Author: Thana

நுவரெலியா – நானுஓயா பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 62 வயதான சாரதியை நானுஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். கவனயீனமாக பஸ்ஸை செலுத்தியமையே, இந்த விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கல்வி சுற்றுலாவிற்காக கொழும்பிலிருந்து நுவரெலியா சென்ற பஸ் ஒன்று, நானுஓயா – ரதல்ல பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டு, பள்ளத்தை நோக்கி பயணித்திருந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவந்த மாணவர்களை ஏற்றிவந்த பஸ் வண்டி, நானுஓயா – ரதெல்ல பகுதியில் ஏற்படுத்திய விபத்தில் வேன், மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் . அவர்களின் விபரம் 01:- அப்துல் ரஹீம் (55 வயது) 02:- ஆயிஷா பாத்திமா (45 வயது) 03:- மரியம் (13 வயது) 04:- நபீஹா (8 வயது) 05:- ரஹீம் (14 வயது) 06:- நேசராஜ் பிள்ளை (25 வயது, வேன் சாரதி) முச்சக்கர வண்டி சாரதி 07:- சன்முகராஜ் (25 வயது) அனைவரது ஆத்மாக்களும் சாந்தியடையட்டும். 🙏 நன்றி : சனத்

Read More

பசறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனு தாக்கல் இன்றைய தினம் பதுளை தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்றதன் பின்னர் வேட்பாளர்களை வரவேற்கும் முகமாக பசறை சிறி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விஷேட பூசைகள் இடம்பெற்றதுடன் பசறை நகரில் வரவேற்பு பொது கூட்டமும் இடம்பெற்றமையை படங்களில் காணலாம். ராமு தனராஜா

Read More

தலவாக்கலை மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்திருத்தம் செய்துகொள்ளவென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் கட்டுமான பொருட்களை வழங்கி உதவி புரிந்துள்ளார். தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச முக்கியஸ்தர்கள் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆருதல் கூறினர். மேலும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொழிலாளர்களின் லயன் குடியிருப்பில் ஏற்படும் தீ விபத்துக்களின் போது அவர்களுக்கு காப்புறுதி நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் வகையில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கூறினார்.

Read More

நானுஓயா நிருபர் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நானுஓயா டெஸ்போட் வழியாக சுற்று வீதியினை பயன்படுத்த வேண்டும் எனவும் இவ்வாறு மீறி செயற்படும் சாரதிகளுக்கு சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ,இதுவரை நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதிகமாக கனரக வாகனங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் அதிகமான உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மிகவும் சரிவான இவ் வீதியில் அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . இதன் போது உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்

Read More

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் (01/20) பசறை மற்றும் பசறை 13 ம் கட்டைப் பகுதிகளில் பசறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போது 20 வயதுடைய ஒருவரும் இன்றைய தினம் (01/21) 29 வயதுடைய நபர் ஒருவரும் ஐஸ் ரக போதைப் பொருளுடன் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெல்கஹதன்ன, வராதொல, மீரியபெத்த, பினல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29, 25, 34, 20, 18,18 வயது களை உடைய நபர்கள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட 8 சந்தேக நபர்களையும் இன்றைய தினம் பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – மருதனார்மடம் அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமான் திருக்கோயில் இராமபிரான் தூதுவராய் இலங்கை வந்த ஆஞ்சநேயர் இற்றைவரை உடனிருந்து காக்கின்றார் எங்களையே உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும் மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள் மறம் அழித்து அறம் காக்க இலங்கை வந்த ஆஞ்சநேயர் மதிதவறா நிலையிருக்க உடனிருந்து காக்கின்றார் எங்களையே உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும் மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள் சீதையம்மை சிறைமீட்க இலங்கை வந்த ஆஞ்சநேயர் மனவுறுதி தந்து உடனிருந்து காக்கின்றார் எங்களையே உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும் மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள் கொடுங்கோன்மை ஆட்சியையே அழிக்க இலங்கை வந்த அஞ்சநேயர் கொடியவர்கள் கொட்டத்தை அடக்கி உடனிருந்து காக்கின்றார் எங்களையே உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும் மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம்…

Read More

நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதால குறுக்கு வீதியில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றுமாலை  இடம்பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=W6MMhN0zuW8 கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற பஸ் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பாதையில் பயணித்த வேன் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தால் வேனில் பயணித்த 07பேர் சம்பவ இடத்திலையே பலியானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Read More

முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி நாளை (21) காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையான 9 மணி நேரம் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Read More