Author: Thana
நு.ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 16.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.அனைத்து பழையமாணவர்களையும் கலந்துக்களுக்குமாறு பழையமாணவர் சங்கம் அழைக்கின்றது.மேலதிக தகவல்களுக்கு 0766870891,0713483312
ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம் பசறை 7ம் கட்டை, அக்கத்தன்னை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில் ஆறுபடை வீடு கொண்ட வேல்முருகா ஆறுதலைத் தந்திடவே விரைந்துவா ஐயா ஆதரித்து காத்தருள உன் கருணை வேண்டுமைய்யா பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய் ஆறுமுகம் கொண்டவனே அழகனே வேல்முருகா பரிதவிக்கும் நிலை அகற்ற விரைந்துவா ஐயா பங்கமின்றி நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய் பார்வதியின் இளமகனாய் வந்துதித்த வேல்முருகா இன்ப நிலை எமக்கருள விரைந்துவா ஐயா இன்னலின்றி நாம்வாழ உன் கருணை வேண்டுமைய்யா பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய் சிவனார்க்கு உபதேசம் செய்தவனே வேல்முருகா சிந்தையினைச் சீர்செய்ய விரைந்துவா ஐயா சீர்மையுடன் நாம் வாழ உன் கருணை வேண்டுமைய்யா பசறையிலே கோயில் கொண்ட சிவன் மகனே உடனிருப்பாய் சரவணப் பொய்கையிலே வந்துதித்த வேல்முருகா சங்கடங்கள் போக்கி எமக்கருள விரைந்துவா ஐயா…
மிரிஹான பத்தேகன பிரதேசத்தில் ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது.
இருவரை தாக்கி ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்,மிரிஹான பத்தேகன பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. நுகேகொட பிரிவு போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொள்ளையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேல், தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று (14) அதிக வெப்பநிலையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அதிக தாகம் மற்றும் தசைப்பிடிப்பு போன்றன ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் வயோதிபர்கள் மற்றும் நோய்க்குட்பட்டவர்களை வீட்டிற்குள்ளேயே தங்கவைக்குமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை கால்நடைகளை நிழலில் கட்டிவைக்குமாறும் கால்நடைகளுக்கு அதிகமாக தண்ணீரை வழங்குமாறும் மில்கோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. (
புத்தாண்டு அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
இந்த புத்தாண்டில் அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை செய்கின்றனர். கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான போது நாம் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது. அடுத்த புத்தாண்டில், இதனை விடவும் சௌபாக்கியத்தையும் செழிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக ஒரே பாதையில் பயணித்தால் அந்த…
மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம் மாத்தளை, குமரமலை – அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில் குமரமலை மீதமர்ந்த மாமணியே குமரேசா குறையில்லா நிறை வாழ்வை தரவேண்டும் குற்றங்கள் நெருங்காது துணை இருப்பாய் மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே மலை உச்சி மீதுறையும் மாமணியே குமரேசா மாசண்டா மனத்தினையே தரவேண்டும் மகிழ்ச்சி கொண்டு நாம் வாழத் துணை இருப்பாய் மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே குஞ்சரத்தின் முகம் கொண்டோன் இளையவனே மாமணியே குமரேசா அச்சமில்லா மனவலிமை தரவேண்டும் இச்சைகள் நெருங்காது துணை இருப்பாய் மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே தஞ்சமென்று தாள்பணிவோர் துணையிருக்கும் மாமணியே குமரேசா நெஞ்சமதில் நிம்மதியைத் தரவேண்டும் வஞ்சனைகள் நெருங்காது துணை இருப்பாய் மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே வாஞ்சையுடன் எமக்கருளும் மாமணியே குமரேசா வழிகாட்டி நெறிப்படுத்தி நல்வழியைத் தரவேண்டும் வேதனைகள் நெருங்காது துணை இருப்பாய் மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே சேவற்…
CYC விளையாட்டு கழகத்தின் சித்திரை கொண்டாட்டம். கேம்பிரி மேற் பிரிவு இளைஞர் கழகத்தின் (CYC) பிறந்த தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடாத்தப்படும் கலை, கலாச்சார, விளையாட்டு போட்டிகளின் முதற்கட்டமாக மகளீருக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 11ம் திகதி இடம்பெற்றிருந்த அதே வேளையில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியானது இன்றைய தினம் கேம்பிரி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மொத்தமாக 10 அணிகள் மோதிய இந்த விளையாட்டு போட்டியில் இறுதி சுற்றில் CYMBRU SUPER KINGS அணியும் CYC CHELLENGEGERS அணியும் மோதியதில் CYC CHELLENGEGERS அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடி தமது வெற்றியை பதிவு செய்து கொண்டது. மேலும் நாளைய தினத்தில் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் முகமாக மரதன் ஓட்ட போட்டி, சறுக்கு மரம் ஏறுதல், தேங்காய் துருவல் என பல்வேறு சுவாரஸ்யமான போட்டி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குறித்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களை கௌரவிக்கும் பரிசளிப்பு நிகழ்வும் இளைஞர் யுவதிகளை…
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் 3 தினங்களுக்கு சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கைதிகளை சந்திக்க பிரவேசிக்கும் உறவினர்கள், ஒருவருக்கு போதுமான உணவு பொதி மற்றும் இனிப்பு பண்டங்களை கொண்டு வர முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுதவிர, சகல சிறைச்சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஓய்வளிக்கப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்தெனிய மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில், விக்கட் காப்பாளர் சதீர சமரவிக்ரம மற்றும் சுழற்பந்து வீச்சாளர் துஷான் ஹேமந்த ஆகியோர் புதிய வீரர்களாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனினும், நிறைவடைந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பெயரிடப்பட்ட நிரோஷன் டிக்வெல்ல, ஓஷத பெர்னாண்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை. மேலும், வேகப்பந்து வீச்சாளர்களான கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோருக்கும் இந்தப் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து அணி இரண்டு போட்டிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவிக்கின்றது. இதற்கான கடிதத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் குறிப்பிடுகின்றது. இதன்படி, எதிர்வரும் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரிலல் நடைபெறும் 23 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான போட்டிகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து அணிக்கு கடந்த ஜனவரி மாதம் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தடை விதாத்திருந்தது. விளையாட்டுத்துறை அமைச்சரினால் நடத்தப்பட்ட கால்பந்து தேர்தலில் மூன்றாவது தரப்பின் தலையீடு இருந்துள்ளதாக தெரிவித்தே, இந்த தடை பிறப்பிக்கப்பட்டது.