Author: Thana
அக்கரப்பத்தனை, மன்றாசி நகரில் முச்சக்கர வண்டி சாரதிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிவதாவது முச்சக்கர வண்டியை பின்னால் செலுத்தும் போது அதன் பின்னால் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் ஏற்பட்ட வாய் தகர்க்கம் கைகலப்பாக மாரி இரு குழுக்களுக்குல் மோதலாக மாரி சிலருக்கு காயம் ஏற்பட்டு அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சிலர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்திய சாலைக்கு அனுப்ப பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்புவதற்காக இன்று விசேட போக்குவரத்து சேவைகள்
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்புவதற்காக இன்று (17) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் (16) மேற்கொள்ளப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார். இதேவேளை, இன்று சுமார் 30 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்ற ரயில் சாரதிகள் குழுவொன்று பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் பல பிராந்திய ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இதன் காரணமாக பயணிகளுக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என மேலதிக புகையிரத பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இசைக் கச்சேரியுடன் கூடிய தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம், ஏப்ரல் 22 ஆம் திகதி காலிமுகத்திடலில்
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் , அனைத்து அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச துறை நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர் குழாம் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்குமான திறந்த போட்டிகள் மற்றும் வெளிநாட்டவர்ளுக்கான போட்டிகள் அடங்கிய “வசந்த சிரிய 2023” (வசந்தத்தின் வனப்பு 2023) தமிழ் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 22 ஆம் திகதி சனிக் கிழமை கொழும்பு காலிமுகத்திடல் மைதானததில் நடைபெறும். காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதோடு மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத் துறை, திறந்த பிரிவு மற்றும் விருந்தினர் பிரிவு என 3 பிரிவுகளின் கீழ் போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பணியாளர் குழாம்,குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் சிறுவர்களுக்கென ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 18 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதோடு பப்பாசி விதைகளை…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா உள்ளிட்ட மத்திய சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மின்சார ரயில் பாதை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். அண்மையில் நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இத்திட்டமானது இயக்க மற்றும் பரிமாற்றம் (BOT) முறையின் கீழ் நிர்மாணிக்கப்படும் எனறும், அதற்கு பொருத்தமான முதலீட்டாளர் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவித்தார். உலகின் ஆறாவது உயரமான புகையிரத நிலையமான கந்தபொல புகையிரத நிலையம் உட்பட பல புகையிரத நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த புகையிரத பாதை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனூடாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு…
பதுளை மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியில் உள்ள இளைஞர் சீர்திருத்த பள்ளியில் இருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 9 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இரு கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் அவர்களை தேடும் பணிகளில் பதுளை பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். ராமு தனராஜா
அக்கரப்பத்தனை ,அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே மோதல் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோருக்கு காயம் .
அக்கரப்பத்தனை டொரின்டன் அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதல் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மோதல் பூசை வழிபாடுகளை தோட்டத்தில் இருவேறு பகுதிகளில் இருவேறு தரப்பினர் மேற்கொண்ட விளைவாக தாக்குதல் இடம்பெற்றதாக சம்வத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட அதே நேரம் வெட்டுகாயத்திற்கு இலக்கான நபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சிறுவர் ஒருவர் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். ஏனையோர் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியிருப்பதாக இதுவரை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் 2023:04:16 இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, கரப்பன்காடு, அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் வன்னித் தமிழ் மண்ணில் இருந்தருளும் விநாயகரே வற்றாத உன்கருணை எமை ஆள வேண்டுமைய்யா வெற்றியுடன் நாம் வாழ என்றும் அருளிடைய்யா கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே ஆறுதல் தந்தெம்மை அரவணைக்கும் விநாயகரே ஆதரித்து அருளளித்து எமை ஆள வேண்டுமைய்யா நிம்மதியை நாம் பெறவே என்றும் அருளிடைய்யா கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே மருத நிலச் சூழலிலே வந்துறையும் விநாயகரே மதிமயங்கா வாழ்வு தந்து எமை ஆள வேண்டுமைய்யா மாண்புடனே நாம் வாழ என்றும் அருளிடைய்யா கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே எங்கும் எதிலும் இருந்தருளும் விநாயகரே ஒன்றுபட்ட வாழ்வு தந்து எமை ஆள வேண்டுமைய்யா ஓரணியில் நாம் வாழ என்றும் அருளிடைய்யா கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே ஏற்றமிகு வாழ்வு தந்து உயர்த்தி விடும் விநாயகரே எழுச்சி மிக்க வாழ்வு தந்து எமை ஆள வேண்டுமைய்யா எதிர்கால நம்பிக்கையுடன்…
ருவன்வெல்ல பகுதியில் மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ருவன்வெல்ல – மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் நேற்று (15) மாலை குளித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற சிறுவர்கள் மீதே மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன் ருவன்வெல்ல – கோனகல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும், காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம்- கொட்டாஞ்சேனை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிம்மதியைத் தந்தெம்மை அரவணைக்கும் எம்தாயே நிரந்தரமாய், நிம்மதியாய் நாம் வாழக் கருணை செய்வாய் துன்பம் வரும் போது துரத்திவிட வந்திடம்மா கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா நோய் நொடிகள் நெருங்காது காத்தருளும் எம்தாயே நொந்துமனம் வாடாமல் நிம்மதியாய் நாம் வாழக் கருணை செய்வாய் இன்பம் மிகு நல்வாழ்வை என்றும் நிலைநிறுத்திவிட வந்திடம்மா கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா கொடுபகைமை, வஞ்சனைகள் துரத்திவிடும் தாயே கௌரவமாய் என்றும் நாம் வாழக்கருணை செய்வாய் கெடுமதிகள் அண்டாது காத்திடவே வந்திடம்மா கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா மேற்கிலங்கை வீற்றிருந்து காவல் செய்யும் எம்தாயே மேன்மை குன்றா நிலையில் என்றும் நாம் வாழக் கருணைசெய்வாய் மோதவரும் தீவினைகள் சிதைத்தெம்மைக் காவல் செய்ய வந்திடம்மா கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா அனைத்துயிர்களுக்கும் உயிர் கொடுக்கும் எம் தாயே உண்மை நெறி…
பதுளை கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஸ்கொட கெந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மகனது தாக்குதலுக்கு இலக்கான தந்தை பலத்த காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 57 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த நபர் என்பதுடன் 30 வயதுடைய மகன் கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கஹட்டரூப்ப பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா