Author: Thana
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி விவகாரம் – விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் ஜீவன் கோரிக்கை.
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு செல்லவுள்ளதாகவும், இதன்போது சேதமாக்கப்பட்ட சிலை மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார். வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட அதேபோல விக்கிரகங்களும் மாயமாகியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ” சம்பவம் தொடர்பில் அறிந்த பின்னர் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினோம். உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார். நானும் இது தொடர்பில் கோரிக்கை…
வெள்ளவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளவாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் பௌத்த மதகுரு ஒருவரினால் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமையினால் ஆசிரியரான மதகுரு வெள்ளவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவனின் தந்தையினால் வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு அமையவே பாடசாலையின் ஆசிரியரான குறித்த பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவன் வெள்ளவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வருகின்றார். மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று (29) இரவு முதல் இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும். ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும். இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, எஞ்சிய பேருந்து கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன.
உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் இன்னு நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒரு லீட்டர்; பெட்ரோல் ஒக்டேன் 92 – 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 340 ரூபாவிற்கும் பெட்ரோல் ஒக்டேன் 95 – 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 375 ரூபாவிற்கும் டீசல் – 80 ரூபாவினாலும் குறைக்கப்பட்டு 325 ரூபாவிற்கும் சுப்பர் டீசல் – 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டு 475 ரூபாவிற்கும் மண்ணெண்ணெய் – 10 ரூபாவினாலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் திருத்தப்படும் எரிபொருள் விலையே இவ்வாறு முன்கூட்டி திருத்தப்படும் எனவும், இன்று நள்ளிரவு 12 மணி முதல் குறைந்த விலையில் எரிபொருளினை பெற்றுக்…
போதியளவு எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால், விநியோகம் வழமை போன்று தொடரும் எனவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் எரிபொருள் விநியோகம் நேற்று தடைப்பட்டிருந்தது. எனினும் இராணுவத்தினரின் விசேட பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஏற்கனவே 2017 இல் கைச்சாத்திடப்பட்துள்ளதுடன் அது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் ப்ரெமன் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும் விஞ்ஞானியுமான டாக்டர் இங் அன்றியஸ் கொன்ச்கென் ஆகியோரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம், கொச்சிக்கடை அருள்மிகு பொன்னம்பல வாணேசுவரர் சிவன் திருக்கோயில் அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் எங்கள் சிவனே அறநெறியை மேலோங்க உறுதி செய்வாய் ஐயா அச்சம் அகற்றிடுவாய் ஆதரவைத் தந்திடுவாய் கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே உமையவளை உடன் கொண்டு உறைகின்ற சிவனே உண்மையெங்கும் நிலைபெறவே உறுதிசெய்வாய் ஐயா ஆணவம் அகற்றிடுவாய் அன்பைப் பெருக்கிடுவாய் கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே ஐந்தொழில்கள் ஆற்றியுலகை ஆட்சி செய்யும் சிவனே ஐயமில்லா நல்வாழ்வை உறுதி செய்வாய் ஐயா துன்பம் அகற்றிடுவாய் துணிவைத் தந்திடுவாய் கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே இயற்கையின் இயக்கமாய் இருந்தருளும் சிவனே இன்பமிகு வாழ்வினையே உறுதி செய்வாய் ஐயா நெஞ்சமதில் நிம்மதியை நிறைந்துறையச் செய்திடுவாய் கொழும்பு மாநகர் கோயில் கொண்ட பொன்னம்பல வாணேசுவரப் பெருமானே எங்கும் நிறைந்துறைந்து எமையாளும் சிவனே ஏக்கமில்லா வாழ்வினையே உறுதிசெய்வாய்…
நு.கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் இன்று ஆரம்ப வகுப்பு மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் விஜேகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் வளர்ச்சிக்காக அப்பாடசாலையின் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புக்கள் காத்திரமானதாக இருந்தது. ஆசிரியர் ஆலோசகர் சண்முகநேசன், வைத்திய அதிகாரி பிரதீப் பெரேரா, நானுஓயா பொலிஸ் பொருப்பதிகாரி,குழந்தைகள் பெற்றோர் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
கந்தப்பளையில் இளைஞர்களினால் எழுகை நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் நிறைவையொட்டி புத்தக கண்காட்சி
அல்மா கிரேமண்ட் கந்தப்பளையில் அவ்வூர் இளைஞர்களினால் எழுகை நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் நிறைவையொட்டி புத்தக கண்காட்சி , சிறார்களுக்கான ஓவிய போட்டி மகளிர் தினத்தையொட்டி மகளிருக்கான கலாசார விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்வை எழுகை அமையம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு பாம் பௌன்டேசன் அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கது. சுமார் 4000 புத்தகங்கள் புத்தக கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததோடு 70 போட்டியாளர்கள் ஓவிய போட்டியில் பங்குபற்றியிருந்தனர். மேலும் மகளிருக்கான விளையாட்டுப்போட்டியில் ஊர் பெண்கள் மிக உற்சாகமாக பங்குபற்றியிருந்தனர். கலை நிகழ்ச்சிகள் யாவும் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்திருந்தன. இந்நிகழ்வுக்கு ஊர் பொதுமக்கள் சிறார்கள், இளையவர்கள் ஆசிரியர்கள் காவல்துறை அதிகாரிகள் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.