Author: Thana
மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரான் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடையவரின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் பொதுமக்களிடையே ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. உள்நாட்டு கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 05 கிலோ எடையுள்ள பொதியொன்றை கிலோவொன்று 350 ரூபா வீதம் விற்பனை செய்தமை தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கமைய, குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு 150,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், வெல்லவாயவின் யாலபோவ பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா GR 11 அரிசி கிலோவொன்றின் கட்டுப்பாட்டு விலை 240 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கிலோவொன்றை 260 ரூபாவிற்கு அதிக விலைக்கு சில்லறையாக விற்பனை செய்தமை தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கும் வெல்லவாய நீதவான்…
கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு
பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.” ”கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார். கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு, கடந்த 8 வருடங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 2024 ஆம் ஆண்டில், குறித்த பயணக் கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த தாமதத்திற்குக் கண்டனம் தெரிவித்தும,கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியுமே இந்த நاتுளாவிய ரீதியிலான பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக நந்தன ரணசிங்க மேலும் தெரிவித்தார்.”
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் (10) முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,532 பரீட்சை நிலையங்களில், இம்முறை பரீட்சைக்காக 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களில் 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.” ”பரீட்சை எழுதும் மாணவர்களுக்காகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி சில விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். அதற்கமைய, பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக அனைத்துப் பரீட்சார்த்திகளும் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் மற்றும் புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் பரீட்சை மோசடிகள் காரணமாகப் பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள…
கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்! இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், கம்பவாரி ஜெயராஜை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நல்லாசி பெற்றார். இதன்போது, தனது இந்திய விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பில் செந்தில் தொண்டமான் கம்பவாரி ஜெயராஜிடம் விளக்கமளித்தார். மேலும், கம்பவாரி ஜெயராஜால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆன்மீகம் மற்றும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் இன்றைய சமூகத்திற்கு மிகவும் அவசியமானவை என செந்தில் தொண்டமான் தெரிவித்தார். எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு சமூக மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பிலும் கம்பவாரி ஜெயராஜிடம் செந்தில் தொண்டமான் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார்.
மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.
மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது. கடந்த வெள்ளிக்கிழமை வலப்பணை மல்லியப்பூ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் சிலர் புத்தர் சிலையொன்றை இரவோடு இரவாக நிர்மாணிக்க முற்பட்டபோது இரண்டு தரப்பில் கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் புத்தரின் பேரில் மட்டும் அல்லாமல் எந்த கடவுளின் பெயராலும் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் இதுபோன்ற செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்துநிறுத்துவதற்கு இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்ட இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பெரிய பெளத்த வழிப்பாட்டு தளம் இருக்கும் போது முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆலய நிருவாகத்தின் அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் அத்துமீறிய இனங்களுக்கு இடையிலான முறன்பாடுகளை ஏற்படுத்தும் இந்த செயற்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. இதுபோன்று வடபகுதியில…
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரித் திட்ட ஊழல் மோசடி தொடர்பில், மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் தகுதியான குடும்பங்களுக்குச் சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவுகள், உரியவர்களுக்கு வழங்கப்படாமல் உத்தியோகஸ்தர்களின் சொந்த மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஏனைய நபர்கள் மீதும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள்…
*காணியுரிமை தொடர்பான காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு* மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில்,,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கக் கூடிய காத்திரமான முன்மொழிவுகள், ஆலோசனைகள், வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தொடர்ச்சியாக மலையக விடியலுக்காக குரல் கொடுத்து வரும் சமூக,சிவில் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான சாத்தியப்பாடுகளுக்கு மலையக சமூக செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு அத்தியாவசியம் என அமைச்சின் சார்பில் வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கான ஆலோசனைகளும் சிவில் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் சார்ந்த அரசாங்கம் என்பதால் இதுவரை…
குவைத் மற்றும் கொழும்புக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வானூர்தி சேவைகள் இன்று (8) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பான தகவலை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.