Author: Thana

டி.சந்ரு நானுஓயாவில் புகையிரத்தில் மோதி இளைஞன் பலி புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. https://youtu.be/01sSKPOUFfo கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) விடியற்கலை சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவே வைத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் நானுஓயா கிலோசோ தோட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லதூரை சிரிதரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு தற்போது நானுஓயா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்துள்ள இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பலாங்கொடை வளவை கங்கை வெலிஹரனாவ நீர் இறைக்கும் நிலையத்திற்கு அருகில் நீராடச் சென்று காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பலாங்கொடை பொலிஸார் கடற்படையினர் பிரதேச மக்கள் இணைந்து சடலங்களை மீட்டனர். 17 வயதுடைய மாணவனும் மற்றும் 15 வயதுடைய மாணவனும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் பலாங்கொடை தேசிய பாடசாலை மற்றும் பலாங்கொடை CC தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் நேற்று நீராட சென்றிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

Read More

வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம் தொண்டமனாறு அருள்மிகு செல்வச்சந்நிதி முருகப்பெருமான் திருக்கோயில் சூரனை அடக்கி அருள் தந்த முருகா உன் வீரவேல் துணையெமக்கு என்றுமே ஐயா கரங்கள் பன்னிரெண்டு கொண்டு அருளுகின்ற முருகா இரங்கி வந்து எமக்குத்துணை செய்திடுவாய் ஐயா வட இலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட முருகா வளமான எதிர்காலம் தந்திடுவாய் ஐயா வேடுவன் திருமகளை மணந்தவனே முருகா நாடெங்கும் நல்லமைதி காத்திடுவாய் ஐயா செல்வமிகு சந்நிதியில் கோயில் கொண்ட முருகா நல்லருளை நமக்களிக்க விரைந்திடுவாய் ஐயா வரும் துன்பம் தடுத்திடவே வந்திடுவாய் முருகா அல்லல் அகற்றியென்றும் துணைபுரிவாய் ஐயா நல்மனது கொண்டவரை வாழவைப்பாய் முருகா நிம்மதியை நிலைத்திடவே செய்திடுவாய் ஐயா நேர்மையாய் வாழும்வழி வகுத்திடுவாய் முருகா மனவுறுதி தந்தெம்மை வாழவைப்பாய் ஐயா அன்னதானக் கந்தனென்று பெயர் கொண்ட முருகா ஆறுதலை என்றென்றும் தந்திடுவாய் ஐயா இன்பம் எங்கும் நிறைந்திடவே உறுதி செய்வாய் முருகா எண்ணமெல்லாம் உன்பெருமை நிறைந்திடட்டும் ஐயா ஆறுபடைவீடு…

Read More

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் நபர் ஒருவர் தனது தாடியின் பலத்தை மாத்திரம் பிரயோகித்து 1km தூரம் பட்டா வாகனத்தை இழுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த 59 வயதான திருச்செல்வம் என்ற நபரே இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார். நேற்று பிற்பகல் 4.45 மணிக்கு தனது சாகச பயணத்தை மட்டுவில் சந்திரபுரம் சிவன் கோவிலடிக்கு அண்மையில் ஆரம்பித்து பிற்பகல் 5.30 மணியளவில் 1km தொலைவில் அமைந்துள்ள மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் வந்து தனது பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். இதன்போது வீதிகளில் ஏற்றம் இறக்கம் என பல தடைகளையும் தாண்டி அவர் தனது சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

Read More

பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (11) நிதியமைச்சில் இடம்பெற்ற பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளின் விலை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது, ​​காலணிகள் மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு, அவற்றின் உள்ளூர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் பைகள் மற்றும் காலணிகளின் விலையும் குறைய வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் துறைக்கு அமைச்சு தெரிவித்துள்ளது. விலை குறையவில்லை என்றால் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு உடனடியாக அறிவித்து விலையை குறைப்பதற்கு…

Read More

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதற்காக பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். பொது மக்களின் பாதுகாப்பு கருதி நெரிசலான பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் சாதாரண உடையில் இருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் சித்திரை புத்தாண்டு விசேட விழாக்களை ஏற்பாடு செய்பவர்கள் அதில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவற்றை பொலிஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

Read More

எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கும் 12 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கம் பெயரிட்டுள்ளது. வலைப்பந்து சம்மேளனம் முன்னதாக உலகக் கிண்ணத்திற்கான பூர்வாங்க அணியை அறிவித்திருந்ததுடன், அந்த அணி, தேசிய வலைப்பந்து பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாச மற்றும் என். பிரசாதியின் கீழ் அடிப்படைப் பயிற்சி பெற்றார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் விக்டோரியா பிரீமியர் லீக் போட்டியில் விளையாடி வரும் இலங்கை வீராங்கனை தர்ஜனி சிவலிங்கம் பங்கேற்பது சற்று கேள்விக்குறியாகி உள்ளதாகவும், அவர் அணியில் சேர முடியாத பட்சத்தில் இமேஷா பெரேரா அணியில் இணைய உள்ளதாகவும் வலைப்பந்து சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலைப்பந்தாட்ட தெரிவுக்குழுவினால் இந்த அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், தமயந்தி ஜயதிலக்க தலைமையிலான இந்த தெரிவுக்குழுவில் திசங்கி கொடிதுவுக்கு மற்றும் சாமிக்கா ஜயசேகர ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக பெயரிடப்பட்ட 16 பேர் கொண்ட குழாமில் இருந்த…

Read More

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை 4.0 மெக்னிடியூட் அளவில் நிலடுக்கம் பதிவாகியுள்ளது. புதன்கிழமை காலை 10.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை பீகாரில் இன்று அதிகாலை 4.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் இல்லை.

Read More

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் – பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 70 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பொம்மைவெளி 5 ஆம் குறுக்கு வீதியை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார். இவர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக இன்றைய நாளை குறித்தொதுக்கியவர்கள், நண்பகல் 12 மணிக்கு முதல் தங்களின் விண்ணப்பங்களை பாரமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இன்றைய தினத்தை குறித்தொதுக்காத யாரும் கடவுச் சீட்டை பெறும் நோக்கில் குடிவரவு திணக்கள அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் புதியாக கடவுச் சீட்டை பெறுவதற்கான தினத்தை ஒதுக்கிக்கொள்வதற்காக தொலைப்பேசி அழைப்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More