Author: Thana

நாட்டின் பல பாகங்களில் பிற்பகலுக்குப் பின்னர் 50 மி.மீ வரை மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ​மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ​அதேவேளை, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பதிவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ​நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும். ​பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை: இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான…

Read More

மலையகத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது. ​1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பிறந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்த தலைவராவார். இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் உரிமைகள், குடியுரிமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ​1947ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் விளைவாகப் பெருமளவிலான மலையகத் தமிழர்கள் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழந்த சூழலில், அவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக அவர் பல்வேறு போராட்டங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். குறிப்பாக, 1980களில் குடியுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக அவர் மேற்கொண்ட அரசியல் முயற்சிகள் மூலம், மலையக மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையை மீளப் பெற்றுக்கொடுப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். ​இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்…

Read More

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் நாளை ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் என அச்சம்மேளனத்தின் பொதுச்செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார். விரிவுரையாளர் பற்றாக்குறை, அதிக பணிச்சுமை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன், பணிப்புறக்கணிப்புக்கு இணையாக நாளை பேரணி ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

அஸ்வசும நலன்புரி திட்டத்தின் கீழ், அக்டோபர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படுகின்றன. இதன்படி, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் எழுபது வயதுக்கு மேற்பட்ட ஆறு லட்சத்து தொண்ணூற்றைந்தாயிரத்து எண்ணூற்று எண்பத்திரண்டு (6,95,882) முதியோர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக, நலன்புரி நன்மைகள் சபையினால் முந்நூற்று நாற்பத்தேழு கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் இன்று முதல் தமது அஸ்வசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சர்வதேச வெற்றிகளை இலக்காகக் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்குவதுடன், ஆரோக்கியமான மக்களுக்காக விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களை உருவாக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் சர்வதேச மட்டத்தில் வெற்றிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வீர வீராங்கனைகளை உருவாக்குவதுடன், நாட்டில் விளையாட்டு கலாசாரமொன்றைக் கட்டியெழுப்பி ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கத்துடன் விளையாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். சுகாதாரத் துறை தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக தொற்றா நோய்கள் மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு விளையாட்டுத் துறையானது பரந்ததொரு பங்கை ஆற்ற முடியும் என்று குறிப்பிட்டார். அதற்காக, மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி, சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான…

Read More

மலையக வரலாற்றில் மிகப்பெரிய சோகமாகப் பதிவான பதுளை மாவட்டம், கொஸ்லந்தை – மீரியபெத்த பாரிய மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (29) 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பகுதியினருக்கு இதுவரை நிரந்தர வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ​கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாகப் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தையும் இருப்பிடங்களையும் இழந்து நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டன. ​இந்நிலையில், அனர்த்தத்தின் 12ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டுத் தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (29) ஹப்புத்தளை நகரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ​இப்போராட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே இதுவரை நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எஞ்சியுள்ள பல குடும்பங்கள் தமக்கான வீடமைப்பு வசதிகள் இன்றி…

Read More

தலவாக்கலை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசவாதிகளால் பிடிக்கப்பட்டு, உடபுசல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ​எஸ். கௌசல்யா ​தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) இரவில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவரே வியாழக்கிழமை (29) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். ​குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரெனச் சந்தேகிக்கப்படுபவரைப் பிரதேசவாசிகள் இணைந்து மடக்கிப் பிடித்து உடபுசல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ​இதனையடுத்து, உடபுசல்லாவ பொலிஸாரால் சட்டரீதியாகக் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காகத் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதலாவது புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலின்படி, ஒன்பது இலட்சத்து 91 ஆயிரத்து 800 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதேநேரம், தகவல்களைப் புதுப்பித்த 23 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களில், 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 குடும்பங்கள் இம்முறை தகுதியிழந்துள்ளன. தகுதி பெற்றுள்ள குடும்பங்களில் மிகவும் வறிய பிரிவைச் சேர்ந்த 3 இலட்சத்து 63 ஆயிரத்து 142 குடும்பங்களுக்கு மாதாந்தம் 17,500 ரூபாவும், வறிய பிரிவைச் சேர்ந்த 6 இலட்சத்து 28 ஆயிரத்து 658 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. புதிய பயனாளிகள் பட்டியல் பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் www.wbb.gov.lk என்ற இணையத்தளத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCU) அதிகாரிகள் நேற்று (28) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடத்திய சோதனையின் போது, ​​46 வயதான இந்தியர் ஒருவர், ரூ. 454 மில்லியன் மதிக்கத்தக்க சந்தைப் பெறுமதியுடன்  கொக்கைன் மற்றும் எக்ஸ்டஸி போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டார். தொழில்ரீதியாக ஒரு பொறியாளரான அந்தப் பயணி, கத்தார் ஏர்வேஸ் விமானம் QR 654 மூலம் பாரிஸிலிருந்து தோஹா வழியாக நாட்டிற்கு வந்திருந்தார். மேலதிக விசாரணைக்காக இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அந்தப் பயணி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். பயணியின் உடமைகளை சோதனையிட்டபோது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன, அவை மேலதிக விசாரணையில் கொக்கைன் மற்றும் எக்ஸ்டஸி போதைப்பொருட்கள் என அடையாளம் காணப்பட்டன. அதன்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்பில் 5,121 கிராம் கொக்கைன் அடங்கும், அதன் மதிப்பிடப்பட்ட சந்தை மதிப்பு ரூ. 256 மில்லியன் ஆகும். மேலும், ஏறக்குறைய 23,000 மாத்திரைகளுக்குச் சமமான,…

Read More

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ‘ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்’ நோய் மீண்டும் பதிவாகி வருவதாகச் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பன்றிகள் கண்டறியப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர், வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்தார். கடந்த ஆண்டு கட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த நோய் நிலைமை, நடப்பாண்டில் சில பகுதிகளில் மீண்டும் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்துப் பொதுமக்கள் மற்றும் பண்ணையாளர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த 48 பண்ணைகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் குறித்து வைத்தியர் பிரதீப் குமாரவடு மேலும் விளக்கமளித்தார்: “இனப்பெருக்கம் மற்றும் இறைச்சிக்காகப் பன்றிகளை வளர்க்கும் பண்ணைகளிலேயே இந்த நோய் நிலைமை அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பண்ணைகளிலிருந்து சுமார் 1,200 பன்றிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில், கொழும்பு,…

Read More