Author: Thana
மஸ்கெலியா கவரவில தோட்ட கோயில் மண்டபத்தில் பண்ணையாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று இன்றையதினம் இடம்பெற்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் மிருக வைத்தியரின்மையால் பண்ணையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். சுமார் 2500 பசும்பால் உற்பத்தியாளர்களும் 2000 ஆடு, கோழி வளர்ப்பாளர்களும் காணப்படுகின்றனர். இப்பிரதேசித்தில் மிருக வைத்தியர் இன்மையால் நாளாந்தம் 15000 லீற்றர் பசும்பால் உற்பத்தி செய்யும் இப்பிரதேசவாசிகள், சுகவீனமுற்ற கால் நடைகளுக்கு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய வேறு இடங்களை நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாளாந்தம் 15,000 ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையினை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களில் ஒருவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இலங்கையில் 30 வருடங்களாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூறும் நிகழ்வு .
டி சந்ரு இலங்கையில் 30 வருடங்களாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூறும் நிகழ்வு . நுவரெலியா இலங்கை சிங்க ரெஜிமெணட் 3வது படையணி முகாமில் (18.05.2023) அன்று இடம்பெற்றது. இதன் போது யுத்தத்தில் நாட்டுக்காக உயிர் நீர்த்த இராணுவத்தினரை நினைவு இராணுவ மரியாதைகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் உயிர் நீத்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து மத குருமார்களின் மத அனுஸ்டானங்களும் இடம்பெற்றது. மேலும் யுத்தத்தில் உயிர் நீர்த்த இராணுவ வீரர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகளான நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள்,மேலதிக செயலாளர்கள், உள்ளிட்ட முப்படைகளின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு தடுப்பு திட்டத்திற்கமைய மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 141, 142 மற்றும் 144 வது காலாட் பிரிகேட்களின் நூற்றுக்கணக்கான படையினரால் மே 13 முதல் 15 வரை இராணுவத் தளபதியின் வழிக்காட்டலுக்கமைய சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களுடன் இணைந்து மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் பகுதிகள் மற்றும் வீட்டு வளாகங்களை ஆய்வு செய்தனர். இத் திட்டம் பிடகோட்டை, மிரிஹான, உடஹமுல்ல, மாதிவெல, மஹரகம, பிலியந்தலை, வெரஹெர, பொரலஸ்கமுவ, பம்பலப்பிட்டிய, வெள்ளவத்தை, கிரிபத்கொடை, வெலிவேரிய, பெல்லன்வில, களனி, பெம்முல்ல, ராகம, கடுவெல, மாலம்பே மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. மேற்படி டெங்கு தடுப்பு செயற்திட்டங்களை விரைவுபடுத்தும் முயற்சியில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர் அந்தந்த அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இத் திட்டத்தின் வெற்றிக்காக தமது மனிதவளத்தைப் வழங்கினர். மேற்கு…
தற்போது சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என காய்ச்சல் வகைகள் 03 பரவி வருகிறது. இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார். இவர் நேற்று (17) சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தற்போது டெங்கு நோய் அதிகளவில் பரவி வருவதாகத் தெரிவித்த விசேட வைத்தியர், உங்கள் வைத்தியர் உங்களுக்கு காய்ச்சலுக்காக ஏதேனும் வலி நிவாரணியை தந்தால் அது பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணியா என வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணி எடுத்தால் டெங்கு ஏற்பட்டால் இரத்தக்கசிவு ஏற்பட்டு ஈரல் பாதிக்கப்படுவதுடன் மரணம் ஏற்படக்கூடிய நிலையும் அதிகரிக்கும் என குறிப்பிட்டார். டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கு கர்ப்பிணித் தாய்மார்கள் இன்றியமையாத குழு…
அடுத்த வாரம் நாட்டில் மருந்து வகைகளின் விலைகளை 10 தொடக்கம் 15 வீதத்தால் குறைக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். டொலரின் பெறுமதி குறைவடைவதற்கு ஏற்ப இவ்வாறு மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருந்து வகைகளின் விலைகளை குறைக்கக் கூடிய பெறுமானம் தொடர்பாக நிதி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் கணக்காளர் பிரிவுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பட்டார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு நேற்று (17) பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டொலரின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மருந்து வகைககளின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்தன. எனவே, டொலர் பெறுமதி வீழ்ச்சியடைவதன் பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மருந்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டுக் காணப்படும் விற்பனை…
டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு முறைமை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஊவா மாகாணத்தை டெங்கு அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினார். நுளம்புகள் பெருகும் இடங்களைச் சோதனை செய்து சுத்தம் செய்வது தொடர்பில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் பிரதானிகளும் தெளிவூட்டல், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடை வளாகங்களைச் சோதனை செய்தல், ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புக்களை வழங்குதல், டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்கள் வசிக்கும் பிரதேசத்தில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை அழித்தல், இடங்களைக் கண்டறிந்து கொசுப்புழுக்களை அடையாளம் காணல், வீடுகள் மற்றும் நிறுவன வளாகங்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த…
இந்தியாவில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் இலங்கையில் இருந்து பங்குபற்றிய அணி இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. குறித்த சிலம்பம் போட்டியானது கடந்த 12 மற்றும் 13ம் திகதிகளில் பேங்ளூரில் இடம்பெற்றது. இலங்கை ,இந்தியா ,சிங்கப்பூர் ,பெல்ஜியம் ,இத்தாலி ,சுவிட்ஸ்லாந்து நாடுகளை சேர்ந்த 161 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதன் படி இந்தியா முதலிடத்தையும் ,இரண்டாம் இடத்தை இலங்கை அணியும் ,மூன்றாம் இடத்தை சுவிஸ்லாந்து அணியும் பெற்றுக்கொண்டனர்.
