Author: Thana

இன்றைய தினம் பூனாகலை கபரகலை தோட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேரில் சந்தித்ததுடன் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் அப்பியாச புத்தகங்களை வழங்கி வைத்தார்.

Read More

லங்கா சதொச நிறுவனம் இன்று (24) முதல் அமுலுக்குவரும் வகையில் பத்து அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, செத்தல் மிளகாய், வெள்ளைப் பூண்டு, நெத்தலி, கடலை, உள்நாட்டு சம்பா, டின் மீன், பெரிய வெங்காயம், உள்நாட்டு உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி மற்றும் வட்டானா பருப்பு ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஒரு கிலோ செத்தல் மிளகாய் 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1380 ரூபாவாகும். ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 450 ரூபாவாகும். ஒரு கிலோ நெத்தலி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1100 ரூபாவாகும். ஒரு கிலோ கடலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 155 ரூபாவாகும். ஒரு கிலோ உள்நாட்டு சம்பா 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 199 ரூபாவாகும். டீன் மீன் ஒன்றின்…

Read More

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாளை (25) மு.ப. 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, கோட்டை, கடுவெல ஆகிய மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை – முல்லேரியா ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Read More

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச பட்டதாரிகளை இலங்கையின் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாளை நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை அன்றைய தினம் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பரீட்சை திகதி அறிவிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை எதிர்வரும் திங்கட்கிழமை 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை கடந்த டிசம்பர் 5ஆம் திகதி முதல் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 5ம் திகதி முதல் 16ம் திகதி…

Read More

சட்டவிரோதமான முறையில் மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றிச்சென்றவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஹப்புத்தளை-தம்பேதல பகுதியில் இருந்து வெலிமடை பகுதிக்கு லொறி ஒன்றில் ஒரு பசு மாடு மற்றும் காளைகள் மாடு மூன்று, ஆகியவற்றை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற வேளை குறித்த லொறியை ஹப்புத்தளை பகுதியில் வைத்து பண்டாரவளை விசேட பொலிஸ் பிரிவினர் சோதனையிட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாடுகளும் லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மாடுகள் மற்றும் லொறி ஆகியயவை ஹப்புத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்டவற்றை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராமு தனராஜா

Read More

சதொச விற்பனை நிலையங்களில், இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 210 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 298 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 270 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 119 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தகரப் பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் டின் மீனின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 520 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 555 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 1,100…

Read More

ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹாலிஎல போகொட பகுதியில் நீர் வடிந்தோடும் வடிகானில் 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேற்று வியாழக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் 8 வயது சிறுமியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் படையினர் பொலிஸார் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இன்று வெள்ளிக்கிழமை சற்றுமுன் 10 வயது சிறுவனின் சடலம் குறித்த பகுதியில் இருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் நேற்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையின் காரணமாக போகொட கொட்டியாமலுவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வடிகானுக்கு அப்பால் உள்ள வீட்டுக்கு தனது தாய் சென்றுள்ளதாகவும் தாயை அழைத்து வருவதற்காக சென்ற இரண்டு சிறுவர்களும் நீர் வடிகான் ஒன்றை கடப்பதற்கு முற்பட்ட வேளை இன்று பெய்த கனத்த…

Read More

சமூக ஆர்வலரும் அகில இலங்கை சமாதான நீதவனும் ஆகிய எம்.பெர்னாண்டோ(J.P) அவர்களின்  ஏற்பாட்டில் 2023/03/19 ஆம் திகதி மனித நேயம் எனும் தொணிப் பொருளின் கீழ் எல்பியன் பிரிவுக்கு உட்பட்ட 22 கர்ப்பிணி தாய்மார்களிட்கு உதவும் வகையில் அக்கரபத்தனை போலீஸ் அதிகாரிகள் ( O.I C)வி.சுந்தர்ராஜ் அவர்களின் தலைமையிலும் எல்பியின் பிரிவின் கர்ப்பிணி  தாய்மார்களின் தாதியர் எஸ்.மதுபாஷினி , சமூக ஆர்வலர் பி .எஸ் .எல் ராஜா, எப் .எந்தனிதாஸ் யோகாசன பயிற்றுவிப்பாளர் என். சந்திரபாலா அவர்களின்  மூலமாகவும் ஆட்லோ தோட்ட பெர்னாண்டோ அவர்களின் இல்லத்தின் முன்பதாக இந்நிகழ்வு முறையில் இடம்பெற்றது.

Read More

டி சந்ரு மின் கட்டணத்தை உயர்த்தியதை யடுத்து மாதாந்த மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில்  பெருந் தோட்ட  தொழிலாளர்களும் கிராம பகுதிகளில் வாழும் பாமரை மக்களும்  அவஸ்த்தை படுகின்றனர். எனவே அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை மறு பரீசீலணை செய்து மின்சாரக் கட்டணத்தை குறைப் பதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா அமைப்பாளரும்,  நுவரெலியா மாவட்ட தமிழ் பிரிவு குழு தலைவருமான தொழிலதிபர் கலாநிதி சதானந்தன் திருமுருகன் தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், குறைந்த எண்ணிக்கையிலான யுனிட்களை பாவித்தாலும் பெருந்தோட்ட  தொழிலாளர்கள்  செலுத்த முடியாத அளவுக்கு மின்கட்டண பட்டியல் வந்துள்ளதாகவும், தங்க நகைகளை அடகு வைத்தே மின்சார  கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமைக்கு தொழிலாளர்கள்  தள்ளப்பட்டுள்ள தாகவும் பெருந்தோட்ட தொழிலாளர் கள் கவலை தெரிவிக்கின்றார்கள் . நாளாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கைச் செலவை கொண்டு நடத்த முடியாத…

Read More

பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆளும் கட்சியின் அனுமதியுடன் முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விசேட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சஞ்சீவ எதிரிமான்ன இதனை வழிமொழிந்தார். இந்த குழு (22) பாராளுமன்றத்தில் கூடியது, அங்கு திரு பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்ட பதவிக்கு நியமிக்கப்பட்டார். முறைகள் மற்றும் நடைமுறைகள் மீதான சிறப்புக் குழு, அமைச்சரவை குழுவின் அமைச்சர்கள் அல்லாத 16 உறுப்பினர்களை கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாயை சேகரிப்பதற்காகவும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவால் இது பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கமைய  அரசாங்கத்தின் சார்பில் வரிவிதிப்பு, முத்திரைத் தீர்வை மற்றும் பிற வருவாய் வளர்ச்சி தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்யவும், தேவைப்படும் போது வரி மற்றும் முத்திரைத் தீர்வை குறித்த தற்போதைய கொள்கைகளில் மாற்றங்களை முன்மொழியவும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஒவ்வொரு மூன்று…

Read More