Author: Thana

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி பிரதான சந்தேக நபருக்கு விற்கப்பட்டாரா என்பதை அறிய இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சரிபார்க்க நீதிமன்றம் நேற்று (15) அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதேவேளை, பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்கின்ற சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய விசாரணைகளில், உயிரிழந்த பெண்ணின் தோழியின் காதலன் எனக் கூறப்படும் நபரே சிறுமியை பிரதான சந்தேகநபருக்கு 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பிரதான சந்தேக நபர் 12,000 ரூபாவை முற்பணமாக குறித்த நபரின் கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சோதனையிட விசாரணையாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இறந்த சிறுமிக்கு தான் விற்கப்பட்டது தெரியுமா, இல்லையா என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.…

Read More

காலி மாவட்டத்தில் பொழியும் அதிக மழை காரணமாக நேற்று (15) நண்பகல் வரை, பிரதேச செயலகப் பிரிவின் 7 இடங்களில் வாழும், 95 குடும்பங்களில் 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது பெய்யும் மழையினால் நெலுவ தவளம உட்பட பல இடங்களில் தாழ்ந்த பகுதிகள் மற்றும் பிரதான வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியிருப்பதால் வாழ்க்கையின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தவளம பிரதேசத்தில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நெலுவ, நாகொட பத்தேகம, ஹிக்கடுவை, கரந்தெனிய மற்றும் கோன்பீனுவல பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிக மழை, வெள்ளம், மண்சரிவு மற்றும் பாரிய மரங்கள் வீழ்தல் போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். பகுதியளவில் 29 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டு முற்பணம் செலுத்துவதற்கு ஒதுக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடனடி அனர்த்த நிவாரண சேவை செயற்பாடுகளுக்காக மாவட்ட செயலாளரின் தலைமையில், சகல பிரதேச செயலகங்கள் பணிகளுக்காக…

Read More

25,000 மெற்றிக்தொன் யூரியா உரம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளமை தொடர்பாக விவசாய அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று (15) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

Read More

வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்கின்ற அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்மொழிவு திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று (15) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

Read More

யாழ்ப்பாணம் – ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர்  மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கடந்த வாரம் மன்னார் பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும்  சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரிவீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பாடசாலை சென்ற மாணவி ஒருவரை ஒருவர் நீண்ட நேரமாக அவதானித்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து அவரை நன்றாக கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Read More

வெலிகம , தெனிபிட்டிய பகுதியில் நேற்று (15) நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மகன் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலீஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதற்கமைய ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மஹியங்கனை நகரில் ஹெரோயின் போதைப் பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மஹியங்கனை நகரில் சந்தேகத்திற்கு இடமான இரு நபர்களை மஹியங்கனை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது ஒரு சந்தேக நபரிடம் 15200மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. மஹியங்கனை பகுதியை சேர்ந்த 22வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் 5100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மிட்கப்பட்டுள்ளது மஹியங்கனை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரு சந்தேக நபர்களையும் விசாரணையின் பின் இன்று மஹியங்கனை நீதமான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர் ராமு தனராஜா

Read More

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டம் இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 16 வயது சிறுமியின் மரணம் மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட நாட்டில் பதிவான அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களைத் தொடர்ந்து ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் இழைக்கப்படும் பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியே ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read More

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி அந்த பதவிகளுக்கு வரும் 17ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More