க/ஸ்டெலன்பேர்க் தமிழ் வித்தியாலயத்தின் STV AWARDS – 2023 விருது வழங்கும் விழா மிகக் கோலாகலமாக இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது. பிரதம அதிதியாக கம்பளை வலய கல்விப்பணிப்பாளரும் கெளரவ அதிதியாக கோட்டக்கல்விப்பணிப்பாளரும் விசேட அதிதிகளாக விரிவுரையாளர்கள்,அதிபர்கள், கல்வியதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் உருவாகிய முதல் பட்டதாரி, பல்கலைக்கழக மாணவர்கள்,ஆசிரியர்கள்,வைத்தியர் என துறைசார் நபர்களை கெளரவித்ததுடன்,இச்சாதனையாளர்களை செதுக்கிய சிற்பிளாக காணப்படும் பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது விழாவின் முத்தாய்ப்பாய் காணப்பட்டது. அதிகஸ்டப்பிரதேசப் பாடசாலையென்றாலும் இஸ்டத்துடன் அர்ப்பணிப்பாய் சேவையாற்றும் ஆசிரியர்களை போற்றித்துதிப்பது பாடசாலை சமூகத்தின் கடப்பாடு என்ற நோக்கில் மகிழ்ச்சியும் திருப்தியும் நிரம்பிய நிகழ்வாக விருதாளர்களின் மனவெளிப்பாட்டின் மூலம் காணக்கிடைத்தது. விருது பெற்ற வைத்தியத்துறை மாணவன் ஜெயசங்கரின் ஏற்புரையைக் கேட்டு சபையோரின் கண்கள் கசிந்தன. பெற்றோரைப்போல் கல்வி கற்ற பாடசாலையையும் போற்றித்துதிக்க வேண்டுமென்ற அவரது பேச்சு மாணவர்கள் பாடசாலை தொடர்பாக கொண்டிருக்க வேண்டிய பற்றினை பறைசாற்றியது.…
டெங்கு நோயை கட்டுப்படுத்த பொலிஸ் , முப்படைகளின் முழுமையான ஆதரவு. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு எதிர்பார்ப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் நேற்று (09) அறிவித்துள்ளார். டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் 1896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அது 49% ஆகும். மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களில் 21% கம்பஹா மாவட்டத்திலும்,18% கொழும்பு மாவட்டத்திலும், 7% களுத்துறை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.அவற்றில் 3.4% டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளனர். இது தவிர, திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்தும்…
பெரும்பான்மையினத்தவரின் மனதை வென்ற சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூக்கன் புனிதராஜாவிற்கு பிரியாவிடை நிகழ்வு!
ஊவா மாகாண பசறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தொலம்போவத்த கிராம அலுவலக பிரிவில் கடந்த 2015.01.08 முதல் 2023.05.06 வரையான காலப்பகுதியில் தொலம்போவத்த பகுதியில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக சேவையாற்றிய மூக்கன் புனிதராஜா கடந்த காலங்களில் இப்பகுதி மக்களின் தேவையறிந்து சேவையாற்றியதோடு தொலம்போவத்த கிராம அபிவிருத்தி செயற்றிட்டங்களையும் சமூக சேவை நிகழ்ச்சி திட்டங்களையும் செவ்வனே நிறைவேற்றியவராக திகழ்ந்துள்ளார். அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்ற சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் புனிதராஜாவிற்கு தொலம்பேவத்த கிராம மக்கள் இன்று (17) நந்தாராம விகாரை மண்டபத்தில் வெகுசிறப்பாக பிரியாவிடையளித்து கௌரவித்தனர். இந்நிகழ்வில் பசறை பிரதேச செயலாளர் திருமதி என்.ஜே.டி. அநுராதா , உதவி பிரதேச செயலாளர் திருமதி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத், சமூர்த்தி முகாமையாளர் திருமதி மதுமதி ஹேமலதா மற்றும் நந்தராம விகாரதிபதி உபதிஸ்ஸ தேரர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் , கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். மத அனுஷ்ட்டானத்தோடு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்…