Author: Thana

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மேற்குறிப்பிடப்பட்ட 8 மாவட்டங்களும் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண்ணில் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் தொழில் புரிவோர் வேலை செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் இருக்கவும், ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய வெளிப்புற தொழிலாளர்கள் கடினமான வேலைகளை குறைத்து, நிழல் உள்ள இடங்களில் வேலை செய்யவும், நீரை அதிகமாக பருகவும், திரவ உணவுகளை அதிகமாக எடுக்கவும் வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் எச்சரிக்கை பிரதேசங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Read More

தலவாக்கலை பிரதேச செயலக செயற்பாடுகள் தமிழ் சிங்கள புத்தாண்டோடு ஆரம்பமானது. பிறப்பு இறப்பு, விவாக சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பிரிவு, வாகன அனுமதிப்பத்திரம் பிரிவும், இடம் சம்மந்தமான சகலவித செயற்பாடுகளும் இங்கு மக்கள் சேவைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அ.கேதீஸ்

Read More

மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி- மேரிவிலை மேற்பிரிவு அருள்மிகுஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் வளந்தந்து வாழ்வளிக்கும் தாயே முத்துமாரி வளங்கொண்டு நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா நலம் கொண்ட உயர்வாழ்வு எமை வந்தடைய உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா மலை சூழ்ந்த திருவிடத்தில் இருந்தருளும் தாயே முத்துமாரி மாண்புடனே நாம் வாழ உன்கருணை வேண்டுமைய்யா மேன்மை கொண்ட உயர்வாழ்வு எமை வந்தடைய உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா கருணைமழை பொழிந்துலகைக் காக்கும் தாயே முத்துமாரி கவலையின்றி நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா குற்றமில்லா நிறை வாழ்வு எமை வந்தடைய உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா அன்புடனே அரவணைத்து ஆறுதலைத் தரும் தாயே முத்துமாரி அச்சமின்றி நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா எழுச்சிமிகு பெரு வாழ்வு எமை வந்தடைய உடனிருந்து எமைக்காப்பாய் எங்கள் முத்துமாரியம்மா நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து நிம்மதியைத் தரும் தாயே முத்துமாரி மகிழ்ச்சியுடன் நாம் வாழ உன்கருணை வேண்டுமம்மா மானமுடை நிறை…

Read More

2023 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கோணக்கலை பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி பசறை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு திடலில் கடந்த 14,15, 16 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இத்தொடரில் கோணக்கலை பெருந்தோட்டப்பிரிவுகளைச் 20 அணிகள் கலந்துகொண்டு மோதின. கோணக்கலை மேற்பிரிவு இளங்கதிர் அணி – ரேந்தபல R.C.C அணியினர்க்கிடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரேந்தபல R.C.C அணி வெற்றியடைந்து வெற்றிக்கிண்ணத்தை சவீகரித்தது. இரண்டாம் இடத்தை இளங்கதிர் அணியினரும் மூன்றாவது இடத்தை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய அணியினரும் பெற்றுக்கொண்டனர். போட்டித் தொடரின் சிறந்த வீரராக ஜஸ்டீன் தெரிவானார். போட்டித் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக அருள் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக சஞ்சீவன் ஆகியோரும் சிக்ஸர் ஹிட்மேனாக பாலமுருகனும் தெரிவுசெய்யப்பட்டு பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டனர். நடராஜா மலர்வேந்தன்

Read More

கந்தப்பளை அல்மா கிரேமண்ட் இளைஞர்கள் தன்னார்வமுடன் பிரதேசவாசிகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை உயர்த்துவதற்காகவும் ஆரம்பித்த எழுகை நூலகம் மூன்று ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக முன்னோக்கி செல்கிறது. வாசிப்போடு சேர்ந்து மாணவர்களிடம் காணப்படும் தனித்திறமையை வெளிக்கொணரும் பல்வேறு முயற்சிகளை எழுகை நூலக நிர்வாகம் செய்து வருகிறது. நூலகத்திற்கு வருகைதரும் மாணவர்கள் சிறிது நேரம் விளையாட்டுச் செயற்பாட்டை மேற்கொள்வதோடு நூலகத்தில் காணப்படும் இசைக்கருவிகளை இசைத்தும் மகிழ்கின்றனர். இந்நூலகத்தில் 4000க்கு மேற்பட்ட பல்துறை சார்ந்த நூல்களும் இசைக்கருவிகளும் விளையாட்டுப் பொருட்களும் காணப்படுகின்றன. இம்மூன்றாண்டுகளில் பிரதேச மாணவர்களின் கல்வியிலும் பாரிய மாற்றம் பெற்றுள்ளது இதனை வெளிவரும் தேசிய பரீட்சை பெறுபேறுகள் வெளிகாட்டுகின்றன. மாணவர்கள் குழுவாகவும் தனியாகவும் கற்பதற்கான சூழலை எழுகை நூலக நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது. இதே போல மலையகத்தில் பல்வேறு பிரதேசங்களில் நூலகங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் எழுகை நூலகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக…

