Author: Thana

(க.கிஷாந்தன்) கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வறிய குடும்பங்களின் சுயதொழில் வாய்ப்புக்காக ஒரு ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும் போது தெரிவித்தார். தலைவர் உட்பட 13 உறுப்பினர்கள் கலந்து கொண்ட அமர்வில் அவர் தொடர்ந்து பேசுகையில், கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களின் சுயதொழில் முயற்சிகளுக்காக காணியைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்துள்ளார்கள். அதற்கு அமைய, கொமர்ஷியல் பகுதியில் ஒரு ஏக்கர் காணியைப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிகைகளில் கேள்விப் பத்திரம் கோரப்படவுள்ளது. காணியைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள், அதற்கான பணத்தை பிரதேச சபையில் வைப்பிலிட்டு, தாங்களாகவே கடைகளை நிர்மாணித்துக் கொள்ளலாம் அல்லது சபையின் ஊடாக கடைகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இதில் எந்தவிதமான அரசியல் தொழிற்சங்க பேதமும் இருக்காது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து காணித்…

Read More

தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற பதுளை மாணவி வர்ஷினி. – ரா.கவிஷான் – அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டி 2022ல் தேசிய மட்ட, பிரிவு 5 கட்டுரை இலக்கியம் நயத்தல் போட்டியில் ஊவா மாகாண பது/ தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி செல்வி்.ர. வர்ஷினி 2 ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். குறித்த போட்டிகள் கடந்த 05,06ம் திகதிகளில் கொழும்பு இராமநாதன் இந்து கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு போட்டியாளர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றிருந்தது. இதில் கட்டுரை நயத்தல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வர்ஷினி ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு ஊவா மண்ணிற்க்கும் பாடசாலைக்கும் பெருமையை தேடிதந்தந்துள்ளார். இவரது வெற்றிக்கு வழிகாட்டிய பாடசாலையின் அதிபர் திருமதி. பவானி, உப அதிபர், தமிழ் மொழி தின போட்டி பொறுப்பாசிரியர், பகுதி தலைவர்கள், ஏனைய ஆசிரியர்கள் பெற்றோர் என அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Read More

(க.கிஷாந்தன்) 1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், சில சிவில் அமைப்புகள் இணைந்து  இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு  முன்பாக  ஆர்ப்பாட்டமொன்று மேற்கொண்டனர். எமக்கு வேண்டும் தனி வீடுகள், 37000 ஆயிரம் வீடுகளுக்கு உறுதிபத்திரம் வழங்கு, தோட்ட தொழிலாளர் இந்த நாட்டின் பிரஜைகள் என்றும் அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும், எமது நில உரிமையை உடனடியாக பெற்று தாருங்கள், பழமையான வீட்டு வாழக்கை போதும் போன்ற  வாசகங்கள் எழுதிய எதிர்ப்பு பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் 1987 ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றில் கையொப்பங்கள் திரட்டுவதற்கு  நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திலும் மற்றும், அஞ்சல் அலுவலகத்திற்கும் முன்பாகவும் அதற்கான நடவடிக்கைகளும்…

Read More

க.கிஷாந்தன்) புஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05.11.2022) அதிகாலை ‘எரிபொருள் கொல்கலன்’ வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.பி. துசிந்த (வயது – 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கம்பளை – புஸ்ஸலாவ எல்பொட தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு தேவையான 6600 லீற்றர் டீசலை வழங்கிவிட்டு, கம்பளை நோக்கி திரும்பும் வழியிலேயே அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பௌசரில் எஞ்சியிருந்த டீசல் வெளியேறி பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பௌசருக்குள் சாரதியும், உதவியாளரும் இருந்துள்ளனர். சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால், வீதியல் ஏற்பட்ட வழுக்கல் தன்மையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த பௌசரில் 13200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம்…

