Author: Thana
பசறை-கோணகலை பசறை டிவிஷன் தோட்ட தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் உள்ள லயமொன்றில் வசிக்கும் தனிநபரொருவர் லயத்தில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை இடித்து விடுதி கட்டும் வேலையில் ஈடுபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அப்பகுதியில் பல்வேறு காணி அபகரிப்பு செயல்களில் ஈடுபடுபவர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பலா மரம் ஒன்றை வெட்டியதாக தெரிவித்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த நபர் பசறை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.பியரத்ன தெரிவித்தார்.
சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் சுகாதார சுதேச அமைச்சி மற்றும் கண்டி போதனா வைத்தியசாலையும் இணைந்து பொல்கொல்ல மகிந்ந ராஐபக்ச கலை அரங்கில் அன்மையில் நடைபெற்றது. நிகழ்வுகளில் நாடாளாக ரீதியில் வைத்தியசாலைகளில் கடமை புரியும் தாதிகளை கௌரவிக்கும் நிகழ்வுகளல் சிறந்தசேவை புரிந்த தாதிகளுக்கு சுகாதார சுதேச அமைச்சர் ஹலிய ரம்புக்களை, மத்திய மாகாண ஆஞனர் சட்டத்தரணி லலித் யூ கமகே விருதுகளை வழங்கி வைத்து உரையாற்றுவதையும் காணலாம் படங்கள் மடுல்கலை நிருபர்
அரச அதிகாரிகள் திட்டங்களைத் தொடங்கினாலும் வேலையில்லை, அவற்றின் முடிவுகளையும் பார்க்க வேண்டும்…
பிரதேச செயலகங்களினால் ஆரம்பிக்கப்படும் செயற்திட்டங்களின் பெறுபேறுகளை அறிந்து கொள்வதற்காக பிரதேச செயலகங்களில் செயற்பாட்டுப் பணியகம் ஒன்று நிறுவப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், அவற்றின் முடிவுகளை அறிந்து கொள்ள வழியில்லாததால் இது ஒரு சிக்கல் நிலை என்று அமைச்சர் கூறினார். சரியாக பணியாற்ற முடியாத அதிகாரிகளுக்கு பதிலாக புதிதாக சிந்திக்கும் இளம் அதிகாரிகளை கொண்டு புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இன்று (16) நடைபெற்ற கம்பஹா மற்றும் மினுவாங்கொட பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது: அரசு அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை தொடங்கி உள்ளனர். அவற்றின் முடிவுகள் எப்படி உள்ளன?அவற்றை தேடிப் பார்ப்பது எப்படி? நீங்கள் தேடவில்லை என்றால், இதைத் தொடங்குவதில் அர்த்தமில்லை. இவை அனைத்தின் முடிவுகளும் எமக்கு வேண்டும். மக்களின் பணம் பொது…
மரண அறிவித்தல் நானுஓயா டஸ்போட் சீனிக்கத்தாலையை வசிப்பிடமாக கொண்ட சிவனு பொன்னர் ( பாரம்பரிய இசைக்கலைஞர் )அவர்கள் 17/05/2023 அன்று சிவபதம் எய்தினார். அன்னாரின் பூதவுடல் 18/05/2023 அன்று நானுஓயா டெஸ்போட் சீனிக்கத்தாலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதினை மனைவி ,பிள்ளைகள் ,மருமக்கள் , சகோத சகோதரர்கள் மற்றும் தோட்ட பொது மக்கள் அனைவரும் ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றனர். தகவல் – குடும்பத்தினர் மற்றும் எக்ஸலன்ட் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் .
பழம்பெரும் பாடகர் டோனி ஹாசன் தனது 73 ஆவது வயதில் காலமானார். டோனி ஹசனின் பூதவுடல் இன்று (17) மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள்; 23.05.2023 நள்ளிரவு முதல் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. மேலும், எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் வினாக்களை விளம்பரப்படுத்துதல் போன்றனவும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. எவரேனும் ஒருவர் அல்லது அமைப்பு இவற்றை மீறினால், அது குறித்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகம் 011 2421111 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 119 பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கம் 1911…
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன் பதவிப்பிரமாணம். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்யதுகொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான். வடமேல் மாகாண ஆளுநர் – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வடக்கு மாகாண ஆளுநர் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான். வடமேல் மாகாண ஆளுநர் – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வடக்கு மாகாண ஆளுநர் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோர பிரதேசங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஊவா மாகாண படைவீரர் தினம் “ரணவிரு சமரும்” நிகழ்வு (16-05-2023) இன்றைய தினம் பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண படைவீரர் தூபிக்கு அருகாமையில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தின் போர்வீரர் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு படைவீரர் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், ஊவா மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி உள்ளிட்ட அதிகாரிகள், இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராமு தனராஜா
50 கிலோ கிராம் பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் புதிய விலை 15,000 ரூபாவாகும். குறித்த உரத்தை, அனைத்து கமநல சேவை மத்திய நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.