Author: Thana

வெலகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பகோட்ட பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவைக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ​அம்பகோட்ட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. ​இதனைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த வெலகெதர பொலிஸார், குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் தனது மனைதியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி இக்கொலையைப் புரிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர். ​சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 50 வயதுடைய கணவரிடம், வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ​இச்சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகள், உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ​சிறைச்சாலைச் சுவருக்கு மேல் உள்ளே வீசப்பட்ட சிறிய பொதி ஒன்றை, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதை அடுத்து, கைதிகள் சிலர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். ​இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அறை ஒன்றின் பூட்டை உடைத்து 40க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியேறியுள்ளனர். எனினும், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களை மீண்டும் சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். ​இதற்கிடையில், சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையைக் தீவிரமாகக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படையின் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அதிக எண்ணிக்கையிலான அஸ்வெசும பயனாளிகளைக் கொண்ட நுவரெலியா, நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும நிதி மோசடி 162 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில் அலுவலகத்தைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, இது குறித்து விரிவான விசாரணை கோரி நோர்வூட் பிரதேச செயலாளர் சமீரா கம்லத், ஹட்டன் காவல் பிரிவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார். முன்னதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகள் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோனுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த பிரம்மாண்ட மோசடி அம்பலமானது. சந்தேக நபர்கள் பயனாளிகளின் நிதியைத் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கணக்குகளுக்கு மாற்றியதுடன், தனிப்பட்ட கடன்களாக வழங்கி வட்டியின்றி மாதாந்திரத் தவணைகளை வசூலித்து வந்துள்ளமையும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களிலும் அஸ்வெசும, சமுர்த்தி…

Read More

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் லொத்தர் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்திட்டத்திற்கு தேசிய லொத்தர் சபை நிதி அனுசரணை குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் கல்வி உதவித்திட்டத்திற்கு தேசிய லொத்தர் சபையினால் இன்று (06) நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்குரிய காசோலையை தேசிய லொத்தர் சபையின் தலைவர் எம். டி. சிரில் அண்டன் பெரேரா, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகேவிடம் கையளித்தார். ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அங்கீகாரத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் ஆகஸ்ட் 23ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. லொத்தர் விற்பனையின் மூலம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப்…

Read More

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தொடர்பான 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பது தொடர்பான அனைத்து புனர்வாழ்வு நிறுவனங்களையும் உடனடியாக ஒரு ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின்கீழ் கொண்டு வர ஜனாதிபதி அறிவுறுத்தல் பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார். போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிக்கஅரசாங்கம் ஆரம்பித்துள்ள ” முழு நாடு மே ஒன்றாக” தேசிய செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினரின் தீவிர பங்களிப்பையும் வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புனர்வாழ்வு நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் அனைத்து புனர்வாழ்வு நிறுவனங்களையும் உடனடியாக ஒரு ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்குமான அவசியத்தையும்…

Read More

கொழும்பு பெருநகர் நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை ( 07) அதிகாலை 5.00 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்.. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இயங்கி வரும் நவோதயா அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற “நவோதயா சிட்னி ஓணம் 2026” விழா, கேரளத்தின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடிய சிறப்புமிக்க கலாசார நிகழ்வாக கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி ரீஜென்ட்ஸ் பார்க் ஸ்ரீ துர்க்காதேவி கோயில் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) சார்பில் தயாரிப்பாளரும் நடிகருமான Shelvin Das மற்றும் TFAA அணித் தலைவர் மற்றும் பொதுத் தொடர்பு அலுவலருமான Ravi Anandarajah ஆகியோர், ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அரசியல், சமூக மற்றும் கலாசாரத் துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட…

Read More

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல் கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு உடனடியாக நிரந்தரத்தீர்வுகள் காணப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய (05) அமர்வின்போது உரையாற்றிய அவர், ஆற்றின் நீர்மட்டம் குறைவடைந்த போதிலும், ஆற்றின் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள் தொடர்ந்தும் அச்ச நிலையிலேயே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “கொத்மலை அணைக்கட்டு வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளது. அணையின் சமீபத்திய அறிக்கைகளும் அதைக்குறிக்கின்றன. இன்றுகூட மதியம் 12 மணிக்குக் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. மதியம் 12 மணி நிலவரப்படி, நீர்த்தேக்க மட்டம் 702 எம்.எஸ்.எல் (MSL) ஆகவும், மொத்தச் சேமிப்பு 168 ஆகவும்…

Read More

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும்-இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை (மஸ்கெலியா நிருபர்) நேற்று முன் தினம் புதன்கிழமை ?5) கண்டி இந்திய துணை உயர்ஸ்தானிகர் திருமதி எஸ்.வி. சரண்யாவை கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் சந்தித்து கலந்துரையாடி கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தி உயர்தரத்துக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரண உதவிகளோடு, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான மடிகணினிகள் மற்றும் இளைஞர் யுவதிகளின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் தையல், விவசாயம், பால் சார்ந்த உற்பத்திகள், வீட்டுக் கைத்தொழில் போன்ற சுயதொழில்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவற்றைவழங்கி உதவுமாறும்வை தொடர்பில் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இக்கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர் நந்தகோபால் பாஸ்கரன், செயலாளர்…

Read More

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் – ஜனாதிபதி புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்கவும் மேம்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தை உயர்த்தவும் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளை உருவாக்க உதவியதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலமே மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதம் மாறுகிறது என்றும், அதனைச் சரியாக அடையாளம் காண்பவர்களே எதிர்கால உலகை வெல்ல முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில்…

Read More