Author: Thana
ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணொருவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்பெண்ணை அழைத்துவந்தபோது அவர் உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் தங்க மோதிரம் ஒன்று திருடினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வீட்டின் உரிமையாளரினால் வெலிகட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மே 11ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது, திடீரென சுகயீனமடைந்த அப்பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார். பதுளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 42 வயதுடைய பெண் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்துள்ளார் என்று அறியமுடிகின்றது. இந்தப் பெண் பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக பணிப்புரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி-Trueceylon
ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி 2010 ஆம் ஆண்டு க.பொ.த சா/த மாணவர்களினால் ஒரு தொகை மேசை கதிரைகள் பாடசாலைக்கு
ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி 2010 ஆம் ஆண்டு க.பொ.த சா/த மாணவர்களினால் ஒரு தொகை மேசை கதிரைகள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன. கடந்த மாதம் மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு பார்வை இட சென்றிருந்த போது பாடசாலையில் உட்கட்டமைப்பு ரீதியாக பல்வேறு தேவைப்பாடுகள் இருப்பதனை அறிய கூடியதாக காணப்பட்டது. எனவே பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக முதற்கட்டமாக பாடசாலைக்கு தேவையான மேசைகளும் கதிரைகளும் சுமார் 100, 000.00 ரூபாய் செலவில் 2010 க.பொ.த சா/த மாணவர்களினால் பாடசாலைக்கு அன்பளிப்பாக அன்மையில் வழங்கபட்டது.
மலையக பகுதிகளில் உள்ள டைப் 3 ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 1000 மெட்ரிக் தொன் அரிசி தாய்வான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இந்திய தூதரக பணிப்பாளர் நாயகம் ஊடாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்றைய தினம் (15.05.2023) உத்தியோகபூர்வமாக பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது. அரச சார்பற்ற நிறுவனமான ‘Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது. இன்று வழங்கப்பட்டுள்ள அரிசி, மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட டைப் 3 ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது. புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இத்திட்டம்…
ஜப்பான் தேசிய அணியுடனான நான்காவது ரி20 போட்டியிலும் இலங்கை வளர்ந்து வரும் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை 4–0 என முன்னிலை பெற்றுள்ளது. சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது. இதன்பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் அணி 18.4 ஓவர்களில் 86 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பாக ஜப்னா கிங்ஸ் அணி வீரர் தீசன் விதூஷன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெலோன் பீரிஸ், சிதும் திஸாநாயக்க மற்றும் லக்ஷான் கமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ரி20…
லங்கா சதொச நிறுவனம் இரண்டு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, 400 கிராம் லங்கா சதொச, பால் மா ஒன்றின் புதிய விலை 1080.00 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 243.00 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் தரம் 05 புலமைபரில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு
பா.திருஞானம் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் தரம் 05 புலமைபரில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அதிபர் ஜி.லோகேஸ்வரன் தலைமையில் இன்று (13) நடைபெற்ற பெற்றது. இதன் போது புலமை பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியை ஆசிரியர் அதிபர் கௌரவிக்கப்பட்டனர்.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் மேமலை வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இதுவரையில் பல ஏக்கர் வனப்பகுதி பாரிய அளவில் தீக்கிரையாகியுள்ளது. தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் இக்காட்டுத்தீ தொடருமானால் மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹதோவ பகுதியில் உள்ள வனப்பகுதியும் தீயினால் நாசமடையக்கூடும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். ராமு தனராஜா
மீதிம்பிட்டிய மேமலைக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமையால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதிம்பிட்டிய நகரிலிருந்து மேமலைக்கு செல்லும் 1 கிலோமீற்றர் தூரத்திலான வீதியில் நீர் விநியோகத்திற்கான குழாய்கள் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவ்வீதியில் காண்கள் வெட்டப்பட்டு கல்வெடிகள் வைத்து வேலைகள் இடம்பெற்று வருவதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியூடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறியும் அவ்வழியே பயணிக்க முடியாதுள்ளது. மேலும் இவ்வீதியில் நீர் விநியோக நடவடிக்கைக்காக குழாய்கள் பொருத்தப்பட்ட பின்னர் குறித்த காண்கள் மூடப்படாமல் வீதி சீரற்ற நிலையில் காணப்படும் என் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஆகவே இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்க மலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமு தனராஜா
மத்திய மாகாண கிளையின் கராட்டி சுற்றுப் போட்டிகளும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு
‘Shotokan Karate Academy International’ கலையகத்தின் மத்திய மாகாண கிளையின் கராட்டி சுற்றுப் போட்டிகளும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் பொகவந்தலாவை ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று (13.05.2023) நடைபெற்றது. Shotokan Karate Academy International தலைமையகத்தின் பிரதம ஆசிரியர் சிகான். அன்ரோ டினேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார். இந்த மத்திய மாகாண கராட்டி சுற்றுப் போட்டியில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமளவிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நினைவுப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், Shotokan Karate Academy International கலையகத்தின் மத்திய மாகாணத்தின் பொறுப்பாசிரியர் எம்.தம்பிராஜ், மத்திய மாகாணத்தின் அமைப்பாளர் ஆறுமுகன் யோகராஜா…
அகில இலங்கை பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியில் நு/பரிசுதத திரித்துவ கல்லூரி வரலாற்று சாதனை!
அகில இலங்கை பாடசாலை மட்ட எல்.வி.ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி (2023) இம்முறை கந்தலாய் நகரசபை மண்டபத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெற்று வந்தது.இதில் நாடெங்கிலும் உள்ள சுமார் 100 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 400 பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர். இப்போட்டியில் பாடசாலையான நு/பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியை பிரதிநித்துவப்படுத்தி 07 மாணவர்கள் வெவ்வேறு வயதுபிரிவிலும் எடைப்பிரிவிலும் பங்குபற்றிய நிலையில் அவர்களில் 04 வீரர்கள் தங்களின் அபார திறமையைக்காட்டி அறையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகினர். அவ்வெற்றி வீரர்களின் வெற்றி விபரம் இதோ. இறுதிபோட்டியில் எமது பாடசாலையை பிரதிநிதித்துவப்டுத்தி பங்குபற்றிய எஸ். திலக்சன் (தரம்-11) கடுகண்ணாவ தேசிய பாடசாலை மாணவன் ஏ.எம்.ஏ. பியதிச்ச என்ற மாணவனுடன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்து ஓர் வரலாற்று சாதனையைப்படைத்துள்ளார். மேலும் சி.யுவேந்திரன் அறையிறுதி போட்டியில் போட்டியிட்டு 03ம் இடத்தைப்பெற்று வெண்கல பதக்கத்தை சுவீகரித்துள்ளார்! அத்தோடு .பி.அபினாஸ் (தரம்…