Author: Thana
அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;
தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 9 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதியை, தனது உறவினர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி ஒருவரே இந்த நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அஸ்வெசும நிவாரணத்திற்குத் தாங்கள் தகுதியுடையவர்களாக இருந்தும் பணம் கிடைக்கவில்லை எனப் பயனாளிகள் அளித்த முறைப்பாட்டை அடுத்து, பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத் மேற்கொண்ட விசாரணையில் இந்தப் பண மோசடி கண்டறியப்பட்டு, தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியைப் பணி இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் மேற்கொண்டுள்ளார். குறித்த வங்கிக் கணக்கு தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இம்மாணவியின் மறைவுக்குப் பல்கலைக்கழக சமூகத்தினரும், மாணவர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 2,94,089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் சிங்கள மொழியில் 2,20,366 விண்ணப்பதாரர்களும், தமிழ் மொழியில் 73,723 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர். பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம் நிறைவடைந்துள்ளதுடன், பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரங்களை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பெற்றோர் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி, நிதானமாகப் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் பெற்றோர்களையும் மாணவர்களையும் அறிவுறுத்தியுள்ளது. முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் காலை 9.30 மணிக்குத் தொடங்கி 10.45 மணிக்கு…
“தெரியாத ‘ஹாய்’ மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டாமென எச்சரிக்கை! இலங்கையர்களை இலக்கு வைக்கும் கணினி மோசடிக் கும்பல்!”
“இன்ஸ்டாகிராம் முதல் வாட்ஸ்அப் வரை… தொடரும் பாலியல் கப்பம் கோரும் மோசடி… ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த மோசடி இந்தியாவிலிருந்தே முக்கியமாக இயங்கி வருவதாகவும், உள்நாட்டுத் தொடர்புகளும் இதில் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. (PAUSE – PAUSE)மோசடிக்காரர்கள் தங்களின் இலக்குகளை வீழ்த்துவதற்கு முன்னர், அவர்களின் சகோதர சகோதரிகள் உட்பட உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது நண்பர்கள் பட்டியலில் முன்கூட்டியே இணைத்துக் கொள்கின்றனர். இதன் முதல் கட்டமாக, இன்ஸ்டாகிராம் மூலம் அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட கணக்கிலிருந்து ‘Hi’ என குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்தச் செய்திக்கு பதிலளிப்பவர்களுடன் சில நாட்கள் உரையாடி நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அரைகுறை ஆடை அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, மறுமுனையிலும் உள்ள நபரை…
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதைத் திருத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஏற்பாடுகளை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு: அரசியலமைப்பின் 107(5) உறுப்புரை திருத்தப்படுவதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்படவுள்ளது. பிரதம நீதியரசரின் பதவிக் காலம்: பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளிலிருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் — இதில் எது முன்னதாக வருகிறதோ அந்நாளில் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற புதிய சரத்து சேர்க்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: அரசியலமைப்பின் 137வது உறுப்புரையில் செய்யப்பட்டுள்ள திருத்தத்திற்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை “12 பேருக்கு மிகாமல்” என்பதற்குப் பதிலாக “24…
இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு! இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கம்பம் ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார். இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், டித்வா புயல் அனர்த்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவற்றை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களையும் செந்தில் தொண்டமான் நினைவூட்டினார். அத்துடன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செந்தில் தொண்டமான் பின்வரும் கோரிக்கைகளை…
செ.திவாகரன் நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை. நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவிவருகின்றது. இந்நிலையில் நுவரெலியா – தலவாக்கலை (ஏ7) பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு சந்திக்கு அருகில் வீதி நடுவில் திடீரென தாழிறங்கியுள்ளது. இதன் காரணமாக குறித்த இடத்தில் போக்குவரத்து ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் மேலும் இதற்கு முன்னரும் இதே இடத்தில் தாழிறக்கம் ஏற்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர் மழைகாரணாமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள், பிரதான வீதியில் வெடிப்புக்கள் உள்ளதால் வீதியினை சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம்…
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையானது வன்முறையாக மாறியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 15ஆக அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு குருவிட்ட சிறைச்சாலையில் தோன்றிய பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் கைதிகளுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளால் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குருவிட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் விசேட காவல்துறை அதிரடிப்படையினரும் (STF), கலகத்தடுப்புப் பிரிவினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !
பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மீட்பு கல்கிசைப் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து, ஒரு கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த இரு பிரதான சந்தேக நபர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாகக் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, இச்சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சந்தேக நபர்கள் தெகிவளைப் பகுதியிலும், அவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றுமொரு பெண்ணும் ஆணும் ஹட்டன் – பத்தனைப் பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட எட்டு ஜோடி தங்கத் தோடுகள், நான்கு தங்கப் பதக்கங்கள், ஒரு தங்கக் காப்பு, பத்து தங்க மாலைகள், ஒரு…
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கும் கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.