Author: Thana
– 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜனாதிபதிக்கு எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்து – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று தனது 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிலையில் அவரது சேவைகள் நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமானதுடம் இந்த நாட்டை கட்டியெழுப்பி இளைஞர்களுக்கான எதிர்காலத்தை அவரால் மாத்திரமே உருவாக்க முடியுமென ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினருமான எஸ்.ஆனந்தகுமார் பிறந்ததின வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். கடந்த ஐந்து தசாப்பங்களாக அவர் இந்த நாட்டுக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உழைக்கிறார். 1977ஆம் ஆண்டு முதல் இன்றைய நவீன தொழில்நுட்ப யுகம்வரை அவரது அனுபவம் உள்ளது. அவர் நாட்டை பொறுப்பேற்றிருந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் நாடு அதலபாதாளத்தில்தான் இருந்தது. 2001ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற தருணத்தில் யுத்தம் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருந்தது.…
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் மழை
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்ஏனைய பிரதேசங்களில்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேல்மற்றும்வடமேல்மாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்காலை வேளையிலும்மழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- அனலைதீவு அருள்மிகு சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் திருக்கோயில் எங்கும் எதிலும் என்றும் வந்துறையும் எங்கள் கணபதியே ஏற்றமிகு நல்வாழ்வை எமக்களிக்க கருணை செய்வாய் என்றும் உடனிருந்து வழிகாட்டி விட்டிடைய்யா அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே தீவகத்தில் வீற்றிருந்து திசையெங்கும் காக்கின்ற கணபதியே தீராத துன்பங்களைத் தீர்த்தெமக்கு கருணை செய்வாய் என்றும் உடனிருந்து காத்து அருளிடைய்யா அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே அலைகடல் சூழ் தீவினிலே அமர்ந்தருளும் கணபதியே அச்சமில்லா பெருவாழ்வை எமக்களிக்க கருணை செய்வாய் என்றும் உடனிருந்து எம்நிலையை உயர்த்தி விட்டிடைய்யா அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே நம்பிக்கை தந்தெம்மை வாழ வைக்கும் கணபதியே நிம்மதியை என்றும் எமக்களிக்கக் கருணை செய்வாய் என்றும் உடனிருந்து துணிவைத் தந்திடைய்யா அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே வேழமுகம் கொண்டு வேதனைகளையும் கணபதியே வேதனைகளில்லாத பெருவாழ்வை எமக்களிக்கக் கருணை செய்வாய் என்றும் உடனிருந்து ஆறுதலைப்…
தொடர்ந்து பல மாத காலமாக வெவெஸ்ஸ தொழிற்சங்க பிரிவில் தொழிற்சாலை அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை நிலவி வந்தது. இதற்கிடையில் தொழிற்சங்க அதிகாரி செய்த தவறுக்கு தொழிலாளர் வேலை நிறுத்தப்பட்டது பேச்சு வார்த்தைக்கு பின்னர் குறித்த தொழிலாளிக்கு இடமாற்றப்பட்டு தேயிலை மலைக்கு செல்லுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். விடயம் அறிந்து களத்திற்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் பின்வருமாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்தும் வெவெஸ்ஸ தோட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்தின் நிறை அதிகரித்தல் மேலதிகமாக பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்தின் நிறைக்கு ஏற்றார் போல ஊதியம் வழங்கப்படாமை என பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக இன்றைய தினம் தோட்ட நிர்வாகத்தினரின் அடாவடி செயற்பாட்டுக்கு எதிராக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த…
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போகொட பகுதியில் இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹாலிஎல போகொட பகுதியில் நீர் வடிந்தோடும் வடிகானில் 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இன்று பெய்த கடும் மழையின் காரணமாக போகொட கொட்டியாமலுவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வடிகானுக்கு அப்பால் உள்ள வீட்டுக்கு தனது தாய் சென்றுள்ளதாகவும் தாயை அழைத்து வருவதற்காக சென்ற இரண்டு சிறுவர்களும் நீர் வடிகான் ஒன்றை கடப்பதற்கு முற்பட்ட வேளை இன்று பெய்த கனத்த மழையின் காரணமாக வடிகானில் நீர் அதிகளவில் வந்தமையால் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த இரண்டு சிறுவர்களும் போகொட வித்தியாலயத்தில் தரம் ஐந்து மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் சகோதரர்கள் ஆவர். வடிகானில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் செருப்பும், சாரமும் , சிறிய கூடை பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஹாலிஎல பொலிஸாரும் பொது மக்களும்…
கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம்
இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. தொழில் அமைச்சு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பரந்து கிடக்கும் கைவினைக் கலைஞர்களை மாவட்ட மட்டத்தில் ஒன்று சேர்த்து, ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்பட வேண்டிய கைவினைப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறையும் இதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு, 25 மாவட்டங்களைச் சேர்ந்த கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட 2214 கலைப்படைப்புகளில், 100 சிறந்த கைவினைஞர்களின் 546 கலைப்பொருட்கள் தேசிய நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினைஞர்களின் கலைப்படைப்புகளைப் பாராட்டி,…
புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு முரணாக யாரேனும் செயற்படுவார்களாயின் உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர், விதுர விக்கிரமநாயக்கவினால் நேற்று முன்தினம் (21) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்… கடந்த காலங்களில், இலங்கைக்கு கிடைக்கும் விசாக்கள் பல இலட்சங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன. அவ்வாறான மோசடிகளை தடுப்பதற்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களுக்கு நியாயமான சேவைகளை வழங்குவதே தனது நோக்கம். இம்முறை…
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மமா/ஹட்/ பின்னோயா இலக்கம் 02 தமிழ் வித்தியாலய மாணவர்கள் சாதனை
வெளிவந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மமா/ஹட்/ பின்னோயா இலக்கம் 02 தமிழ் வித்தியாலய நான்கு மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 100 புள்ளிகளுக்கு மேல் 29 மாணவர்கள் புள்ளிகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேற்படி சித்திப்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த 21/03/2023 செவ்வாய்க்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் கௌரவ திரு.பி . ஸ்ரீதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
டி சந்ரு நுவரெலியாவில் ஏப்பிரல் வசந்தகால நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் இந்த இரு கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 03.04.2023 மற்றும் 04.04.2023 ஆகிய இரு தினங்களில் நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் (சினிசிட்டா மைதானம்) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=ad8Zmjj9h0k&feature=youtu.be இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது இவ்விரு கல்லூரிகளின் வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக அமையப்படவுள்ளது. இந்த நிலையில் இப் போட்டி தொடர்பாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நுவரெலியா கிறேன்ட் உல்லாச ஹோட்டலில் (23.03.2023) காலை இடம்பெற்றது. நுவரெலியா பரிசுத்த திருத்துவ தேசிய கல்லூரி அதிபர் எஸ்.ரவிசந்திரன், மற்றும் காமினி தேசிய கல்லூரியின் அதிபர் டப்ளியூ.எம்.நிமால்குமார ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில் கல்லூரிகளின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட இரு கல்லூரிகளின் கிரிகெட் அணிகளின் தலைவர்கள் மற்றும் வீரர்கள் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் வரலாற்று…