Author: Thana

வாத்துவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கியதாக கூறப்படும் மாணவர்கள் குழுவொன்றில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதே பாடசாலையில் 10 மற்றும் 12ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முன்னதாக தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மற்றுமொரு மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் எழுந்த வாக்குவாதம் முற்றி, பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் மூன்று மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், இது தொடர்பான முறைப்பாட்டை சமரச சபைக்கு அனுப்ப நடவடிக்கை…

Read More

பசறை கோணக்கலை ரேந்தபல பிரிவில் நேற்று முன்தினம் (07) பதினெட்டு வயது மகனை சவரம் செய்யும் கத்தியால் வெட்டிய தந்தை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிவதாவது. தந்தை மதுபோதையில் தாயிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதோடு தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை மகன்மார் தடுக்க முற்பட்ட வேளையில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர். தந்தையினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த மகன் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு கண்டி பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

தனியார் பயணிகள் பேருந்தில் சென்ற இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. பிலியந்தலையில் இருந்து கஹபொல நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணிகளின் பணப்பையொன்றை இருவர் இணைந்து திருட முற்பட்ட நிலையில் அதனை அவதானித்த நடத்துனர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விசாரணையில், வாக்குவாதம் முற்றி, சந்தேகநபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடத்துனரை தாக்க முயற்சித்துள்ளார். இதன்போது நடத்துனருக்கு உதவிக்கு வந்த இளைஞர் ஒருவர் மீது குறித்த கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள், சந்தேகநபர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் தப்பியோடியுள்ளார். மற்றைய சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பிலியந்தலை மடபாத பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ய…

Read More

வட மாகாணத்தில் மீண்டும் பெரிய அம்மை எனப்படுகின்ற இலம்பி நேய் Limpi disease தாக்கம் பரவி வருவதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் சுப்பிரமணியம் கஜரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த நோய் ஒரு வைரஸ் நோயின் தாக்கமாகும். குறிப்பாக, நுளம்பு, ஈ மற்றும் உண்ணிகள் மூலம் இலகுவில் பரவக்கூடியதாகும். 2020ஆம் ஆண்டிலும் இந்நோயின் தாக்கம் ஏற்பட்டு, பூரண கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி, அவற்றை பராமரிப்பதன் மூலம் இந்த நோயை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். தமது பகுதி கால்நடை போதானாசிரியர்கள் அல்லது கால்நடை வைத்தியர்களை தொடர்புகொண்டு இந்நோய்க்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் நேற்று முன்தினம் (07) பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளதாகவும்   கடந்த இரண்டு வாரங்களில் குறித்த 8 மாடுகள் இறந்துள்ளதாகவும் இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க…

Read More

சீனியின் மொத்த விற்பனை விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,சீனிக்கான மொத்த விற்பனை விலை ஒரு கிலோ கிராமுக்கு 20 முதல் 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் இதனை அறிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இந்த விலைக் குறைப்பு அமுலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாவின் மதிப்பு வலுப்பெற்று வருவதால் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சையையும், சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்தியும், தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தியும் தமது தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கான உரிமை நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்த தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வினாத்தாள்களுக்கு விடை எழுதுவதற்கு இடைக்காலத்தின் போது சந்தர்ப்பம் வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். பரீட்சைகள் எதுவாக இருந்தபோதிலும் அதற்கு தாய்மொழியில் பதிலளிப்பதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும் என்றும் அவர் கூறினார். ஏந்தவொரு நாட்டிலும் ஆரம்பக் கல்வி…

Read More

கடந்த சனிக்கிழமை (04/03/23) அன்று ஹட்டன் புனிதஜோன்பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் நடாத்திய நுவரெலியா மாவட்ட பாடசாலைகளின் கபொத (சாத )மாணவர்களுக்கிடையிலான இணைந்த கணித,விஞ்ஞான திறன்காண் போட்டியில் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி முதல் இடம் பெற்றுள்ளது. ஒரு பாடசாலையிலிருந்து தலா 5மாணவர்கள் வீதம் முப்பதிற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கு கொண்ட இப்போட்டியில் நமது மாணவர்கள் 1ம்,3ம்,4ம்,8ம் மற்றும் 10ம் இடங்களை பெற்று குழு நிலையில் முதலாமிடத்தையும் சுவீகரித்துள்ளனர்.

Read More

நுவரெலியா – லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டப் பகுதியில் தொழிலாளர்கள் இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.தேயிலை மலையில் வேலை செய்துக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 24 வயதுடையவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளரென எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read More

கொழும்பு தும்முல்ல சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றும் (07/03) கொழும்பு பல்கலை கழக வளாகத்தில் அர்ப்பா ட் டத்த்தில் ஈடுபட்ட பல்கலை கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை  தாக்குதல்களை பொலிஸார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More