Author: Thana

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 6 பேர் காரில் பயணித்த நிலையில் 2 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, போராட்டத்தினால் பதவியை இராஜனாமா செய்ததன் பின்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மே தினமான இன்று (01) முதலாவது பொது கூட்டமொன்றை நடத்தியது. அதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வரவேற்றார்.

Read More

மே தினத்தை முன்னிட்டு கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னால் ஐனாதிபதி வரவேற்கப்படுவதையும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் உரையாற்றுவதையும் காணலாம். படங்கள்: மடுல்கலை நிருபர்

Read More

பழைய மஸ்கெலியா சண்முகநாதர் ஆலயத்தில் வரலாற்று சுவடுகளை சேதப்படுத்தும் வகையில் சுவர்களில் கூரிய ஆயுதங்களினால் கிறுக்கப்பட்டிருப்பது தொடர்பில் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதே மஸ்கெலியா பழைய நகர விகாரையிலும் , மஸ்ஜித்திலும் , இவ்வாறான எந்தவொரு கிறுக்கல்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இவ்வாறான செயற்பாடுகளால் நாமே நம்மினத்தை இழிவு படுத்துவதாக அமைகிறது. 200 அல்ல 500 ஆண்டுகள் கடந்தாலும் எம்மில் நல்லெண்ணங்கள் , நற்செயல்கள் தோன்றாத வரை நம் சமூகம் முன்னேறாது. அன்பானவர்களே இவ் ஆலயம் நூற்றாண்டு கடந்து வரலாற்றில் பதியபட்ட ஆலயம் . மேலும் சில காலங்களில் இலங்கையின் தேசிய மரபுரிமை என்ற பெயரை அடைந்து பாடநூல்களில் கூட வெளிவரலாம். ஆகவே இதனை பார்வையிட செல்லும் போதுசேதப்படுத்தாது , கிறுக்கல்களை தவிர்த்து எதிர்கால சந்ததியினரிம் கவனமாக ஒப்படைக்க வேண்டியது எம் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ச.சதீஷ்குமார் மஸ்கெலியா

Read More

M.J அம்மாரின் இயக்கத்தில் “மலையவன்” குறுந்திரைப்படமானது இன்றைய தினம் (01) தலவாக்கலை ஒக்ஸ்போர்ட் கல்வியக கட்டடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலவாக்கலை கதிரேசன் ஆலய பிரதம குருக்கள் பிரசாத் சர்மா, தங்கமயில் ஜீவலரி ஸ்தாபகர் தேசபந்து தேசகீர்த்தி சாந்தகுமார், விஷ்ணு அறக்கட்டளையின் சிரேஷ்ட நிர்வாகி திரு தர்மராஜ், மலையகத்தின் குறுந்திரைப்பட இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். உயர்தர மாணவரான அம்மார் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இக்குறுந்திரைப்படத்தில் ஆசிரியர் சான் சதீஷ் முக்கிய கதாப்பாத்திரமேற்று நடித்துள்ளதோடு பிரமீதா, ரம்யா, சுதர்சன், சற்குணம், சதீஷ்குமார், அருளம்பலம், சமன் புஷ்பகுமார மற்றும் ஸ்ரீகாந் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பிரதிக்ஷன், பிரேம்நாத், அனுஷ்பிரியன், ரிசோகுமார் மற்றும் கலைவாணன் ஆகியோர் இக்குறும்பட இயக்கத்தில் இணைந்து பணியாற்றியதோடு ஈஸ்வர் மீடியா ஒளிப்பதிவு செய்துள்ளது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பலரும் குறித்த மாணவனின் இக்கன்னி முயற்சியை பாராட்டினர். மலையகம்.lk யின் ஊடகப்பங்களிப்பில் இவ்வெளியீட்டு நிகழ்வானது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகலாவிய ரீதியில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் எனறு கட்டாயம் காணப்பட்டது. குறித்த வேலை நேரத்தினைக் குறைப்பதற்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டமே, முதலாவது மே தின போராட்டமாக அமைந்தது. தொழிலாளர்களின் இநத் க் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் அமைபபுக்களாக வளர்ந்த பொழுது இந்த போராட்டம மேலும் வலுப்பெற்றது. இதேவேளை அதிகமான வேலை நேரத்திற்கு எதிரான குரல்கள் பல நாடுகளில் எழத் தொடங்கியன. இதில் பிரித்தானியாவில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர். இதனை எதிர்த்து 1830 ஆம் ஆண்டு…

Read More

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லியவத்தை பாலத்திற்கு அருகில் உள்ள ஹெமில்டன் கால்வாயில் நேற்று (30) காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், பழுப்பு நிற சாரம் மற்றும் வெள்ளை நிற கை நீண்ட சட்டை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் இதுவரை உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 672,171 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை அண்மைக்காலமாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Read More

அரச சேவையின் ஊடாக பொதுமக்களுக்கான சேவையில் தாமதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அமைச்சு செயலாளர்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே அரசாங்க சேவையில் தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், திறமையான சேவையை வழங்குதல் மற்றும் அரசாங்க சேவைக்காக ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவில் நடைமுறையில் உள்ள நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அமைச்சுக்களின் செயலாளர்களின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான மதிப்பெண் முறையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 65 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் அதே அமைச்சில் தக்கவைக்கப்படுவார்கள், 50 முதல் 65 மதிப்பெண் பெற்றவர்கள் இடமாற்றத்திற்கு பரிசீலிக்கப்படுவார்கள், 50க்கும் குறைவான மதிப்பெண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிகாரிகள் மீதான…

Read More

இன்று (01) இலங்கையில் நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Read More