Read More

ஹோமுட் தோட்ட மைதானத்தில் முதன் முறையாக ஹிப் ஹொப் தமிழா கழகம் நடத்திய கிரிகட் போட்டி மலையகம் .lk யின் அனுசரணையில் மிகவும் சிறப்பாக கடந்த 15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன. போட்டியில் 30 அணிகள் கலந்துகொண்டதோடு முதலாமிடத்தை ஸ்ரீவல்லவன் அணியும், இரண்டாம் இடத்தை கதிரவன் அணியும் , ஹிப் ஹொப் தமிழா மூன்றாம் இடதையும் பெற்றனர். இந்த பண்டிகை காலத்தில் சிறப்பாக போட்டிகளை நடத்திய ஹிப் ஹொப் தமிழா அணிக்கு மலையகம்.lk பாராட்டி மகிழ்கின்றது.

Read More

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவின் புதிய பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி எச்.எம்.என். தெஹிகம தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். அவர் கடமையேற்கும் நிகழ்வு அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது. சர்வமத தலைவர்கள், அட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More

(க.கிஷாந்தன்) அட்டன் – அபோஸ்ட்லி தோட்டத்தின் கௌனிவத்த பிரதேசத்தில் வாழும் 130 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் லிவிங் வோட்டர் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதில் கடந்த 40 வருடங்களாக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். விவசாயத்துக்கென அமைக்கப்பட்டிருந்த சிறு கிணறுகளில் இருந்தே நீரை பெற்று வந்தனர். அது சுத்தமான குடிநீராக அமையவில்லை. வேறு வழி இல்லாதததால் அதன் ஊடாகவே நீர்த்தேவையை பூர்த்தி செய்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே அம்மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 1.5. மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தாம் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை குறித்து பிரதேச சபை மற்றும் அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் முறையிட்டு மக்களுக்கு தீர்வு கிட்டவில்லை. இந்நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி யோகான் பெரேராவின் தலையீட்டையடுத்து, நீர் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More

நானுஓயா நிருபர் நுவரெலியாவில் மலர் கண்காட்சி ஆரம்பம்.. நுவரெலியா வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி இன்று (17) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நுவரெலியாவில் தற்போது வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவதற்கு ஏராளமான உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இதில் ஒரு கட்டமாக வருடம் தோறும் குறித்த மலர் கண்காட்சி நடைபெறும் . இம்முறை விக்டோரியா பூங்காவில் நவீன மயப்படுத்தப்பட்டு , புதிய அரியவகையான பூக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த மலர் கண்காட்சியில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்கள் இணைந்திருந்தனர். அரச மற்றும் தனியார் பிரிவுகளிலிருந்து பல போட்டியாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.இம்மலர் கண்காட்சிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது. நுவரெலியா மாநகர…

Read More

எல்ஜின் தொடக்கம் திஸ்பனை வரை ஆற்றில் மிதந்து வரும் மீன்களை உன்ன வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக எல்ஜின் காட்டுப்பகுதியில் இருந்து வரும் ஆற்றுநீர் கருமை நிறமாக மாரி வருவதுடன் குறித்த ஆற்றில் காணப்படும் மீன்கள் தொடக்கம் நீர்வாழ் உயிரிணங்கள் இறந்து வருவதை பிரதேச மக்கள் அவதானித்து வருகின்றனர். அதே போல் இன்றும் காலை முதல் அதிக எண்ணிக்கையிலான மீன்கள் இறந்து வருவதை கன்ட மக்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளனர். சம்வ இடத்துக்கு சென்ற சுகாதர வைத்திய அதிகாரி குறித்த மீன்களை பரிசோதித்து மக்களை குறித்த மீன்களை உணவுக்கு எடுக்க வேண்டாம் என அறிவித்தல் விடுத்துள்ளதோடு எல்ஜின் பக்கமாக மேலதிக பரிசோதனைக்கு சென்றுள்ளார். இது குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு இப்படி கருமையான நிறத்தில் ஆற்றில் தண்ணீர் வருவதால் குளிப்பது தொடக்கம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

Read More