Author: Thana

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையமொன்றை (Correctional Centre) நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1999 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கீழ் சுற்றுலா நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்கள் மூலம் சிறு தவறாளர்களுக்கு சமுதாயஞ்சார் சீர்திருத்தக் கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் அதிகமானவர்கள் போதைப்பொருள் அல்லது மதுசாரம் தொடர்பான தவறாளர்களாக இருப்பதுடன், அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து ஆரோக்கியமான பிரஜைகளாக சமூகமயப்படுத்துவதற்கு விசேட கவனத்தைச் செலுத்தி சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கட்டியெழுப்புவதற்கு சமுதாயஞ்சார் சீர்திருத்தச் செயன்முறைக்கு உட்படுத்தப்படுவர். ஆயினும், சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்திடம் அதிகமான போதைப்பொருட்களுக்கு அடிமைப்பட்டு தவறாளர்களாக இருக்கின்ற ஆட்களுக்கு வதிவிட சிகிச்சையை வழங்குவதற்குத் தேவையான பொருத்தமான போதியளவு விடுதி வசதிகள் இல்லை. அத்துடன், இத்திணைக்களத்திற்குச் சொந்தமான எவ்வித வதிவிட/வதிவிடமற்ற சீர்திருத்த நிலையங்களும் இல்லை. அதனால், இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு, கெக்கிராவ பிரதேசத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள…

Read More

கம்பளை நகரில் பாலத்தில் பாய்ந்த பெண்: போத்தலாப்பிட்டி பகுதியில் சடலமாக மீட்பு! ​கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பளை நகரில், கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளப் பெருக்கின் போது, கம்பளை பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் பாய்ந்து மாயமான பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. ​கடந்த 03.08.2026 அன்று மதியம், கம்பளை பிரதேச மக்கள் வெள்ள அபாயத்தால் பதற்றமான சூழ்நிலையில் இருந்த சந்தர்ப்பத்தில், திடீரென பெண் ஒருவர் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து மாயமானார். ​இந்நிலையில், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர், குறித்த பெண்ணின் சடலம் இன்று கம்பளை – போத்தலாப்பிட்டி, கலு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ​சம்பவம் குறித்து தகவல் அறிந்த கம்பளை பொலிஸாரும், தடயவியல் (SOCO) பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ​ க. யோகா

Read More

வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 11 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார். ​ கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இக்கொடூரச் செயல் இடம்பெற்றுள்ளது. ​தாயினால் கைவிடப்பட்டு, தந்தையின் பராமரிப்பின் கீழ் வாழ்ந்த 11 வயது சிறுமி 36 வயது நிரம்பிய நபரால் இவ்வாறு துஸ்பிரயோகதிற்கு உள்ளானார். ​வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ​குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக நீதித்துறையால் வழங்கப்பட்டுள்ள இவ்வாறான கடுமையான தண்டனைகள் சமூகத்தில் ஒரு வலுவான எச்சரிக்கையாக அமைகின்றன. ​#Vavuniya #CourtNews #ChildAbuse #SriLankaNews #Justice #VavuniyaHighCourt

Read More

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களை அண்மையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார். வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிவதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்து காணப்பட்டன. குறித்த பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவசியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தலையீடு செய்வதும், இச்சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் நான் நேரடியாக தலையீடு செய்வேன் என்றும் இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இங்கு தெரிவித்தார்.

Read More

குடியேற்ற மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் இன்று (11) முற்பகல் ஏற்பட்ட அவசர செயலிழப்பு தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. செயலிழப்புக்கு உள்ளான கணினி அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார். கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று முற்பகல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் முடக்கம் காரணமாக, இன்று (11) முற்பகல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வினவலுக்குப் பதிலளித்த அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ, கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Read More

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ​அதிகளவிலான உயிரிழப்புகள் ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன. அத்துடன், காளி (Cali) நகரமும் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ​மீட்பு நடவடிக்கைகளுக்காக பொகொட்டா மற்றும் மெடலின் ஆகிய நகரங்களில் இருந்து பேரழிவு நிவாரணக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ​ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியில் உள்ள சொக்கோ மாகாணத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாகக் கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ​சுமார் 96 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கிப்தோ உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ​இதற்கிடையில் பெரெய்ரா, மனிசாலேஸ், கிப்தோ, ஆர்மீனியா, கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய விமான நிலையங்களின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி…

Read More

தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் மறைவு!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் – தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளராக 2010 ஆம் ஆண்டு பணியாற்றிய மஹிந்த மடிஹஹேவவின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாகவும், தொழில் அமைச்சகத்தின் செயலாளராகவும், ஊழியர் நம்பிக்கை நிதி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தோட்டத் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடிய பல சந்தர்ப்பங்களில், மஹிந்த மடிஹஹேவ அதற்கு உறுதுணையாக இருந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்காக பல்வேறு சேவைகளை முன்னெடுத்த அவரது பங்களிப்பு பாராட்டுக்குரியது. அவரது மறைவு பெரும் இழப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும், தனது சார்பிலும் ஆழ்ந்த…

Read More

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை! கொட்டகலை பகுதிகளில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தார் கொட்டகலை, ஆகஸ்ட் 10: அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவினல் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (10) விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார். கடந்த வாரம் ஏற்பட்ட கடும் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவுக், காரணமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட திம்புல்ல கீழ் பிரிவு ஸ்டோனிக்கிளிப் கீழ் பிரிவு ஸ்டோனிக்கிளிப் டி.பி டிவிசன் மற்றும் லொக்கில் டிவிசன் உள்ளிட்ட பகுதிகளில் பல குடியிருப்புகள் உள்ளிட்ட மக்களின் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி…

Read More

கேகாலை பிரதேசத்தில் உள்ள பாடலொன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வினாத்தாள் தாமதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் மாணவர்களுக்கு நீதி வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையானது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு மிக முக்கியமான ஒரு பரீட்சை என்பதால், இவ்வாறான சம்பவங்கள் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திலீத் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இம்முறை உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காகச் சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என்பதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. இதற்கமைய, உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் ஈடுப்படும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பொறுப்புக்கள் மற்றும் தற்போதைய செலவீனங்களைக் கருத்திற்கொண்டு, போதுமானதொரு கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் திலீத் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Read More