Read More

புதிய வகை கொவிட் வைரஸ் திரிபு 110 நாடுகளில் பரவியுள்ளது. BA – 4 BA – 5 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ் திரிபு தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொவிட் வைரஸ் திரிபுகளை விட புதிய வகை திரிபுகள் வீரியம் மிக்கவையென உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவை வேகமாக பரவும் தன்மை கொண்டவை. இதனால் உலக சுகாதாரம் பாரிய சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய கொவிட் வைரஸ் திரிபுகள் சமூக மட்டத்தில் பரவும் பட்சத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 வீதத்தால் அதிகரிக்கலாமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார வலயத்தில் 50 வீதமான பகுதியில் புதிய வகை கொவிட் வைரஸ் திரிபுகள் பரவியுள்ளன. இதனால் கொவிட் மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 228 நாடுகளிலிருந்து 7 இலட்சத்து 30 ஆயிரம்…

Read More

நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் ,3000 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாக போக்குவரத்து, கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். மேலும், பெரும்பாலான வயோதிபர்கள் கீழே விழுவதனூடாக விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர் என்று சுகாதார அமைச்சின் இளைஞர், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பிரிவின் பிரதான விசேட வைத்திய நிபுணர் ஷிரோமி மதுவகே கூறியுள்ளார்.

Read More

பாக்கிஸ்தானில் நடைபெறும் 3 ஆவது சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து 15 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சென்றடைந்துள்ளனர். கடந்த கடந்த 27 ஆம் திகதி பயணமான இந்த போட்டியாளர்களில் வவுனியாவை சேர்ந்த செல்வி டிலக்சினி கந்தசாமியும் இடம்பெற்றுள்ளார். தந்தையை இழந்த நிலையில் பெரும் கஷ்டத்திற்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியின் காரணமாக இந்த வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஜப்பானில் 150 வருடங்களின் பின்னர் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1875ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பானின் வெப்பநிலை 35 பாகை செல்சியஸை தாண்டியுள்ளது. இசேசாகி நகரின் வெப்பநிலை 40 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரித்துள்ளதால் குளிரூட்டி போன்ற மின்சார உபகரணங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதில் தடைகள் காணப்படுவதாக ஜப்பான் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதனால் தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து வைக்குமாகு ஜப்பான் அரசாங்கம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Read More

நாட்டில் அனைத்து தபால் அலுவலகங்களும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மாத்திரம் திறந்திருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக மாத்திரம் அரச அலுவலகங்களை திறப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. தற்போது நிலவும் காகித தட்டுப்பாடு காரணமாக தபால் சேவைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் கடிதங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. தபால் சேவைக்கான முத்திரைகள் மற்றும் கடித உறைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளக கடித சேவைக்காக கடதாசி பயன்படுத்துவதற்கு பதிலாக மின் அஞ்சலை பயன்படுத்துவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தபால் மா அதிபர் குறிப்பிட்டார். இதேவேளை சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட கொடுப்பனவுகள், சர்வதேச தபால் மூலம் பல்வேறு பொருட்கள் கிடைப்பதன் காரணமாகவும்m தபால் பொருட்களை விநியோகிக்க நேர்ந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

பதிவாளர் நாயக திணைக்களம் எதிர்வரும் 10 தினங்களில் பிறப்புஇ இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய இருதினங்கள் மாத்திரம் விநியோகிக்கும். இதுதொடர்பாக பதிவாளர் நாயக திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,எதிர்வரும் 10 தினங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய இருதினங்கள் மாத்திரம் விநியோகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த இரண்டு தினங்களில் மாத்திரம் காலை 8.30லிருந்து மாலை 4.00மணி வரை இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். சகல காணி பதிவாளர் சேவைகளும் அந்த இரண்டு தினங்களுக்கு மாத்திரம் செயற்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பத்தரமுல்லை, சுஹுருபாயவிலுள்ள கிளை, குருணாகல், கண்டி, மாத்தறை குடிவரவு – குடியகல்வு திணைக்கள கிளை அமைந்துள்ள பிரதேச செயலக அலுவலகங்களில், மாவட்ட பதிவாளர் பிரிவு வாரத்தின் 5 நாட்களும் இயங்குமெனவும், அவற்றில் வழமை போன்று குறித்த சேவைகளை பெற முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது

Read More