதி தீ விபத்து: இரு பிள்ளைகள் பலியான சோகம் – பிச்சை எடுப்பதற்காக நாடகமாடிய ‘போலி’ தந்தை கைது! அதிர்ச்சி பின்னணி வௌியானது.
மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபர் நேற்று (28) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் மோசடித் தகவல்கள் வௌியாகியுள்ளன. கைதான சந்தேகநபர், உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிள்ளைகளை வீதியில் வைத்து பிச்சை எடுத்து பெரும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமது தாயாரைப் பார்ப்பதற்காக, தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகளும் பதுளையிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு வந்திருந்ததாகவே கூறப்பட்டது. இதன்போது அவர்கள் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில், கடந்த புதன்கிழமை (27) விடுதி அறைக்குள் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 3 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும், 5 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் மூச்சுத்…
டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை: காவல்துறை மறுப்பு! டிக்கோயா: ஹட்டன் – டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் பகிரப்பட்டு வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், திடீர் சுகயீனம் காரணமாக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பில் இருந்தபோதிலும், அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்பி சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியிருந்தார். இந்த நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை காவல்துறை முற்றாக மறுத்துள்ளது. தப்பியோடிய சந்தேக நபரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) டிக்கோயா பகுதியில்…
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 லட்சம் முதியவர்களுக்காக, 3,493,915,000.00 ரூபாய் நிதியை அரசாங்கம் விடுவித்துள்ளது. கட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு: முதலாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 3,125,600,000.00 ரூபாய். இரண்டாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதிய பயனாளிகளுக்காக 368,315,000.00 ரூபாய். அனைத்து பயனாளிகளும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தமது அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்தச் சபை மேலும் அறிவித்துள்ளது.
களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
தனியார் தோட்டங்களில் மலையகத் தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் ஆய்வறிக்கை வெளியீடு
இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில், குறிப்பாகத் தனியார் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுவதாகவும், அவர்கள் அமைப்புசார்ந்த புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பின் புதிய ஆய்வறிக்கை அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் மலையகத் தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள்” என்ற தலைப்பிலான இந்த ஆய்வறிக்கை, மே 27 அன்று கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) உள்ள லோட்டஸ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. பல தலைமுறைகளாகத் தேயிலைத் தோட்டங்களில் உழைக்கும் மலையகத் தமிழ் மக்கள், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கினாலும், அவர்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியமான வாழ்வாதார வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். கட்டமைப்புசார்ந்த அநீதிகள்: தனியார் தோட்டங்களில் நிலவும் அமைப்புசார்ந்த பாகுபாடுகள் மற்றும் புறக்கணிப்புகள். உரிமை மீறல்கள்: தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுதல் மற்றும் கட்டாய உழைப்பு போன்ற அச்சுறுத்தல்கள்.…
ராஜகிரிய பகுதியில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 சீன பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்து, அவற்றை விடுவிப்பதற்காக பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால், வேயங்கொட பகுதியில் வைத்து சந்தேக நபரான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சீனப் பிரஜைகளின் பயண ஆவணங்களை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பதற்கு, தலா 300,000 ரூபாய் இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, அந்தப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெண் இடைத்தரகர் ஒருவர் ஊடாகத் தனது கப்பம் கோரும் கோரிக்கைகளை முன்னெடுத்து வந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் மாதம் 01 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள், விலங்குகளை அறுக்கும் இடங்கள் (கொல்களங்கள்) மற்றும் சுப்பர் மார்க்கெட்டுகளில் (பல்பொருள் அங்காடிகளில்) இறைச்சி விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாகப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அதேபோல், குறித்த தினங்களில் மதுபான விற்பனை நிலையங்கள், பந்தய நிலையங்கள் (Betting Centres) மற்றும் சூதாட்ட விடுதிகள் (Casino) என்பனவும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (27) பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். குறித்த விடுதியில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் அதில் வௌியான நச்சுப் புகையினால் விடுதியின் அறையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தமது தாயை பார்வையிடுவதற்காக பதுளையில் இருந்து குறித்த இரண்டு குழந்தைகளும் தந்தையுடன் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளனர். இதன்போது அறையில் இரண்டு குழந்தைகளும் தாயும் தங்கியிருக்க தந்தை வௌியில் சென்றுள்ள சந்தர்ப்பத்தில் விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 3 வயதுடைய ஆண் பிள்ளையும், 5 வயதுடைய பெண் பிள்ளையுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாயார் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.