Author: Thana
அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 31 வயதான குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி இன்று (23) மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார். அவர் மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையிவல் அவர் இதுவரை குற்றங்களை ஒப்புக்கொள்வில்லை.
முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறக்கோட்டையில் குறித்த அதிகாரிகளால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 5 கிராம் 560 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய இராஜகிரிய நாவல வீதியைச் சேர்ந்தவராவார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, தலங்கம, கடுவெல, கிராண்ட்பாஸ், கோட்டை மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 5 திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகநபர் இன்று (23) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 20 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கவுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கையில் மருத்துவ சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது. President’s Media Division
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல்நிலை,தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 பெப்ரவரி 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்ட கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. கடல் நிலை: மன்னாரிலிருந்துபுத்தளம் ஊடாககொழும்பு வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டைவரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளும் அவ்வப்போதுஓரளவுகொந்தளிப்பாகக் காணப்படும்.
ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் பசறை, மகதோவ தோட்டம் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் வேலவனே உமையவளின் இளமகனே உலகினையே ஆட்கொள்ளும் சிவனார் மைந்தா காலமெல்லாம் அள்ளிவரும் தீமைகளை அகற்றிவிட அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய் மலை சூழ்ந்த நன்னிலத்தில் காட்சிதரும் சிவன் மகனே எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய் சிவனார் மைந்தா துன்பமென்றும் அண்டாது, தீமைகள் தொடராது தடுத்துவிட அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய் மயிலேறி உலகளந்த மாமணியே உமைமகனே மாற்றமில்லா நல்வாழ்வை எமக்கென்றும் அருளுகின்ற சிவனார் மைந்தா வெற்றிகளைத் தந்தெம்மை உயர்நிலைக்கு விட்டுவிட அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய் வனப்புமிகு சூழலிலே வந்தமர்ந்த பேரருளே வழுவில்லா வாழ்வுக்கு வலுவேற்றும் சிவனார் மைந்தா வீழும் நிலை தடுத்தெம்மை கைதூக்கி விட்டுவிட அருளளித்துக் காத்திடுவாய் பசறையிலே உறைகின்ற கதிர்வேலா உடனிருப்பாய் வேல்தாங்கி நின்றிருந்து அருள் வழங்கும் மால்மருகா வேதனைகள் நெருங்காது காத்தருளும் சிவனார் மைந்தா…
பண்டாரவளை – மல்வத்த தோட்டப் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்து; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி. .
பண்டாரவளை – மல்வத்த தோட்டப் பகுதியில் வேலையைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது . இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் 19 பெண்களும் , 3 ஆண்களும் அடங்குகின்றனர் . இவர்கள் அனைவரும் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதோடு 7 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த லொறியில் செஞ்சேமிஸ், நெளுவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் பண்டாரவளை ஐஸ்லேபி பகுதிக்கு தொழிலுக்கு சென்று வீடு திரும்புகையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியின் தடுப்பு இயங்காமையே இவ்விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
பண்டாரவளை – மல்வத்த தோட்டப் பகுதியில் வேலையைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது. https://youtu.be/mq32hlIYl6k இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் 19 பெண்களும் , 3 ஆண்களும் அடங்குகின்றனர் . அவர்கள் பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . தடுப்பு தொகுதி செயற்படாமல் போனமையினால் குறித்த லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ராமு தனராஜா
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய விசா விநியோக அலுவலகத்தில் மடிக்கணினி மற்றும் DVR இயந்திரம் என்பவற்றை திருடியமை தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருலப்பனை மற்றும் வௌ்ளவத்தை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார். கிருலப்பனை பகுதியிலுள்ள ஓடையொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 63 வயதான பெண்ணொருவரும் அடங்குகின்றார். தும்முல்ல பகுதியிலுள்ள இந்திய விசா அலுவலக்திற்குள் கடந்த 14ஆம் திகதி இரவு புகுந்து அங்கிருந்து மடிக்கணினி மற்றும் DVR இயந்திரம் என்பவற்றை திருடிய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தல பிரதேசத்தில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் 3.2 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கம் தொடர்பில் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.