Author: Thana
இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி. குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது. குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளார். சகோதரி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நிலையில் விஹாகன பொதுப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர், ஆங்கில மொழியில் உயர்தர வர்த்தகப் பாடத்தில் கல்வி கற்க குருநாகல் பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளதுடன், திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த 17ஆம் திகதி கல்கமுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
பண்டிகைக் காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்காக தற்காலிக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். காலியில் இடம்பெற்ற புதிய பேருந்துகளை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டின் கிராமப்புற வீதிகளில் பொது போக்குவரத்தை வலுப்படுத்த 500 புதிய பேரூந்துகளை இயக்கும் திட்டத்தின் கீழ் இந்த பேரூந்துகள் நாட்டிலுள்ள அனைத்து டிப்போக்களுக்கும் விநியோகிக்கப்படும். இதனடிப்படையில், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் டிப்போக்களுக்கு இந்த பேருந்துகளை கையளிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. ‘நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று நிலைமை உள்ளிட்ட நெருக்கடிகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தமிழ், சிங்களப் புத்தாண்டை வழமை போன்று…
பெண்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சமூக பொருளாதாரத்திற்கு எதிராக எழுவோம் என்ற தொனிப்பொருளில் இராகலை நகர் புறநெகும வரவேற்பு மண்டபத்தில் 2023/03/26 ஆம் திகதி பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் ஏற்பாட்டினால் மகளிர் தின சிறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் கல்லாகவே ஆனாள் என்ற புத்தக வெளியீடும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட்ட தக்கதாகும்.
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- யாழ்ப்பாணம், கொழும்புத்துறை அருள்மிகு மன்றுளாடும் விநாயகப் பெருமான் திருக்கோயில் கொழும்புத்துறை நற்பதியில் கோயில் கொண்ட விநாயகரே கொடுமை களைந்தெம்மைக் காவல் செய்ய வாருமைய்யா அல்லல் அகற்றியெமக்கருள் நல்கும் விநாயகரே அறநெறியே நிலைத்துவிட அருள்தரவே வாருமைய்யா இலந்தைக் குளமருகில் இருந்தருளும் விநாயகரே இலக்கின்றித் தவிக்குமெம்மை வழிநடத்த வாருமைய்யா அறிவுதந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் விநாயகரே அருகிருந்து காவல் செய்து அணைத்தருள வாருமைய்யா மன்றுளாடும் பெருமான் என்ற நாமம் கொண்ட விநாயகரே மலரடியைப் போற்றி நிற்கும் எமக்கருள வாருமைய்யா கல்விச் செல்வம் வழங்கும் அகம் அருகு கொண்ட விநாயகரே காத்து வழிநடத்தி எம்மை வழிநடத்த வாருமைய்யா யோகர் என்னும் சித்தர் வாழ்ந்த பதி அமர்ந்தருளும் விநாயகரே யோக்கியமாய் நாம் வாழ வழிதரவே வாருமைய்யா துன்பம் களைபவனே துயர் போக்கும் விநாயகரே தூயவள வாழ்வு தர விரைந்து நீ வாருமைய்யா உன்னருளால் உலகமெல்லாம் உய்ய வேண்டும் விநாயகரே உற்றவரும் ஊரவரும் மேன்மையுற…
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. அங்கு, வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தன. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் தொல்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர். எனினும், குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர்கள் வழக்கிலிருந்து தற்காலிகமாக கடந்தவருடம் விடுதலை செய்யப்பட்டதுடன், குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (26) காலை ஆலயத்திற்கு சென்ற கிராமமக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு அழித்தெறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம்…
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை ஏப்ரல் 29 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது படகு சேவை உரிமையாளர்கள் கூறுகையில், ஒரு வழி பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும். மற்றும் 100 கிலோ நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். ஒரு படகு ஒரு நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு சுமார் 4 மணி நேரம் பயணம் செய்யும் மற்றும் முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படும். படகுச் சேவை திறக்கப்பட்டுள்ளதால், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தொழில்முனைவோரும் இந்த வாய்ப்பில்…
டி சந்ரு பூண்டுலோயா கும்பாபிஷேக திருவிழாவில் 17 பவுண் தங்க நகைகளை திருடிய 9 பேர் கைது ! பூண்டுலோயா அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 7 பெண்கள் உட்பட 2 ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் . இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பல்லெகலை , வவுனியா, புத்தளம், யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கும்பாபிஷேக திருவிழாவில் பங்கேற்ற ஒன்பதிற்கும் மேற்பட்ட அடியவர்களின் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டதை தொடர்ந்து நகைகளைப் பறிகொடுத்தவர்கள் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் . அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சிறுமி ஒருவரிடம் தங்கச் சங்கிலியை அச்சுறுத்தி அபகரிக்க முற்பட்ட போது அவர்களின் இருவர் பொது மக்களும் , பொலிஸாரும் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் ஏழு பேர் தப்பிச்செல்ல…
2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடைவடிக்கைகள் நாளை (27) ஆரம்பமாகவுள்ளன. குறித்த தவணை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் ஏப்ரல் 05 முதல் 16 ஆம் திகதி வரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும். இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஆசிரியர் சிகரம் பிலிப் இராமையா அவர்களின் 90 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 2023 / 03/ 25 ஆம் திகதி இராகலை உயர் தேசிய பாடசாலையில் அவரின் ஆசிரியர் சேவையை பாராட்டும் முகமாக சிறப்பு விழா இடம்பெற்றது . நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீட்டர்போல் கலந்துகொண்டதோடு ,சிறப்பு அதிதியாக பேராசிரியர் தனராஜ் கண்ர்த்துக்கொண்டார். நிகழ்வுக்கான தலைமையை சட்டத்தரணி தாயுமானவன் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிலிப் இராமையா இராகலை உயர் தேசிய பாடசாலையிபாடசாலையின் முதலாவது பட்டதாரி என்பதுடன் மேலும் அதே பாடசாலையின் முதலாவது பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்வில் அவரின் நண்பர்கள் இணைந்து தொகுத்த சிகரம் பற்றிய சில சாரல் துளிகள் எனும் நூலும் வெளியிடப்பட்டது. சரணியா ரவி