Author: Thana
செ.திவாகரன் நானுஓயாவில் சந்தேகத்திற்கிடமான பொதி மீட்ப்பு நானுஓயா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நானுஓயா கிளாசோ மேற்பிரிவில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நானுஓயா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நானுஓயா கிளாசோ தோட்டத்தில் கைவிடப்பட்ட வீட்டில் பின்பக்கத்தில் சந்தேகத்திற்கிடமான கடதாசி பெட்டி பொதியில் பரிசு பொருட்கள் போல் பொதி செய்யப்பட்ட நிலையில் பெற்ரோல் குண்டுகள் போல் வெடிபொருட்கள் காணப்படும் பகுதியை அடையாளப்படுத்தி பெட்டியில் இருந்த குறித்த வெடிக்கும் திரவ பொருட்களை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹெட்டிபொல, முனமல்தெனிய – கட்டுபொத வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுபொத பகுதியில் இருந்து முனமல்தெனிய நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் பாடசாலை விட்டு வந்திறங்கிய மாணவன் வீதியைக் கடக்க முற்பட்ட போது கட்டுபொத்த பகுதியை நோக்கிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் வலவ்வத்தை அனுக்கன்ஹேன பிரதேசத்தை சேர்ந்த தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவன் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை மற்றும் கடல் நிலை தொடர்பான முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடல் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய், அருள்மிகு மருதடி விநாயகர் திருக்கோயில் மலைப்பில்லா மனம் தந்து வழிகாட்டும் விநாயகரே தடுமாறா மனம் தந்து வழிநடத்த வேண்டுமைய்யா திடமான மனம் தந்து எங்களை நீ வாழவைப்பாய் மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே மகிழ்ச்சி கொண்ட வாழ்வு தந்து வழிகாட்டும் விநாயகரே வலிமை மிகு மனம் தந்து வழிநடத்த வேண்டுமைய்யா முயற்சியுடன் முன்னேறும் அறிவு தந்து எங்களை நீ வாழவைப்பாய் மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே எழுச்சி கொண்டு நாம்வாழ வழி காட்டும் விநாயகரே ஏமாற்றம் அண்டா நிலைதந்து வழிநடத்த வேண்டுமைய்யா எழுச்சிமிகு மனம் தந்து எங்களை நீ வாழவைப்பாய் மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே வளம் கொண்ட தமிழ் மண்ணில் இருந்து வழிகாட்டும் விநாயகரே வற்றாத கருணையினை தந்து வழிநடத்த வேண்டுமைய்யா வெகுளாத மனம் தந்து எங்களை நீ வாழவைப்பாய் மானிப்பாய் கோயில் கொண்ட மருதடி விநாயகரே எங்கும் என்றும்…
தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீர் பருக வேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா நேற்றைய தினம் (17) தெரிவித்துள்ளார். “தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான கால நிலையினால் உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும் இதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்வது நன்மையளிக்கும் என்றும் குறிப்பிட்டார். ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக தினமும் 3 லீட்டர் வரையில் நீர் அருந்த வேண்டும் அத்துடன், போதியளவு நீராகாரங்களை அருந்துங்கள். நீர் தன்மையுள்ள வெள்ளரி, கெக்கரி போன்ற பழங்களை உண்ண வேண்டும் எனவும் பிரதிப்பணிப்பாளர் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக சுவாசிக்கக்கூடிய இடமாக காலி முகத்திடல் காணப்பட்டது. ஆனால் கடந்த காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளாலும், ஆர்ப்பாட்டங்களினாலும், காலி முகத்திடல் வெகுவாக சேதமடைந்துள்ளது. இதன்காரணமாக, இலங்கை துறைமுக அதிகாரசபையானது இப்பகுதியை சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அந்த அதிகார சபை செலவிடவுள்ளது. கடந்த போராட்ட காலத்தில் குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்வதற்கு மாத்திரம் சுமார் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அத்துடன், ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடலை பொதுமக்களுக்கு சுதந்திரமாக பொழுதைக் கழிப்பதற்கும்;, புனிதமான சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கும் அனுமதி வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, சமய நிகழ்வுகள் தவிர்ந்த, காலிமுகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக…
அரை சொகுசு பேருந்துகள் அடுத்த மாதத்தின் பின்னர் ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரை சொகுசு பேருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா குறிப்பிட்டார். போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின்படி அரை சொகுசு சேவையை சாதாரண சேவையாகவும், சொகுசு சேவையாகவும் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, அனைத்து பேருந்து உரிமையாளர்களும் தங்களது பேருந்தை சாதாரண சேவையாகவோ அல்லது சொகுசு சேவையாகவோ மாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
(க.கிஷாந்தன்) ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணி மற்றும் ஒன்றுகூடல் என்பன கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது. அத்துடன், பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியும் பகலிரவு, ஆட்டமாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்றார். இதன்போது அமைச்சருக்கு, பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார். 2 ஆவது நாள் நிகழ்வில் அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும், நீதிபதியுமான ஜெயராமன் ட்ரொஸ்கி பங்கேற்றார். அத்தோடு, அட்டன் கல்வி வலய பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் உட்பட பலர் இதன்போது கலந்துக் கொண்டிருந்தனர். இரு நாட்கள் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளில் சுமார் 3000 பேர்வரை பங்கேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்) சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்று (17ம் திகதி) காலை இந்த 9 கைதிகளும் தப்பி ஓடிவிட்டனர். நோன்பு நடவடிக்கைகளுக்காக தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த போது அந்த அறையில் இருந்த இரும்பு கம்பியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதிகள் வழங்கிய தகவலின்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, தல்தென சிறைச்சாலையின் புதிய பண்ணைக்கு அருகில் இன்று (18) காலை இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தகெட்டிய பொலிஸார் கிராம மக்களின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதலின் போது கந்தகெட்டிய பதுலுஓயாவிற்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு அருகில் மேலும் நான்கு இளைஞர்கள் (17) நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இன்று…
க.கிஷாந்தன்) புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இவ்விபத்து இன்று (18.04.2023) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதிக இரத்தபோக்கு ஏற்பட்டதால் குறித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் புஸ்ஸலாவ பொலிஸார், கம்பளை பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.