Author: Thana
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹலகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்த பதுளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் இருந்து 6300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதே பகுதியை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா
கடந்த ஐந்தாம் திகதி ரிதிமாலியெத்த பிரதேச சபை தவிசாளரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியோர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு.
கடந்த ஐந்தாம் திகதி ரிதிமாலியெத்த பிரதேச சபை தவிசாளர் நிஷாந்த ஜயசுந்தர ரிதிமாலியெத்த பிரதேச சபைக்கு சொந்தமான UP PS 5483 கெப் ரக வாகனத்தில் ஆந்தா உல்பத சந்தனாராமய விகாரைக்கு வழிபாட்டிற்கு செல்லும் போது விகாரைக்கு அருகாமையில் கெப் ரக வாகனத்தை நிறுத்தி விட்டு விகாரைக்கு வழிபாட்டிற்கு சென்று மீண்டும் திரும்புகையில் குறித்த வாகனம் சிலரால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக ரிதிமாலியெத்த பிரதேச சபை தவிசாளரினால் ரிதிமாலியெத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் தலைமறைவாகி இருந்த நிலையில் ரிதிமாலியெத்த பொலிஸாரினால் 39,42 வயதுடைய ஆந்தாஉல்பத பகுதிகளைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ராமு தனராஜா
2023 மார்ச் 8ம் திகதி மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக நல நிறுவனங்களில் ஒன்றான லங்கா விஷன் எக்சன் பவுண்டேஷன் ஏற்பாட்டில் தலவாக்கலை லோகி மற்றும் கூம்வூட், மிடில்டன் ஆகிய தோட்டங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கான மகப்பேறு பராமரிப்பு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு லோகி மெடிக்கல் சென்டரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் லங்கா விஷன் எக்சன் பவுண்டேஷன் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களான துரைராஜா பிரசாந்தி, சுப்ரமணியம் கிரவுன்சன் மற்றும் டியா செர்லின் ஆகியோரும் தோட்ட நிர்வாகம் சார்பில் நலம்புரி அதிகாரி, CDO மற்றும் ஊருக்கு பொறுப்பான தாதியாரும் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் அவர்களுக்கான மகப்பேறு தொடர்பான தெளிவூட்டலும் வழங்கப்பட்டது.
நாட்டின் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்…
லிந்துலை ,நாகசேனை டில்குல்ற்றி வழியாக பசுமலை நகருக்கு செல்லும் பாதை மீண்டும் மக்கள் பாவனைக்கு
லிந்துலை ,நாகசேனை டில்குல்ற்றி வழியாக பசுமலை நகருக்கு செல்லும் பாதை கடந்தகாலத்தில் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாதிருந்த நிலையில் இவ்வருட ஆரம்ப காலப்பகுதியில் காப்பட் இடப்பட்டு சீர்த்திருத்தம் செய்யப்பட்டதுடன், டயகம முதல் தலவாக்கலைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் உகந்த நிலையில் காணப்பட்டது. இதே நேரம் இப்பாதையூடாக அட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேரூந்தும் ஐந்து மாதத்திற்கு முன்பு இயக்கப்பட்டது. எனினும் கடந்த காலத்தில் ஏற்ப்பட்ட சீரற்ற மழைக்காரணமாக குறித்த பாதையில் உள்ள பாலம் ஒன்று உடைந்து போக்குவரத்துக்கு தடையேற்ப்பட்டுள்ளதுடன், குறித்த பேரூந்து சேவையும் இடை நிறுத்தப்பட்டது. மேலும் பாதையை புணரமைக்க இலங்கை மின்சார சபையில் அகற்றப்பட்ட மின்சார தூண்கள் வழங்ப்பட்டுள்ளதுடன் கிறன்லி தோட்ட நிர்வாகம் பாலத்தின் சீர்த்திருத்த பணிகளை முன்னேடுத்தப் போதும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக பாதையை புணரமைக்க வேண்டாமென குறிப்பிட்டதன் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் பணிகளை இடைநிறுத்தியது. எனவே குறித்த பாதை பல்லாயிரக்கணக்கான மக்களின் தேவைகளை…
வெளிவந்த 2022 தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் கண்டி சஹிரா கல்லூரியின் மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். எம்.சயிட் 165,எம்.ஆர்.சகிப் 150,எம்.ஹம்தி 154,என் யூசுப் 143 ஆகிய மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்றதோடு ஏனைய மாணவர்கள் 100 மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட மூவர் தொடர்ந்து தடுப்புக்காவலில்.
வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி லுணுகலை பசறை பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் கடந்த மாதம் (11.02) புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லுணுகலை அடாவத்தைப் பகுதியை சேர்ந்த 48,50 வயதுடைய இருவரை அன்றைய தினமே பதுளை பொலிஸார் கைது செய்தனர். பின் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு அமைய லுணுகலை பகுதியை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் கடந்த மாதம் 13 ம் திகதி லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதன்போது மூன்று சந்தேக நபர்களையும் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த மூன்று சந்தேக நபர்களையும் கடந்த மாதம் 02/23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு அமைய லுணுகலை பகுதியை…
“அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 4வது வருடமாக நடைபெற்ற, “சர்வதேச மகளிர் தினம்” சாதனை பெண்கள் எனும் நிகழ்வு பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு (BMICH) மண்டபத்தில் 08/03/2023 புதன்கிழமை மாலை இடம் பெற்ற போது அண்மையில் மலையகத்தில் கொழுந்து பறித்தல் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்ற பெண்மணிக்கு விருது வழங்கி கௌரவித்தபோது கௌரவிக்கப்பட்டுள்ளது. (படம். இன்பாஸ் சலாவுதீன்)
தேசத்தின் வளர்ச்சிக்காக மௌனமாக மகத்தான சேவையாற்றும் பெண்களைக் கொண்டாடுவதற்கு ஒரு நாளை மட்டும் ஒதுக்குவது நியாயமில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் இன்று (9) தெரிவித்தார். நவீன பெண் சமூகத்தில் தனது பங்கை விஞ்சி வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் வளாகத்தில் இன்று (9) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மேலும் தெரிவித்ததாவது. மாக்சிம் கார்க்கியின் கூற்றுப்படி, உலகம் சூரியனின் கதிர்கள் மற்றும் தாயின் பாலில் இருந்து உருவாக்கப்பட்டது. இவ்வுலகில் பிறக்கும் எந்த மனிதனுக்கும் தாயின் பாலில் இருந்து மனித உயிர் கொடுக்கப்படுகிறது. அந்த அளவற்ற ஆற்றலை ஆணுக்குக் கொடுப்பது பெண்தான். 21 ஆம் நூற்றாண்டின் நவீனப் பெண் சில துறைகளில் ஆணை மிஞ்சி வெகுதூரம் வந்துவிட்டார். பொது சமூக நலனுக்கான…
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளினால் சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக, குற்றவாளிகளை தராதரம் பாராது கடுமையான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார , பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய 2023 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 13 பேரும், பெப்ரவாரி மாதத்தில் 11 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்கமைய இவ்வருடத்தின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளில் 12,637,500 ருபா அறவிட்டு முறைப்பாட்டாளர்களுக்கு வழக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக சட்டவிரோத முகவர்…